Thursday, November 3, 2016

கலைந்து போன மேகங்கள்

எழுத்தாளர் அபிபாலா அவர்களின் பின்னூட்டம்


ஹமிதா மேடம்....ஃபர்ஸ்ட் உங்க நாவல் 'கலைந்து போன மேகங்களு'க்காக என் மனமார்ந்த பாராட்டுக்கள்...ஸ்வீட் நேஹாவோட லைஃபை நேரில் பார்த்து அனுபவித்த ஃபீல் எனக்கு...!சூப்பர்ப் மேடம்....!
 
Characterisation அவ்வளவு அருமை...! இந்த மாதிரி ஒரு பொண்ணு எனக்கு இல்லையேன்னு நேஹா ஏங்க வெச்சுட்டா..மாடர்ன் வேர்ல்ட் ல.... தெளிவான சிந்தனையோட தன் முழுக் காதலும் வருங்காலக் கணவனுக்கு மட்டுமே ன்னு சொல்றதை ......படிக்கவே ஆசையா இருந்தது...அப்படிப்பட்ட மகளை சரியா புரிஞ்சுகிட்டு....அவ ஆசையை நிறைவேற்றி வைக்கும் பெற்றோர்...
 
நரேன்.....கதையின் நாயகன்.....நேஹாவை பார்த்ததும் நேசிக்கத் துவங்கும் காதல் தீவிரவாதி...!!!ராகவேந்தரிடம் தன்னம்பிக்கையுடன் தனது எதிர்கால திட்டங்கள் ...ஆசை...கனவு.. பற்றி கண்கள் மின்ன பேசும் ஒரு இடம் போதும்... இவன் சாதிக்கப் பிறந்தவன் என்று புரிந்து கொள்ள...! இருவரும் வாழ்வில் இணைந்தால்....வானம் தொட்டு விடும் தூரம் தான் இவர்களுக்கு....!!!நேஹா மனதை திறப்பாளா...? அவள் நேசம் நரேனுக்கு கிட்டியதா...?படித்துப் பாருங்க.

ஹமிதா மேடம்... இந்தக் கதையில் ஒரு இடத்தில் கூட எதிர்மறையான எண்ணங்களை எழுதவே இல்லை... இருவரின் பெற்றோர்...யோகன்...ஜோ....சந்தீப்.....அவன் மனைவி... அஷ்வின்...நிஷாந்த்...நம்ரதா.....என ஒரு கேரக்டர் கூட நெகட்டிவ் ஆக இல்லை...Your beautiful story is full of positive energy.... Hameeda madam...!!
இந்த நாவலில்ஒரு குறை கூட கண்டு பிடிக்க முடியவில்லை என்பது மட்டுமே எனக்கு குறையாகத் தெரிகிறது....!!! படித்தால் தான்....நான் மிகையாக எதுவுமே சொல்லலை ன்னு புரியும்...மிஸ் பண்ணாம கதையை படித்து உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்க... ஹமிதா மேடம்........உங்களுக்கு வாழ்த்துக்களோடு நன்றிகளும்....!!!!

2 comments:

  1. Hai haneedha
    I read ur yarai ketathu ithayam story in lady's wings . Pls give full link.today only I know ur blog by saviselva

    ReplyDelete
  2. Hai haneedha
    I read ur yarai ketathu ithayam story in lady's wings . Pls give full link.today only I know ur blog by saviselva

    ReplyDelete