Friday, January 4, 2019

முன்னோட்டம் - 3



முன்னோட்டம் 1 மற்றும் 2-ஐ வாசித்த பலரும், 'யமுனா பாவம்' என்று பின்னூட்டம் இட்டிருந்தீர்கள். உள்பெட்டிக்கு வந்த தோழிகள் பலரும் அவ்வாறே கருத்துத் தெரிவித்தீர்கள்!
குட்டியாக இரண்டு சாம்பிள் காட்சிகளைப் பதிவிட்டிருக்கிறேன்!
யமுனா நிஜாமாகவே பாவம் தானா?
வாசித்துச் சொல்லுங்கள் நட்புகளே!
'மறப்பேன் என்றே நினைத்தாயோ! - ஹமீதா'
முன்னோட்டம் - 3
============================================
“எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க இப்படி?”
“வாட்?”
“ஒரு பொண்ணுக்கு வசதியான இடத்துல வாழ்க்கை அமையுதுன்னா, அதைக் கெடுக்க நாலு பேர் நாலு விதமா சொல்லத்தான் செய்வாங்கன்னு நான் கேள்விப் பட்டிருக்கேன். அதை இப்பத்தான் நேர்ல பார்க்கிறேன்!”
அவள் சொல்லச் சொல்ல, அவன் அவளை நம்ப முடியா பார்வை பார்த்தான்.
“என்ன? தண்ணியடிக்கிறான்... பொண்ணுங்க கூட சுத்துறான்னு ஏதாவது சொல்லுவ! இந்தக் காலத்துல தண்ணியடிக்கிறதெல்லாம் ஒரு மேட்டரா? பணக்காரப் பையன்னா தம்மு தண்ணி பொண்ணுங்க எல்லாம் இருக்கத்தான் செய்யும். எல்லோரும் உன்னை மாதிரியே பழமா இருக்க முடியுமா? வசதி வந்துட்டா நீயும் இப்படிப் பழமா இருக்க மாட்ட! அப்புறம்... ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன்... நான் ஒண்ணும் உன்னளவு சாதாரணக் குடும்பம் கிடையாது. எங்கப்பா ஒரு பெரிய லெதர் கம்பெனில நல்ல போஸ்ட்ல இருக்கார்!”
அவனுடைய தோற்றத்தை மிக ஏளனமாக மேலும் கீழுமாகப் பார்த்தபடி அவள் சொல்ல, கேட்டிருந்த ஜீவா திகைத்துப் போனான்.
****
“அவங்க பொண்ணு பார்க்க வர்றப்போ நான் எந்தப் புடவை கட்டிக்கிறது? எங்கிட்ட இருக்கிறதெல்லாம் விலை குறைவான ஃபேன்சி புடவை. ஏதோ காலேஜ் ஃபங்க்ஷன்ஸுக்கு வேணும்னா கட்டிக்கலாம்!” என்று தொடங்கினாள்.
“இது என்னடீ அநியாயமா இருக்கு உன்னோட? பொண்ணு பார்க்கிறதுக்கே புதுப் பட்டுப்புடவை வாங்குறதுக்கு நாம எங்கே போறது?” - வெகுண்டு விட்டார் சிவகாமி.
“ஏதோ காலேஜ் ஃபங்க்ஷன், பொறந்தநாளு, ஃப்ரெண்ட்ஸ் வீட்ல விசேஷம்னு போகணும்னா புது ட்ரெஸ் கேட்டு அடம் பிடிப்ப. அப்பாவோட தோள்ல சாஞ்சுட்டு செல்லம் கொஞ்சியே சாதிப்ப. கேட்குறதுலயும் ஒரு நியாயம் வேணாமாடீ! நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்க... இன்னைக்கு பட்டுப்புடவை கேட்கிற!” ஆற்றாமை தாளாமல் ‘பிலுபிலு’வென்று பிடித்துக் கொண்டார் சிவகாமி.
“ஏன்மா! நான் என்ன அந்த ‘நீயா நானா’ல வந்த பொண்ணுங்க மாதிரி அம்பது பவுன் போடுங்க எண்பது பவுன் போடுங்க, அஞ்சு லட்ச ரூபா ஏஸி ஹால் புக் பண்ணுங்க... ஹெலிகாப்டர்ல வந்து மணவறையில இறங்குறேன்னா சொன்னேன்? சிம்பிளா ஒரு பட்டுப்புடவை... அதுக்குப் போய் இந்தக் குதி குதிக்கிறீங்க! சொல்லப்போனா நீங்க எல்லோரும் என்னைப் பாராட்டணும். அப்பாவுக்கு செலவு வைக்காம, அதே சமயத்துல கண்ட கழிசடையை லவ் பண்ணி மானத்தை வாங்காம, உங்க மரியாதையைக் காப்பாத்திக் குடுத்திருக்கேன். அது புரியல உங்களுக்கு!” என்று பதிலுக்கு எகிறினாள் யமுனா.
==============================================
அன்புடன்,
S.ஹமீதா.

3 comments:

  1. அருமை மேடம்.. இதுவரை புத்தக கண்காட்சிக்கு செல்லவில்லை.. உங்கள் கதைக்காக நிச்சயம் செல்வேன்.. நீங்க வருவீங்களா மேடம்.. உங்களை பார்க்க வாய்ப்பு இருக்கா??

    ReplyDelete
  2. Hi anu,
    உங்க பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சியாக இருக்கு. வரும் சனிக்கிழமை மாலை புத்தகக் கண்காட்சிக்கு செல்ல இருக்கிறேன். மாலை 5 to 7 ஸ்டால் நம்பர் 164, wecan shopping இல் இருப்பேன். உங்களைச் சந்தித்தால் மகிழ்வேன் மா 😊

    ReplyDelete
  3. Pleasure is mine maam.. you are such a humble person.. i will surely come.. feeling really excited..

    ReplyDelete