கானகன் – லக்ஷ்மி சரவணகுமார்
காட்டின் எல்லா ரகசிய தடங்களுகுள்ளும்
ஊடுருவும் சாமர்த்தியம் கொண்டவன் தங்கப்பன். அவனை அச்சப்படுத்தும் காலநிலையோ..வன
மிருகமோ எதுவுமில்லை எனும் அளவுக்கு காடு உறங்கும் நேரமும் விழிக்கும் நேரமும்
உணர்ந்து....வேட்டையாடும் கருமாண்டி.
கானகத்திற்கு உடல் உண்டு....உடலுறுப்பு
உண்டு....மனிதனுக்கு ஆதாரமாக உயிர் இருப்பது போல...அதற்கும் ஒரு உயிர் உண்டு.
காடு...சில சமயம் தேவதை....சில சமயம் மோகினி...சில சமயம் பிசாசு...எப்ப என்னவா
இருக்கும் என்பது தெரியாது....போன்ற உண்மைகளை வேட்டையாடி வேட்டையாடி உணர்ந்து
கொண்ட தங்கப்பனுக்கு.....காட்டுக் கோழிகளையும் கருமந்திளையும் வேட்டையாடவே
விருப்பம். ஆனால் அன்சாரியின் மாட்டுக் கிடையை காப்பதற்காக....குட்டிகளை ஈன்ற
தாய்ப் புலியை வேட்டையாடுவதில் துவங்குகிறது இந்த படைப்பு.....
தனது வாழ்வாதாரத்தை தாயிடம் இருந்து
பெறக் கூடிய புலிக்குட்டி....வேட்டையாடி இரைதேடும் கலையை சரிவர கற்க
முடியாமல்....அதன் பயிற்சியை இடையிட்டு தடுத்து விட்டதால் ஏற்படும் விளைவுகளை
சொல்கிறது இப்படைப்பு.
தங்கப்பனின் வனம்
குறித்த...வனவிலங்குகள் குறித்த நுண்ணிய புரிதலும்....புலி வரக்கூடிய தடங்களை
அறிந்து அதற்கு பொறி வைப்பதும்.....பரணமைத்து.....காத்திருந்து புலியை
வேட்டையாடுவதும்.....புலி வேட்டையை அருகிருந்து பார்த்தது போன்ற உணர்வின்
சிலிர்ப்பு......கொல்லப்பட்ட பாட்டா(புலி)வின் ஆன்மா...அக்கானகத்தின் மரம் செடி
கொடிகளின் முன் விழுந்து உறுமும் சத்தம்...நமக்கும் கேட்கிறது......
இந்த அகமலைக் காட்டின்...பிள்ளைகளான
முப்பதுக்கும் மேற்பட்ட பளியர் கூட்டத்தில் ஒன்று...மொக்கநிலை பளியர்குடி.
இக்குடியை சேர்ந்த செல்லாயி...இவர்களின் வேட்டையாடும் மரபை மீறி சிறுவயது முதல்
வேட்டையாடும் ஆர்வம் கொண்டவள்....பளிச்சியம்மனை இழிவுபடுத்தி விட்டு....தன் குடியை
கணவனை விட்டு...தங்கப்பனுடன் வாழ்கிறாள். இவளுக்கும் பளியன்...சடையனுக்கும்
பிறந்தவன் வாசி.....இவனே இக்கதையின் ஆதாரம்.....கானகத்தின் காவலன்....உண்மையான
கானகன்.......
தங்கப்பனின் முதல் இரு மனைவிகளால்
பாசத்துடன் வளர்க்கபடும் வாசி....வேட்டைக்காரன் தங்கப்பனிடம்
வளர்ந்தாலும்....தனக்கு தேவையானது தவிர எதையும் காட்டிலிருந்து அதிகமாக எடுத்துக்
கொள்ளாத பளியனாகவே வளர்கிறான்.
காட்டின் விளைநிலங்களை ஊடுருவி கஞ்சா
பயிர் வளர்த்து கொள்ளையடிக்கும் முதலாளிகளிடமும்...வேட்டைநாய் ஜமீனிடமும்
விலைபோகும் தங்கப்பன்...தன் வேட்டை நெறிமுறைகளை
மீறி....சாராயத்துக்கும்...பணத்துக்கும் தன் கருமாண்டி அந்தஸ்தை அடமானம்
வைக்கிறான். ஜமீனின் வேட்டை வெறியாட்டமும்....அதன் முடிவில் நேரும் தாய் மானின்
படுகொலையும் கொடூரமென்றால்..அதன் வயிற்றில் இருந்த குட்டியை வாசி காப்பாற்றி
வளர்ப்பது...கவிதை...
கோடை காலம் துவங்க...நீர்நிலைகளை தேடி
வரும் யானைக் கூட்டங்கள்...தங்களுக்கு சம்பந்தமில்லாத கஞ்சா தோட்டங்களை கண்டு மூர்கமடைந்து
அவைகளை துவம்சம் செய்வதோடு வயலுக்குள்ளும் ஊருக்குள்ளும் இறங்குகின்றன. வனத்தின்
ரௌத்திரம் யாராலும் எதிர்கொள்ள முடியாதது.....நாகரீக மனிதனின் சுயநலம்...அவன்
வெட்டும் ஒவ்வொரு மரத்தின் இலையையும்....அதில் கூடு கட்டி வாழும் ஒவ்வொரு
பறவையையும் பலி வாங்கும் போது....இவற்றுக்கு ஆதாரமான கானகத்தின் பேரமைதியை மனிதன்
தவறாக புரிகிறான். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள்....காடே
மிரண்டால்....மனிதனின் நிலை.....படித்து உணருங்கள் தோழிகளே.....
கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்
என்பது போல....புலி வேட்டைக்கு போனவன் இறுதியில் அந்த புலியால் சாகிறான்.
காட்டையும் மிருகங்களையும் நேசிக்கும் பளியன் வாசி....அந்த வனத்தை காக்க தங்கப்பனை
புலிக்கு ஒப்புக் கொடுக்கிறான். அந்த புலிக்குட்டியின் கண்களில் வரும் சாந்தத்தில்
ஒரு poetic justice தெரிகிறது.
கானகத்தின் காவலன் சடையனின் ஒவ்வொரு
வார்த்தையும் பொருள் செறிந்தவை.....
உரையாடல்களில் வெகு இயல்பாக விழுந்து
தெறிக்கும் கெட்ட வார்த்தைகள்.....சாராய நெடி....முறையற்ற ஆண் பெண்
உறவு.....உவ்வ்வ்வே.....
பளியர்குடியில் அவ்வாறு
இல்லாமல்....மெல்லிய நேசம் இழையோடுவது பெரும் ஆறுதல்.....
பனிக்காலப் பொழுதுகளும்...வன
மிருகங்களின் குருதிச் சுவையும்....
இளவேனிற்கால நாட்களில் வனமெங்கும்
விரியும் புதிய உயிர்களின் நெடி.....
கோடை காலமும்....அதன்
தயாரிப்புகளும்....
பெருமழைக்காலத்தின்
மர்மங்களும்...வற்றாப் பகையின் நீட்சியும்....
நான்கு பருவங்களில்.....அடர்ந்த கானகம்
தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் ஓசைகளை புரிந்து கொள்வதற்காகவே...... பயணித்த
உணர்வு....தவற விட்டு விடாதீர்கள் தோழிகளே.....
No comments:
Post a Comment