Saturday, November 5, 2016

உயிரோவியம் உனக்காகத்தான் நாவலில் இடம்பெற்ற கவிதைகள்...


நினைவுகளிலும் கனவுகளிலும்
உறக்கத்திலும் விழிப்பிலும்
வேலையிலும் ஓய்விலும்
மட்டுமா மின்னி மறைகிறாய்....

ஒளியிலும் மலரிலும்
நிலவிலும் குளிரிலும்
பூவின் வாசத்திலும்
மழைநீரின் துளியிலும் கூட
முகம் காட்டி மறைகிறாய்...

மறந்தால் தானே நினைப்பதற்கு!
நினைவுகளே நீயாகிப் போயிருக்க...
என் நினைவுகள் மங்கினாலும்...
உன் மீதான மயக்கம்
மங்கவும் கூடுமோ!!

********

கண்ணாடிக் கன்னத்தில்
முத்தமிட்டேன் காதலாய்...
உன் வார்த்தை சொல்லா காதலை 
உந்தன் நாணம் சொன்னதோ...!

1 comment:

  1. Hi Hameeda,
    I searched your blog, today only i found it. i really missed the episodes of யாரைக் கேட்டது இதயம்... are re-run the story in your blog? the story was simply superb. i read some of the episodes. eagerly waiting to read the remaining episodes. plz update the episodes in blog regularly.

    Thanks

    ReplyDelete