யாரை கேட்டது இதயம்-ஹமீதா
அதிகாரத்திலும் ,அரசியலிலும் தவறான
வழியில் செல்லும் தந்தையை தட்டி கேட்கும் இரு அக்னிக்குஞ்சுகளை பற்றிய கதை.எப்போதும் மெல்லிய காதல்
கதைகளை குடும்ப பின்னணியில் சொல்லும் தோழி ஷாஹி எடுத்திருக்கும் புதிய அவதாரம் இது. தனி மனித ஒழுக்கம் என்பது எவ்வளவு முக்கியமானது,குடும்ப தலைவன் தடம் புரண்டால் அக்குடும்பம் எத்தகைய பாதிப்பிற்கு ஆளாக நேரிடும் என்பதை சுட்டி காட்டியுள்ளார்.சமூக அவலங்களை குறிப்பாக
ஆண் என்னும் அகந்தையில் பெண்ணை(மனைவியை) துச்சமாக நினைக்கும்
ஆண்களுக்கு இந்த கதை ஒரு
பாடமாக இருக்கும்.
கதையின் தலைப்பை பார்த்து ரொமான்டிக் ஸ்டோரி என்று நினைத்து விட வேண்டாம்.சுமந்த்,பயனியர் நியூஸ் ஏஜென்சி
என்ற தொலைக்காட்சி நிறுவன உரிமையாளன்.நேர்மையானவன். அவனை நமக்கு அறிமுகப்படுத்தும் காட்சிகள்,அவனை பற்றிய வர்ணனைகளுக்கு தனி விமர்சனமே எழுதலாம்.அடேங்கப்பா....அவனுக்கு பாரதி என்கிற புனைப்பெயரில்
அறிமுகமாகிறாள் நாயகி ஸ்ரேயா.இவர்களின் காதல் பகுதியே சூடான இக்கதைக்கு ஜிலீரிடும் ஜிகர்தண்டா..
இந்த விறுவிறுப்பான கதைக்கு ஏற்ற நாயகன்.வழக்கமான ஷாஹியின் நாயகர்களில் இருந்து சற்று வித்தியாசமானவன்.(என்னை பொறுத்தவரை).ஜூஸில் மயக்க மருந்து கொடுத்தது,ஷ்ரேயாவை கடத்தியது,கல்யாணத்திற்கு முன் லிவிங் டுகெதர்(இதற்கு புதுமையான ஒரு விளக்கம் வேறு) என்று ஒரு அதிரடி மன்னன். ஸ்ரேயாவும் சற்று வித்தியாசமான நாயகி.தந்தை தவறு செய்தலும் அதை கண்டிக்கும் துணிச்சல் படைத்தவள்.தவறான வழியில் செல்லும் தந்தை,புற்று நோயில் அவதிப்படும் தாய்,தற்கொலைக்கு முயலும் தம்பி என்று சிக்கலான பின்னணியில் அறிமுகமானாலும் அனைத்தையும் சமாளித்து அவள் இதயம் கேட்ட சுமந்த்தை கைப்பிடிக்கிறாள்.
இந்த முறை மணல் கடத்தல்,விலை பேசும் கல்வி வியாபாரம்,வரி ஏய்ப்பு என்று எல்லா இடத்திலும் நடக்கும் அநியாயங்களை சுட்டியிருக்கிறது ஷாஹியின் எழுத்து .ஆனால் நேர்மைக்கு பரிசு மரணம்தான் எனும்போது மனம் ரணமாகிவிட்டது.ஷாஹி விவேக்கின் மரணத்தை தவிர்த்திருக்கலாம் கதைக்கு உயிர்நாடியே அதுதான் எனும்போது தவிர்க்க இயலவில்லை போலும் .தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க நாள் ஆகலாம்.ஆனால் கண்டிப்பாக தண்டனை உண்டு.
இந்த கதைக்காக ஷாஹி மிகவும் home work செய்திருக்க வேண்டும்.அவ்வளவு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். புவனாவின் புற்றுநோய்,வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களின் பெற்றோரின் நிலை, குறிப்பாக ஷ்ரேயாவின் படிப்பு, கீ லாகர் பற்றிய விவரங்களும் ஆச்சர்ய படுத்துகின்றன. எல்லா ஏரியாக்களிலும் நின்று சிக்ஸர் அடித்திருக்கிறார். ஷாஹியின் சமூக அக்கறை மிகுந்த இந்த கதைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Very nice review shamim thanks for shahi for this lovable and informative story ..
ReplyDeleteNeenga sonnathu pola intha kathaiyil shahiyin nayagan vithyasamanavan than...sema athiradi !!!