சுருதி பேதங்கள் - வாஸந்தி
பிறந்தவுடன் தாயை இழந்து.....ஆறு மாதங்களுக்கு ஒரு முறை
மாறிக்கொண்டே இருக்கும் சமையல்காரிகளிடம் வளரும்....பெண்குழந்தை.....தாயின்
மறைவுக்கே அவள் பிறப்பு தான் காரணம் எனும் எண்ணத்தில் புறக்கணிக்கும் தந்தை....
இப்படியான சூழ்நிலையில் வளரும் ராதா.....அன்பு...அனுசரணை..இவை
என்றால் என்னவென்றே தெரியாத ராதா.....தன் மனம் எனும் பாலையில்....குளிர்ச்சியாக
விழுந்த......அன்பை உள்ளடக்கிய காதல் எனும்
சிறுமழையில் தன்னையறியாமல் நனைகிறாள். ரகு....அவளின் எதிர்பார்ப்பை
பொய்யாக்காமல்......அவள் வாழ்க்கையில் காணக்கிடைக்காத அன்பை அள்ளித் தருகிறான். தந்தையை
எதிர்த்து ரகுவை கைபிடித்து.....புரிதல் மிகுந்த வாழ்வில் ஓராண்டு சுகித்து
வாழ்ந்த ராதா.......அழகிய கனவு கணத்தில் கலைந்தாற்போல்.....ரகுவை காலனுக்கு வாரிக்
கொடுத்துவிட்டு...சுடுசொல் மட்டுமே பேசத் தெரிந்த தந்தையிடம் வேறு வழியின்றி
அடைக்கலமாகிறாள்.
ராதாவின் தந்தை ஒரு எழுத்தாளர். தன் மனதின் வக்கிரங்களை
சிருங்கார ரசம் சொட்ட சொட்ட வெளிப் படுத்தும் இவர்.....கணவனை இழந்த மகளுக்கு
உணர்வென்பதே இருக்க கூடாது என்றென்னும் கபட வேடதாரி. அவள் அபத்தம் என்று நினைத்து
ஒதுக்கும் அவருடைய எழுத்தை படித்து அவளின் புத்தி விபரீதமாக போகும் என்பது அவருடைய
பயம். அந்த பயம் காரணமாக அவளின் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் ஒவ்வொரு அசிங்க
காரணம் கற்பித்து அவளை சொல்லால் அடிப்பது அவரின் வாடிக்கை. மேற்படிப்பு படிக்க
சம்மதம் கேட்டால்...மீண்டும் ஒருவனை இழுத்துட்டு ஓடறதுக்கா என்று கேட்கக் கூடியவர்.
அவள் ஏங்கியது ஆணுக்காக அல்ல...அன்புக்காக என்பதை புரிந்து கொள்ள
முடியாத......முன்னணி எழுத்தாளர்.
இப்படியான தகப்பனிடம் உளவியலில் மேற்படிப்பு படிக்க ஒப்புதல்
கேட்டு...அவரின் கட்டுப்பாடுகளுடன் கூடிய சம்மதம் பெற்று..கல்லூரி செல்லத்
தொடங்குகிறாள். கணவனை பிரிந்து ஒரு குழந்தையுடன் இருக்கும் இவளின் தோழி ஜெயாவும்
இவளுடன் இணைந்து கொள்கிறாள்.
ஒருவருட வாழ்வின் சுகந்தம் அவள் மனப் பெட்டகத்தில் மனம் வீசிக்
கொண்டிருக்க.....ரகுவை போலவே......பஸ் ஸ்டாண்டில் சந்திக்கும் மோகன்....ஒரு மனநல
மருத்துவன். ஒரு வருடம் விலகி இருந்து கண்ணியம் காத்து...இவன் சொல்லும் காதலை ராதா
ஏற்றுக் கொண்டாளா.....??
காலப் போக்கில் எண்ணங்கள் மாறலாம்...ஆனால் அடிப்படையான குணம்
மாறுமா....எண்ணங்களை உருவாக்குவது அடிப்படை குணமல்லவா......
எதையும் பெரிய இழப்பாக எடுத்துக் கொள்ளாமல்...யாரையும் தவறாக நினைக்காமல்....வாழ்வு ஏற்கனவே
தீர்மானிக்கப்பட்ட ஒரு நியதிகுட்பட்டது. அதை கோணலாகாமல் பார்த்துக் கொள்ளவே இந்த
அறிவு இருக்கிறது என்ற மனப்பக்குவம் கைவர பெறவேண்டும்.....என்று தனக்குள்ளேயே
தன்னை அலசி அலசி பக்குவப் படுத்திக் கொள்ளும் ராதா.....ஸ்ருதியுடன் சேர்ந்த நாதமாக
மிளிர்கிறாள்.
நம்முடைய அகந்தையை விலக்கி வைத்து இறைவனிடம் முறையிட்டால் ஆன்ம
பலம் அதிகரிக்கும்....என்று ஆன்மிகம் தொடங்கி......சமூகத்தின் மேல் ஏற்படும்
சீற்றம் தான் தற்கொலைக்கான வித்து....என்று தற்கொலை வரை....ஒவ்வொரு சின்ன விஷயமும்
உளவியல் ரீதியாக அலசப் பட்டிருக்கு....
ஒரு சின்ன ரோஜா செடிக்கு தேவையான கவனிப்பு தொடங்கி....விதம்
விதமான மனித மனங்களில் செயல்பாடுகள் வரை.....
பிறக்கும்...வளரும் சூழ்நிலைகளுக்கு தக்கபடி குழந்தைகளின் குண
இயல்புகள் அமைவது முதல் கோபம்......வெட்டிப் பேச்சு போன்ற உணர்வுகளுக்கு அவரவரின்
நியாயங்கள் வரை...அனைத்தும் வெகு தீர்கமாக அலசப் பட்டிருக்கு.
சுருதி பேதங்கள்......
கணவனிடம் விவாகரத்து கோரி அது கிடைக்கும் வரை தைரியமாக இருந்த
ஜெயா....விவாகரத்து கிடைத்தவுடன் பித்து பிடித்தவள் போலாகிறாள்.....தன்னுடைய
எதிர்மறை எண்ணங்களால்......
சமையல்கார மாமி சாமர்த்தியசாலி....என்ற ஜெயாவின் கூற்றில்
விழும் முதல் முடிச்சு..கொஞ்சம் கொஞ்சமாக இறுகி.....அற்புதமாய் கோலம்
போட்டு....கச்சிதமாய் வேலைகள் செய்து....வக்கணையாக பேசும் மாமியின் உள்மன
அலங்கோலம்.....நிச்சயம் ஸ்ருதிபேதம் தான்....
பேதங்களில் பெரிய பேதம் ராதாவின் தந்தையே.......
இதை கதை என்று சொல்வதை விட...விதம் விதமான மனநிலைகளின் உளவியல்
ரீதியான அலசல் என்று சொல்லலாம். அனைவரும் தவறாது வாசியுங்கள்....
No comments:
Post a Comment