Tuesday, September 25, 2018

அன்பின் அடைமழைக் காலம் - ஹமீதா (மின்னூல் வடிவம்)




வாசக நெஞ்சங்களுக்கு,

அன்பு வணக்கம்.

நலம்தானே எனதருமை நட்புகளே!

முதல் கதை - எனக்குள்ளே எங்கோ ஒரு ஓரமாய் ஒளிந்து கொண்டிருந்த கதைசொல்லியை எனக்கே அறிமுகப்படுத்திய கதை.

'அன்பின் அடைமழைக் காலம்' - உங்கள் அனைவரின் அன்பெனும் அடைமழையில் எனை நனைத்துக் கொள்ளும் வாய்ப்பை, எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த கதை.

இன்றளவிலும் அவ்வப்போது இக்கதைக்கான பின்னூட்டங்கள் வந்தவண்ணமே இருப்பது எனக்கே சற்று ஆச்சர்யம் தான்!

இப்போது அமேசான் கிண்டிலில்...

கீழ்க்கண்ட லிங்கை சொடுக்கி வாசித்து மகிழுங்கள்!

அன்புடன்
S. ஹமீதா.

https://www.amazon.in/dp/B07HM85158


 

Saturday, September 8, 2018

எழுத்தாளர் மது ஹனி அவர்களின் விமர்சனம்

உந்தன் அலாதி அன்பினில் - ஹமீதா

எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை...
சிறுவயதில் இருந்தே கடல் என்றால் கொள்ளைப் பிரியம் எனக்கு. கடல் அது தரும் உணர்வுகள் அதை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. ஏனோ கடலைச் சார்ந்த எல்லாமே பிடித்தமாய் இருக்கும். முக்கியமாகக் கப்பல்.
உலகம் முழுவதும் கப்பலில் சுற்றி வர வேண்டும் என்று எனக்கு அப்படியொரு ஆசை. ஜலதீபம், கடல்புறா இவற்றை எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது.

இப்போது உந்தன் அலாதி அன்பினிலும்...... இனி எத்தனை முறை படித்துக் கொண்டிருக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது.

ஹமீதாவின் கதைகளில் நான் வாசித்த இல்லை இல்லை நான் பயணித்த முதல் கதை.

இக்கதையின் நாயகன் நாயகி எல்லாம் ஹமீதா தான். அதில் ஐயமே இல்லை.
ஒரு கணம் ஹமீதா மரைன் என்ஜினியரா. சரக்குக் கப்பலில் பயணித்து அவரது சொந்த அனுபவங்களை எழுதியிருக்கிறாரோ என்று எண்ணும் படி அப்படி ஒரு பெர்பெக்ஷன்.

இப்படிக் கதைகளைத் தான் நான் தமிழில் ஆவலாக தேடிக் கொண்டிருந்தேன். உங்கள் மற்ற கதைகளையும் வாசிக்க வேண்டும். ஆனாலும் முதன்முதலில் இக்கதையை வாசித்தது எனக்கு பெரு மகிழ்ச்சியே.

கப்பல் பற்றியக் கதை என்றதுமே ஆவலாக இருந்த எனக்கு உங்கள் டீசரில் நாயகியின் பெயர் மது என்று பார்த்ததும் அந்த ஆவல் பன்மடங்காகப் பெருகியது.

கதை என்ன என்றால் ஒரு சரக்குக் கப்பல் மரைன் என்ஜினீயரின் வாழ்க்கையும் முக்கிய தருணங்களும்.

கதையில் நம்மோடு பயணிக்கும் கதாபாத்திரங்கள்.

முதலில் நட்புடன்....

கீர்த்தி.... இது என்ன coincidence என்று அப்படி ஓர் ஆச்சரியம். (Keerthana RajaKumar இந்தக் கதையை கண்டிப்பா படி...இதிலும் மதுவோட பெஸ்ட் பிரண்ட் கீர்த்தி :) )

ஐஸ்வர்யா....என்னைக் கவர்ந்த கதாபாத்திரம். மிகவும் இயல்பான நல்லவள். A kind of friend who s a blessing.

ஸ்வேதா - சதீஷ் .... ஒரு கடல் காதலனையும் அவன் ராணியையும் இணைத்த பெருமை இவர்களையே சாரும்.

நந்து - வாய்விட்டுச் சொல்லாமல் போனாலும் அறிவேனடா ஏனெனில் நான் உன் நண்பன் என்பதன் இலக்கணமாய்...

என்றென்றும் உறவுடன்...

சோபிதா மற்றும் அவள் நட்புக்கள்..... இன்றைய டீன்ஏஜ் பிள்ளைகள் அவர்கள் மனநிலை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் எல்லாம் பற்றி அறிவுரை போல இல்லாமல் கதையின் போக்கிலேயே அழகாய் சொல்லி அதை அணுகும் முறையையும் விளக்கி இருப்பது கதைக்கு ஒரு கிரீடம் போல.

பூரணி இன்றைய அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத் தலைவியை அப்படியே பிரதிபலிக்கிறார்.

சுந்தரேசன், சண்முகம், துளசி டீச்சர், தாத்தா, லீலா டீச்சர், நிர்மலா ஆன்டி, வரதராஜன், ஐஸ்வர்யாவின் தந்தை ஒரே ஒரு காட்சியில் மட்டுமே வந்து போன பிரபுவின் அப்பா அவர் ஏற்படுத்திய மாபெரும் தாக்கம்.
ஒவ்வொரு பாத்திரமும் அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தொடு. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எத்தனையோ நபர்கள் ஒவ்வொரு விதத்தில் முக்கியமானவர்களே என்பதை உணர்த்துவதாய்.

கடலோடு காதலுடன்...

தமிழ்ச்செல்வன்

தங்களது பேஷனே தங்கள் கரீயாராக அமையப்பெற்றவர்கள் மிகக் குறைவு. அந்த வகையில் இவன் கொடுத்து வைத்தவன். ஒவ்வொரு பணியிலும் உள்ள சவால்கள், கடினங்கள் அதில் இருப்போருக்குத் தான் தெரியும். சரக்குக் கப்பல், அதன் கட்டமைப்பு, அதன் செயல்பாடு பற்றி இவ்வளவு விரிவாக அதே சமயம் தெளிவாக புரியும் படி எங்களுக்கு எடுத்துச் சொல்லி எங்களையும் தமிழோடு பயணிக்க வைத்ததற்கு நன்றி ஹமீதா.

தமிழ்ச்செல்வன்....உலகத்தைப் பார்த்தவன், மிகக் கடினமான சூழல்களை சந்தித்தவன், பலதரப்பட்ட மனிதர்களோடு பழகியவன். அந்த அனுபவம் தந்த பக்குவமும் அணுகுமுறையும் அவனது தங்கை விஷயத்திலும் சரி அவனது திருமண விஷயத்திலும் சரி அவனுக்கு வெகுவாக கைகொடுத்தது.
ஈர்ப்பு காதல் இரண்டையும் அவன் உணரும் இடம் மிக இயல்பாக சொல்லியிருந்தது என்னை மிகவும் கவர்ந்தது.

"And a sailors wife is called a queen" கதை முழுக்க ஒவ்வொரு இடத்திலும் அவனது சிந்தனைகளும் செயல்களும் முத்துக்களாய் ஒளிர்ந்தாலும் இந்த இடத்தில் வைரமாய் மின்னுகிறான்.

ஒரு நல்ல மகனாக, சகோதரனாக, நண்பனாக, சக ஊழியனாக, அவனவளின் சோல்மேட்டாக அவனது பாத்திரப்படைப்பு மிகையில்லா யதார்ததமான நல்ல மனிதனை பிரதிபலிக்கிறது.

தமிழ்....your passion to sail and love for sea , bcoz u r a sailor, I m little jealous abt that :)

மதுரவல்லி ...The real queen

மது என்று நிறைய கதைகளில் நாயகியின் பெயராக அல்லது பெயர்ச்சுருக்கமாக இருக்கும். ஆனால் இது வரை அந்த மதுக்கள் இந்த மதுவிற்கு அன்னியமாகவே இருந்து வந்தனர்.

முதல்முறை தங்களின் மதுரவல்லி (எ) மதுவில் எனது எண்ணங்களின் பிரதிபலிப்பைக் கண்டு எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. ஒரு சில இடங்களில் இந்த மதுவைப் போல நீயும் இருக்க வேண்டும் மது என்று என்னிடம் நானே சொல்லிக் கொள்ளவும் செய்தேன்.

"எதுக்கு லவ் பண்ண என்னை? தமிழ் அவளிடம் கேட்க அவளது பதில்.

ஜஸ்ட் பார் தி பர்சன் யு ஆர்"

இதுக்கு மேல வேறெதுவும் தேவையில்லை அவள் குயீன் என்பதைச் சொல்ல.

Madhu @ Madhuravalli ....I admire u and am really happy for the way you are.

ஒரு Real piece of fiction எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் ஹமீதவின் உந்தன் அலாதி அன்பினில்.

தனிப்பட்ட முறையில் எனக்கு இது கதை என்பதைத் தாண்டி கப்பலில் பயணித்த ஓர் அனுபவமாக என் மனதின் ஆசை நிறைவேறியதாக உணர்கிறேன்.

இக்கதையை கொடுத்ததற்கு மிக்க நன்றி ஹமீதா.

(பிகு: மது பீப்பா, மது பேரல், மதுவை ராவாக அடித்து ப்ளாட் ஆவது ;) தமிழின் மது ரசித்தாளோ இல்லையோ நான் ரொம்பவே ரசித்தேன் என்ற தகவலை கடலே தொடுவானத்திடம் சற்றே சொல்வாயாக :p )

Wednesday, September 5, 2018

இந்தியாவில் புத்தகம் கிடைக்கும் இடங்கள்...







ஆன்லைனில்...
http://www.wecanshopping.com/products.php…

http://www.marinabooks.com/detailed…

https://www.udumalai.com/search.php…

noolulagam.com

நேரடி புத்தக விற்பனையாளர்கள்...

Murugan book stores, Canada

Poobalasingam Book Depot, Colombo

Karthik book stall, Mylapore

New book lands (Narmada pathipagam)

Vijaya Pathippagam, Coimbatore

Vijaya Pathippagam, Tirupur

Vijaya Pathipagam, Karur

Vijaya Pathippagam, Pollachi

Raja Book Store, Coimbatore

Cheran Towers, Coimbatore

Indhu Book house, Erode

Devathi Book Stall, Trichy

Malligai Book Centre, Madurai

Adityan Book shop, T. Nagar

Ravi Book shop, T. Nagar

Moon Book shop, Pondy Bazaar

Merlin Publication, T. Nagar

Om Muruga Book shop, Salem

Chitra devi college Book shop, Thirunelveli

AVS Book shop, Nagercoil

Eagle Book shop, Tuticorin

Maya Books, Theni

Sri Markandeya Book Gallery, Kumbakonam

Sapna Books, Coimbatore

Books & Books, Pollachi

Book Park, Karur

Bharathy Books, Pondicherry

உந்தன் அலாதி அன்பினில் - ஹமீதா (Kindle Link)

வாசக நெஞ்சங்களுக்கு,

அன்பு வணக்கம்.

நலம் தானே நட்புகளே!

வெளிநாட்டுவாழ் வாசகர்களின் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, amazon.com இல் மட்டும் 'உந்தன் அலாதி அன்பினில்' நாவல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது எனும் தகவலைப் பகிர்வதில் மிக மகிழ்ச்சியடைகிறேன்.

amazon.in இல் அக்டோபர் மாதம் மூன்றாம் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்! இந்தயாவில் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள் பற்றிய தனிப்பதிவுடன் விரைவில் வருகிறேன் அன்பர்களே!

கீழ்கண்ட லிங்க்-ஐ க்ளிக் செய்து வாசித்து மகிழுங்கள்!

https://www.amazon.com/dp/B07H38J81Q