Monday, January 15, 2018

யாரைக்கேட்டது இதயம் - தோழி லதா சேகர் அவர்களின் விமர்சனம்

ஹமிதா நான் முதன் முதலாக படித்தது உங்கள் நாவல் தொகுப்புகளில்
இந்த நாவல் தான்

யாரை கேட்டது இதயம் 😍

எங்களைப்போன்ற வெளிநாட்டு வாசிகளுக்கு நினைத்தவுடன் அம்மா வீடு போக முடியாது..சந்தோஷமோ துக்கமோ இல்லை சில நேரங்களில் எங்கே போவது என்று தெரியாமல் தவிக்கும் நேரங்களில் எப்போதும் என் கால்கள் தானாகவே
போவது சிங்கப்பூரின் நூலகங்கள் தான்..
 

அது பல நேரங்களில் தாய் மடி போன்று என்னை தாலாட்டியுள்ளது...
அப்படி கடந்த வாரத்தில் வினாடிக்கும் குறைவான நேரத்தில் என் விழிகள் சுழன்று என்னெதிரே தென்பட்டது தான்
யாரை கேட்டது இதயம்😍


ஹமிதா உங்கள் எழுத்துக்களில் முதலில் என்னை வியக்க வைத்தது உங்களின் இக்காலத்திற்கேற்ற கணினியின் பயன்பாடுகள் மட்டுமல்லாது எதற்கும் வளைந்து கொடுக்காத உங்கள் எழுத்தின் கண்ணியம் அதற்கு என்மனமார்ந்த வாழ்த்துக்கள்....

சுமந்த் நாராயண் & ஸ்ரேயா என்ன மாதிரியான பாத்திரப்படைப்புக்கள்...ஒரு மோசமான அரசியல் மற்றும் காவல் துறை சார்ந்த தகப்பனுக்கு பிறந்த பிள்ளைகள் தத்தம் தந்தையின் நடத்தைகளால் பாதிக்கப்பட்டாலும் சமூகம் பாதித்து விடக்கூடாது என்று இருவரும் போராடுவது கண்முன்னே காட்சிகளாக விரித்த
உங்களின் எழுத்தாற்றலுக்கு சபாஷ்👏

இது ஒரு நம்பிக்கையான நேர்மறையான எண்ணங்களை படிக்கின்ற அனைவருக்கும் உண்டாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை..மோசமான குடும்ப சூழலில் வளரும் பிள்ளைகள் மிக சுலபமாக தவறான பாதையில் செல்வார்கள் என்பதை உடைத்து தாயின் வளர்ப்பினாலும் தங்களின் சுய ஒழுக்கம் மற்றும் நேர்மையான செயல்பாடுகளினால் தங்களின் வாழ்க்கை மட்டுமின்றி சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாக வாழ முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமே சுமந்த்&ஸ்ரேயா

உடல்நலமில்லாமல் இருக்கும் அன்னைக்கு தாயாய் மாறும் ஸ்ரேயா நெஞ்சை விட்டு அகலவில்லை..

தனிமனித ஒழுக்கம் மற்றும் சமூகவிழிப்புணர்வை உருவாக்கும் நாவலை எழுதியதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ஹமிதா👏

சுமந்த்&ஸ்ரேயாவின் காதல் மலர்ந்த
விதமும் வீசிய மணமும் விவரிக்க வார்த்தைகளே இல்லை...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஹமிதா. ..

உங்களின் பிற நாவல்களையும் வாசிக்க மிகவும் ஆவலுடன்😊😊

No comments:

Post a Comment