Thursday, November 3, 2016

கலைந்து போன மேகங்கள்



எழுத்தாளர் ஸ்ரீகலா அவர்களின் பின்னூட்டம்

முதலில் கதையை வெற்றிகரமாக முடிததற்கு என்னுடைய வாழ்த்துக்கள்... அருமையான, மென்மையான, மிதமான காதல் கதை... ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த கதை நாயகனின் அறிமுகத்திற்குப் பின் அப்படியே என்னை உள்வாங்கி கொண்டது... என்ன ஒரு பிடிவாதம் அவனிடம்... காதல் இருக்கும் அதே சமயம் அவளிடம் அவன் கோபப்படும் இடமும் அழகு... உரிமை உள்ளவர்களிடம் மட்டுமே கோபம் வரும்... அந்த உரிமை உணர்வு தான் அவனை அப்படி பேச வைக்குது... முதல் முறையா நாயகனின் கோபத்தை ரசித்தேன்... இல்லை என்றால் சில கதைகளில் காரணமே இல்லாமல் சந்தேகப்படும் கோபப்படும் நாயகனை கண்டு நடுமண்டையில் நச்சு என்று ஒரு கொட்டு வைக்கணும்ன்னு தோணும்... ஏன்னா காதல் வந்துவிட்ட பிறகு எதற்கு சந்தேகம், கோபம் எல்லாம்... ஆனால் நரேன் கோபம், பிடிவாதம் ரசிக்கும்படியாய் இருந்தது சூப்பர்...

நேஹா இன்றைய இளம் பெண்களின் பிரதிபலிப்பு... தடுமாறும் மனதை சரியான நேரத்தில் கட்டுக்குள் கொண்டு வந்து அதில் இருந்து மீள்வதே அவளை நிமிர்ந்து பார்க்க செய்கிறது... நிறைய பேருக்கு இந்த தன்மை இல்லாதது தான் நிறைய காதல் தோல்விக்கு வித்திடுகிறது... அவளது மனத்தயக்கம் அவனின் பிடிவாதம் முன் உடைவது அருமை... காதலுக்கு அத்தகைய சக்தி உண்டு போலும்... அவன் அவள் விருப்பத்திற்கு இறங்கி வர, அவள் அவன் விருப்பத்திற்கு இறங்கி வர அங்கேயே ஒருவித புரிதல் இருவரிடையே ஆரம்பமாகி விட்டது... இனி அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே என்று தோன்றியது...

நரேன் அவளது அப்பாவிடம் தொழிலை பற்றி விளக்கும் இடம் சான்சே இல்லைப்பா... என்ன ஒரு தன்னம்பிக்கை, கம்பீரம், ஆளுமை அவனின் ஒவ்வொரு வார்த்தையில் இருந்தது... அந்த இடத்தில் நரேன் என் மனசில் பசை போட்டு ஒட்டிட்டான்... ரொமான்சில் கவுக்காதவன் இதில் என்னை மொத்தமாய் கவுத்திட்டான்...

கதையில் நிறைய விசயங்கள் மனதை கவரும் படி இருந்தது... அதுவும் நம்முடைய வாழ்க்கையோடு ஒப்பிடும் படி இருந்தது தான் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.... நரேனின் நிறைய குணங்கள் என் கணவரிடம் இன்றும் நான் காண்பது... அதனால் தான் கதையை ரொம்பவும் உள் வாங்கி படித்தேன் என்றே சொல்லலாம்... நேற்று இரவு முழுவதும் உறங்காமல் உங்க கதை தான் படித்து முடித்தேன்... சூப்பர்... சூப்பர்...

அப்புறம் ஒரு விசயம் சொல்வேன் கோபப்பட கூடாது... உங்க கதையை படித்ததும் எனக்கும் இது போல் மென்மையான காதல் கதை எழுத வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது... இப்போ எழுதி கொண்டு இருக்கும் கதையை இப்படி தான் எழுத நினைத்து இருக்கிறேன்... எப்படி வருதுன்னு தெரியலை பார்க்கலாம்... இதமாய் வருடி செல்கின்ற தென்றல் போல் இருந்தது உங்க கதை... அடுத்த கதை இதை விட சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்...

உங்க முதல் கதை படிக்க ஆவலாய் இருக்கிறேன்... லிங்க் இன்னும் இருக்கா....?

அன்புடன்
ஸ்ரீகலா.

No comments:

Post a Comment