Friday, November 4, 2016

கலைந்து போன மேகங்கள்...



எழுத்தாளர் சுதா ரவி அவர்களின் விமர்சனம்...




அந்த அந்த பருவங்களில் உப்பு நீர் ஆவியாகி மேகமாக சூல் கொண்டு கடின பயணத்தை மேற்கொண்டு எந்த இடத்தில் தேவையோ அந்த இடத்தை நோக்கி பயணப்படும் போது ஒரு சில மேகங்கள் நடுவில் ஏற்படும் சிறு தடைகளில் குறைபிரசவமாக மழை என்னும் தன் குழந்தையை பெற்று விடுகின்றன. குறைபிரசவத்தில் பிறந்த சில குழந்தைகள் தப்பி பிழைத்தாலும் சில குழந்தைகள் மறித்து போய் விடுகின்றன.

அது போல தான் வாழ்க்கை படகில் பயணிக்கும் போது பருவ வயதில் வரும் ஈர்ப்பை காதல் என்று நம்பி ஏமாந்து போய் தன் வாழ்க்கையை தொலைத்து விடுகின்றன சில இள நெஞ்சங்கள்.. காதலுக்கும் , ஈர்ப்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணர்ந்து தன்னை தானே வழிநடத்தி கொள்ள தெரிகின்ற விதத்தில் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பதை சொல்லும் கதை கலைந்து போன மேகங்கள்


ராகவேந்திரன், மாலினி தம்பதியின் செல்ல மகள் நேஹா . அம்மா , அப்பாவின் மனம் புரிந்து நடந்து கொள்ளும் பெண். இயற்பியல் இளங்கலை படிக்கும் மாணவி. மேற்கொண்டு நிறைய படித்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவள். கிரிக்கெட் என்றால் சாப்பாடு தூக்கம் அனைத்தையும் மறந்து பார்ப்பாள், அதிலும் தன்னுடைய ஆதர்ச நாயகன் சந்தீப் ரதோட் விளையாடுகிறான் என்றால் கேட்கவே வேண்டாம்.

சந்தீப் ரதோட் கிரிக்கெட் விளையாட்டில் உச்சத்தில் இருப்பவன். பார்ப்பதற்கும் ஒரு சினிமா ஹீரோ போன்ற தோற்றத்தை உடையவன் அதனால் அவனுக்கு பெண் விசிறிகள் அதிகம். நேஹா சந்தீப் விளையாடுவதை பற்றி அடிக்கடி புகழ்ந்து தள்ளுவதை பார்த்து அவன் நன்றாக விளையாடாத அன்று அவள் தோழிகள் அவளை ஒட்டி எடுப்பார்கள்.

உலக கோப்பை போட்டியில் தன் காலில் ஏற்ப்பட்ட வலியின் காரணமாக சரியாக விளையாடாமல் மொத்தமாக இந்திய அணி தோர்த்து போய் விடுகிறது. அது நாள் வரை தூக்கி தலையில் வைத்து கொண்டாடிய ரசிகர்கள் அவனை தூக்கி வீசிவிடுகின்றனர். இதை எல்லாம் பார்த்து அவன் மனம் உடைந்த நிலையில் இருக்க, நேஹாவோ அவன் மனதை சமன் படுத்தும் வகையில் ஒரு கடிதத்தை எழுதி அனுப்புகிறாள்.

அந்த கடிதம் சந்தீபிற்கு கிடைத்து அவன் புண்பட்ட நெஞ்சை ஆற்றும் மருந்தாகிறது. அவளின் கடிதத்திற்கு நன்றி தெரிவித்து அவன் ஒரு சமயம் சென்னை வரும் போது அவளுடைய பெற்றோருடன் நேரே சந்திக்கிறான். அதுவரை டிவியில் அவன் விளையாட்டை கண்டுகளித்தவளுக்கு அவனை நேரே பார்த்ததும் மனம் சற்று தடுமாற தொடங்குகிறது.

தன் மனம் போகும் போக்கை உணர்ந்தவளுக்கு அது தவறு என்று உணர்ந்தாலும் அந்த சுழலில் சிறுது காலம் சிக்கித் தவிக்கிறாள். பின்னர் ஒருவாறு அதிலிருந்து தன் மனதை விடுவித்து கொள்கிறாள். என்னுடைய காதல் என் வருங்கால கணவனுக்கு மட்டும் தான் என்பதில் தெளிவாகிறாள்.( அப்படி தெளிவாகிட எல்லாம் நாங்க விட மாட்டோம் இல்ல...குழப்ப ஒரு ஆளை உள்ள இறக்குவோம்ன்னு சொல்லி இறக்கினாங்க பாருங்க ஷாஹி..)

சந்தீப் சுழலில் இருந்து தப்பித்து படிப்பில் முழுகவனம் எடுத்து படிக்க ஆரம்பிக்கிறாள். Msc படித்துக் கொண்டிருக்கும் போது நேஹாவின் பெரியப்பா பெண் ஜோதிகா தன் தோழனின் அண்ணனையே விரும்பி திருமணம் செய்ய இருக்கிறாள். நரேன் ஜோதிகாவின் தோழன். ஜெயச்சந்திரன் , சுசீலா தம்பதியரின் இரெண்டாவது மகன்.

ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் முடித்து விட்டு மேற்படிப்பு us இல் படித்துக் கொண்டிருக்கிறான். சுசீலாவிற்கு நேஹாவை நரேனுக்கு பார்க்கும் எண்ணம். அதை அவனிடம் சொல்லி உனக்கு பிடித்து இருந்தால் மேற்கொண்டு பேசலாம் என்று சொல்லி விடுகிறார்...

நரேன் ஒரு பிடிவாதக்காரன். எந்த இடையூறு வந்தாலும் தனக்கு வேண்டியதை சாதித்துக் கொல்லும் சாமர்த்தியகாரன். ( இந்த சாமர்த்தியகாரனையும் தலையால தண்ணி குடிக்க வச்சாளே நேஹா..) பார்த்த அந்த நொடியில் இருந்து அவளை நரேனுக்கு பிடித்து விட அவளிடம் சென்று பேசுகிறான். அவளோ ஏற்கனவே வந்த ஈர்பால் மனம் கலங்கியதை எண்ணி இனி எந்த ஈர்ப்புக்கும் தன் வாழ்வில் இடமில்லை என்று ஒதுங்கி போகிறாள். (அப்படி எல்லாம் ஒதுங்க விட்டுடுவானா என்ன நரேன்....சரியான பரப்ப்ஸ்) அடுத்த நாளே அவளுடன் வெளியே செல்ல ஏற்பாடு செய்து தன் அண்ணனின் ஆபீஸ்சிற்கு அழைத்து சென்று தன் மனதில் உள்ளதை வெளிபடுத்துகிறான். அவளோ மறுத்து விட எப்படியாவது அவள் மனதை வெல்ல வேண்டும் என்று உறதி மொழி எடுத்துக் கொள்கிறான். (அதோட எல்லாத்தையும் விட லிப்லாக் பண்ணாம விட்டுட்டோமேன்னு அவன் படுற வருத்தம் இருக்கே...அய்யய்யோ )

அதிலும் இந்த டயலாக் அந்த காதலும் எனக்கு தான் அந்த துடிக்கும் உதடுகளும் எனக்கே எனக்கு தான் “( சபாஷ் ஷாஹி பின்னிட்டீங்க )

அதன் பின்னர் யோகன் ஜோ திருமணம் சடங்குகளில் அவள் அவனை கண்டு முகம் திருப்ப அதில் கடுப்பாகி அவளை கண்டுகொள்ளாமல் விலகி செல்கிறான். நரேன் ஊருக்கு திரும்பும் நாளும் அவளிடம் இருந்து ஒரு sms மட்டுமாவது கொடுப்பாளா என்று எதிர்பார்த்து ஏமாந்து ஊருக்கு சென்று விடுகிறான். அவன் சென்ற பின்னே தன்னுள் அவன் மேல் எழுந்த காதலை உணருகிறாள். இருவரும் மனதிற்குள்ளேயே மருகி கொண்டு காலத்தை தள்ள, இருவரின் வேதனையையும் கண்டு விதி நேஹாவின் அப்பாவின் மூலம் அவர்களை ஒன்று சேர்க்க முயலுகிறது...

நேஹாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பிக்க மாலினியோ நரேனை பற்றி சொல்லுகிறார் . ஆனால் பணக்கார வீட்டு பிள்ளையான அவனை பற்றி அவருக்கு அவன் நம்பிக்கை வர மறுக்கிறது. நேஹா தனக்கு மாப்பிள்ளை பார்ப்பதை அறிந்ததும் தனக்கு நரேன் மேல் இருக்கும் காதலை முழமையாக உணர்ந்து அவனிடம் தன்னை ஒப்புவிக்க நினைத்து அவனுக்கு போன் செய்கிறாள். ஆனால் அவனோ??

நரேன் அப்படி என்ன தான் சொன்னான்? நேஹா எவ்வாறு தன் காதலை அவனுக்கு உணர்த்தினாள்? நரேன் ராகேவேந்தரிடம் தன்னை எப்படி நிரூபித்தான்? அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆனதா? சந்தீப் ரதோட் என்ன ஆனான்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் அறிய வேண்டுமானால் படித்து தெரிந்து கொள்ளுங்கள்....

இந்த கதையில் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கிறதப்பா........இதுவே நிறைய பக்கங்கள் வந்து விட்டது...அதிலும் அந்த கிட்சேன் ரொமான்ஸ்சுக்கு ஒரு தத்துவம் சொன்னீங்களேபா....நாங்கள் உங்களை கலாய்த்தாலும் இன்றைய குடும்பங்களில் குறைந்து போன ஒன்றை மிக சாதரணமாக சுட்டிகாட்டிவிட்டீர்கள்....

ஆண் குழந்தைகள் வளர்ப்பிலும் கவனம் வைக்க வேண்டும் என்பதை மிக அழகாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்து இருக்குறீர்கள் ......பெண்குழந்தைகளுக்கும் சரியான வழிகாட்டுதல் இருந்தால் தன் வாழ்க்கையை தெளிவான நீரோடையாக அவர்களால் கொண்டு செல்ல இயலும் என்பதற்கு நேஹா சாட்சி...........சந்தீப் என்ற மேகத்தை கலைத்து நரேன் என்கிற சுனாமி நேஹாவை ஆட்கொண்ட கவிதையான கதையை படியுங்கள் தோழிகளே........!

No comments:

Post a Comment