கலைந்து போன மேகங்கள் நாவலில் இடம்பெற்ற கவிதைகள்...
எதை எதையோ எழுதுகிற
என்னுடைய எழுதுகோல்
இவனது ஆட்டத்தைப் பற்றி
எழுத மறுக்கிறதே... ஏன்???
அழகாய் சரியாய்
ஆடவில்லை என்றா...
கனவில் வந்தால் தான்
கவிதையில் வரலாம்...
இவனது நினைவால்
தூக்கமே இல்லை
பின் கனவு ஏது...!!!
*******
கண்ணோடு கண் கலந்தால்
உன் விழி பேசும் மொழிதனை
மொழிபெயர்ப்பேன்...
பாரா முகம் காட்டினால்...???
கொஞ்சிப் பேசா விட்டால்
போகிறது...
கொஞ்சம் பேசு கண்மணி...!!!
No comments:
Post a Comment