Monday, January 15, 2018

கலைந்து போன மேகங்கள் - சகோ முருகேசன் அவர்களின் விமர்சனம்

சகோதரி ஹமீதாவுக்கு,

உங்களின் கலைந்து போனா மேகங்கள் நாவலை பற்றி சில வார்த்தைகள்.

உங்கள் எழுத்தில் நான் படிக்கும் முதல் நாவல் சகோதரி. நல்ல பண்பட்ட எழுத்து சகோதரி. க்ரஷ்க்கும், காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்து இந்த நாவல் இருந்தாலும், சில வாழ்க்கை பாடங்கள் சொல்லதவறவில்லை சகோதரி. வெற்றி என்பது என்ன, அதனை எப்படி கையால்வது, கூட்டு குடும்பம் நிலைக்க என்ன வழி, என்று பல பல பாடங்கள் சகோதரி. இந்த நாவலில் வரும் அனைத்து பாத்திரங்களும் அருமை. பெருமை படைப்புகள்.
ராகவேந்திரன் – மாலினி :- மகளின் மனஉணர்வு புரிந்த அப்பா, மகளுக்கு வளமான வாழ்வு முக்கியம் என கருதும் அப்பா. ஹீரோவின் இரும்பு உறுதி கண்டு அவனை இனம் கண்ட அப்பா. மகளின் குணத்துக்கு முக்கிய காரணமான அம்மா, இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு உயர்கல்வி,

வேலை, சுயமாக நிற்கும் திறன் அவசியம் என உணர்ந்த அம்மா.
ஜெயச்சந்திரன் – சுசீலா :- மகனின் தேவை உணர்ந்த அம்மா. ஒரு நல்ல தாய் நல்ல மாமியார் என நிறுபித்தவர். இந்த நாவலின் முக்கியமானவர் ஜெயச்சந்திரன் அப்பா. பிள்ளைகளை கஷ்டம் தெரியாமல் வளர்ந்தாலும், கஷ்டம் புரியாமல் வளர்க்கவில்லை. பெண் பிள்ளைகளை வளர்ப்பதை விட ஆண் பிள்ளைகளை பொறுப்பாக வளர்ப்புது சவாலானது என்று உணர்ந்து அதனை திறம்படசெய்தவர். பிள்ளைகளை பெற்ற இப்படி பெற்று கொள்ள வேணும் வளர்ந்த இப்படி வளர்க்கவேணும் என வாசகரால் புகழப்படுபவர்.
யோகேந்திரன் – ஜோதிகா :- தோழியானவள் அண்ணியாகிறாள், அண்ணியான பின்னும் தோழியாகவே இருக்கிறாள். வீட்டின் மூத்தமருமகள், ஆனால் இளையவளை மூத்தவள் போல் நடத்துகிறாள். தம்பியின் காதல் உணர்வுக்கு காவல் காக்கிறான். தம்பி மனைவியை தங்கை ஆக்கிகொள்ளும் நல்லவன். தம்பி வெற்றியை தன் வெற்றி போல் கொண்டாடும் உயர்ந்தவன்.

சந்தீப் ராத்தோட் :- ஒரு செலிபிரெட்டிஸ் எப்படி இருக்க வேண்டும் என்பதுக்கு உதராணமானவன். சாதிக்கும் போது தலையில் தூக்கிகொண்டும், தவறும் போது கீழே போட்டு மிதிக்கும் உலகவழக்கத்தை புரிந்துகொள்ள சிரமம் பட்டு பின் ஹீரோயின் கடிதம் மூலம் அமைதி கொண்டவன். விழுவது தவறல்லா, விழுந்து கிடப்பதே தவறு என நிறுபித்தவன். தன் எல்லையை உணர்ந்தவன். விழும் உயரம் அதிகரிக்க, அதிகரிக்க வலியின் தன்மையும் அதிகமாகும் என உரைந்தவன்.

நேஹா – நரேந்திரன் :- நேஹா, செண்டிமெண்ட் பார்ப்பது, வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து உடல் நலம் காப்பது, நான் என்ன புண்ணியம் செய்தேன், எனக்கு நல்லது செய்யும் இறைவா என இருந்தாலும், மாமியார் வீடு முதலில் செல்லும் போது உஷராக வலது கால் வைத்து செல்லுவாள் இந்த மாமியார் மெச்சிய மருமகள். என் காதல் முழுக்க முழுக்க என் கணவனிடம் தான் என நினைத்த பெண். எனக்கு பிடிவாதம் உண்டு, இப்போதைய பிடிவாதம் உங்களின் உடமையாக ஆவது என காதலையும் அழகாக சொன்ன மனதுக்கு மரியாதை கொடுக்கும் பெண். நரேந்திரன், தீர்க்கதரி போல் திட்டம் போட்டு, தன் திறமை, எதிர்காலம் சொல்லி பெண் கேட்கும் இந்த LLR போட்டு லைசன்ஸ் வாங்கும் இந்த ஹீரோ பையன். பெண்ணை பெற்றதால், பெண்ணை பெற்றவரின் கஷ்டம் உணர்ந்த இந்த நல்லவன். தன் வேலையை விரும்பி செய்பவருக்கு, மனம் தீயவழியில் செல்லாமல் வேறு எந்த பொழுதுப்போக்கும் தேவையில்லை என்று உரைத்தவன். அந்த காதலும் எனக்கு தான், அது சொல்லும் உதடுகளும் எனக்கு தான் என சொல்லியே அவளின் காதலில் மொத்தமாய் களவு போனவன்.

இந்த நாவலில் சில விளக்கங்கள் அருமை சகோதரி ;-
1.கூட்டு குடும்பம் நிலைப்பதுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை அருமை.
2.வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் சில நிமிடங்களில் நடத்துவிடும்.
3.புத்தி சொல்வதை எல்லா நேரங்களிலும் மனம் கேட்காது. அப்படி கேட்டால் விரைவில் சிறைபிடித்த உணர்வு வரும்.
4.க்ரஷ் என்பது எதிர்காலமில்லா உணர்வு, காதல் என்பது வாழ்வு முழுமைக்கும் வரும் உணர்வு.
5.தொழிலை பொருத்தவரை பேராசைபடு, அப்போதுதான் மேலே,மேலே போகமுடியும். இங்கே புத்தன் கொள்கை தவறு.
6.வாழ்வு நமக்கு சோதனையும், வெகுமதியும் வைத்துயிருக்கு. அது வைக்கும் சோதனையை கடந்தால் நமக்கு வெகுமதி கிடைக்கும்.
7. அந்த மேனே பியார் கியா பாடல் இடமும் சரி, பாடலும் சரி அருமை.

நம்மை கடந்து பல மேகங்கள் போகும், நமக்கு தேவையான நேரத்தில் தேவையான முடிவை, யோசித்து, நிதானத்துடன் எடுத்தால், அந்த காதலே தட்டி கொடுக்கு ஒரு வாழ்வு அமையும் என உணர்த்திய நாவலுக்கு என் வாழ்த்துகள் சகோதரி

No comments:

Post a Comment