Monday, November 28, 2016

தோழி ஸ்ரீமதி கோபாலன் அவர்களின் விமர்சனம்

யாரைக் கேட்டது இதயம் இதை நாவல் என்பதை விட பல சமூகப் பிரச்சனைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை என்றே கொள்ளலாம் .....ஊடகம் என்பது எந்த அளவுக்கு வலிமையானது என்பதும் ....ஊடகவியலாளர்கள் பொறுப்பு அதன் தர்மம் பற்றியும் சுமந்த் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சொல்லி இருப்பது பாராட்டுக்கு உரியது .....கதாநாயகி மூலம் பெண்களின் பிரச்சனைகளையும் , கல்வியின் அவசியத்தையும் , நடுத்தர வயதுப் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் ....கதைக்குள் கதையாக சொல்லி இருப்பது அழகு .....தேவராஜன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் குடும்பத் தலைவன் பாதை தவறும் பொழுது .....அவனை மட்டும் அல்லாமல் அவனை சார்ந்து இருக்கும் குடும்பமே எந்த அளவுக்கு மன வேதனைக்கு ஆளாகிறார்கள் என்று சொல்லி இருப்பது ....இது போன்ற நிகழ்வுகளின் மறுபக்கத்தயும் காட்டுகிறார் ......அரசியல் நிகழ்வுகள் பற்றி எழுதி இருப்பதற்கு .....துணிச்சலான அவரின் எழுத்தை பாராட்ட வார்த்தை இல்லை .....ஆட்சியாளராக வரும் விவேக் சிறிது நேரமே வந்தாலும் .....அவரின் மரணம் கதையின் முடிவு வரை மனதை விட்டு நீங்கவில்லை ......இவ்வளவு அழுத்தமான கதைக்கு இடையிலும் .....மெல்லிய காதல் இழையோட .....தற்கால இளைய தலைமுறைக்கு தனிமனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதையும் அழுத்தமாக சொல்லி இருக்கிறார்....ஆக மொத்தம் அற்புதமான நாவலைப் படைத்த ஹமீதாவுக்கு வாழ்த்துக்கள் ...

No comments:

Post a Comment