Tuesday, July 25, 2017

தோழி மாதினி அவர்களின் அழகிய கருத்துகள்

கதை வாசித்தவுடன் தனது மனதில் உணர்ந்ததை உணர்ந்தவாறே பகிர்ந்து கொண்ட தோழி மாதினியின் பதிவு... மிக்க நன்றி மாதினி!

========================================================================
உங்கள் நாவலை படித்து நான் மெய்மறந்திட்டேன் பரவச நிலை தான் .... அருமையா எழுதியிருக்கீங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு மா! நடுத்தர மக்களின் வாழ்க்கை முறை அவங்க அனுபவிக்கும் இன்னல்கள் பற்றி தெளிவா சொல்லிருக்கீங்க, ஆறு மாதத்திற்கு முன்னால் நாம்ப என்னென்ன கஷ்டங்கள் அனுபவித்தோமோ அதை உங்கள் எழுத்துக்களில் படிக்கும் போது, எப்படிடா இவ்வளவு பெரிய மலையை கடந்து வந்தோம்னு ஆச்சரியமா இருக்கு! வெற்றியும் நயனியும் செம ஜோடி மா! அவன் நண்பன் தியாகு சொன்னமாதிரி வெற்றிக்காக செய்யபட்டவளோ நயனி..... வெற்றியின் குறும்பு பேச்சு அவன் அடிக்கிற லூட்டி எதையும் மறக்க முடியல.

 அவங்க திருமணம் நடக்குமோ நடக்காதோனு சஸ்பென்ஸா இருந்துச்சி மா... வெற்றி காதலை சொல்ற விதம் சூப்பர் மா "இமையும் இமையும் சேர்ந்திருப்பது போல்" நீங்க எழுதிய வரி அட்டகாசம் வார்த்தையில் வர்ண ஜாலங்கள் செய்திருக்கீங்க ஹமிதா! இப்படி நிறைய வரிகளை நான் புத்தகத்தில் குறித்து வைத்திருக்கிறேன். அனுபவித்து படித்தேன் மா...... அதுவும் லிப்ட் சீனை மறக்கவே முடியாதுமா செம! தற்சமயம் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்முறைகளையும் நீங்க விட்டு வைக்கலமா.... 

 எனக்கு முக்கோண காதல் கதைகளை படிப்பதில் பிடித்தம் கிடையாது பா அதில் யாராவது ஒருத்தருக்கு மனக் கஷ்டம் ஏற்படும் அதை என்னால் தாங்க முடியாது..... ஆரம்பத்தில் பிரோமத்தை நான் வில்லனாகவே நினைச்சிட்டேன் அதனால் தான் அவன் மேல் எந்த வருத்தமும் இல்லாமல் இருந்திச்சு ஆனால் போக போக அவனோட நல்ல மனசுக்கு நயனி கிடைக்கலியேனு ரொம்ப வருத்தமாகிடுச்சு. அவனுக்கென்று ஒரு ஜோடியை அமைச்சிருக்கலாம். இவங்க திருமணத்தை வெற்றியோட அப்பா ரொம்ப எதிர்ப்பார்னு பார்த்தால் மகனை திட்டிட்டு மருமகளை சப்போர்ட் செய்றார்.  நெஞ்சில் தாங்கும் கணவன்,தலையில் வைத்து கூத்தாடும் புகுந்த வீட்டு சொந்தங்கள் கிடைக்க தான் நயனிக்கு பிறந்த வீட்டில் அவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டதா..... 

மொத்தத்தில் "பேசும் மொழியிலெல்லாம்" என் மனதில். என்றும் நீங்கா அன்பு மொழியானது.

வாழ்த்துக்கள் ஹமிதா அருமையான நாவலை கொடுத்ததற்க்கு!
=========================================================================

2 comments:

  1. Vimarsanam story padikka vendum endra aarvathai melum melum thoondugiradhu....

    ReplyDelete
  2. Wow nice...padika aarvam athigamaguthu....

    ReplyDelete