Saturday, November 5, 2016

அன்பின் அடைமழைக் காலம் நாவலில் இடம்பெற்ற கவிதைகள்...


களவு கொடுத்தவளுக்கே தெரியாமல்

ஒவ்வொன்றாய் களவு போக...

களவாடிக் கொண்டிருப்பவனும்

தன்னை அறியாமலே 

களவாடிக் கொண்டிருக்க...

இத்தகைய நூதன கொள்ளை

காதலில் மட்டுமே சாத்தியம்...! 

  ********

 

கொடும் பாலை...

உறை பனி...

காடு மலை...

மேடு பள்ளம்...

அலையாமல் அலைந்து...

வீடு வந்து சேர்ந்தேன்...!

 *******

 


பேரழகுப் பெட்டகம் என்
கையணைப்பில் இருக்க...
இயற்கையும்
பேரழகு ஆனதே...!

 

No comments:

Post a Comment