Wednesday, August 16, 2017

தோழி சூர்யமுகி அவர்களின் மின்னஞ்சல் பதிவு



ஹாய் ஹமீதா,             
             உங்கள் கற்பனை என்னும் சோலையில் உதித்த ஐந்தாம் மலரான `பேசும்  மொழியிலெல்லாம்' கதை புத்தகமாக வெளிவந்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
            
தளத்தில் பதிவிடப்பட்ட கதை பாதியில் நிறுத்தப்பட்டதும் சற்று  வருத்தம் ஏற்பட்டது உண்மை...ஆனால் புத்தகமாக  இதனை படிக்கும்  ஆர்வம் நாளுக்கு  நாள் அதிகரித்ததும் உண்மை.ஒருவழியாக புத்தகம் வாங்கி படித்து விட்டேன்.
             
ஹமீதா கதைகளின் நாயகர்களிடமிருந்து சற்று  வேறுபட்டு  வேலையில்லா இளைஞனாக தந்தையிடம் திட்டு வாங்கும் வெற்றிமாறன் .                             வேலைக்காக சென்னை வருமிடத்தில் கதாநாயகி நயனிகாவை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சந்திக்கிறான்.நாளடைவில் காதல் கொள்கிறான்....
            
நயனிகா...குடும்பத்துக்காக தன் கனவுகளைத் துறந்து மிகப்பெரிய பாரத்தை தன் தலையில் தாங்கி வேலைக்கு செல்லும் பெண்.
        
இவர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் முதளாளி மகனாக ப்ரமோத்...வெற்றியின் பால்ய  நண்பன்.
       
இவர்களின் முக்கோண காதல் கதையை மிக நேர்த்தியாக படைத்திருக்கிறீர்கள்.
         
இதோடு பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள்தமிழக அரசியல் சூழல், புயல் பாதிப்புகள் என அனைவரையும் ஒன்பது மாதங்கள் பின்னோக்கி பயணிக்க வைத்திருக்கிறீர்கள்....
           
பெருகி வரும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை பற்றிய பகுதியும் மனதை பதைபதைக்க வைத்தது.        
            
வெற்றி நயனியின் காதல் அத்தனை அழகு....கடன் பிரச்சனை தீர ப்ரமோதை மணக்க நிர்ப்பந்திக்கப்படும் நயனி என்ன ஆனாள்....காதலனாய் காவலனாய் வெற்றி அவளை காத்தானா அல்லது தன் காதலை ப்ரமோத்துக்கு தாரை வார்த்தானா என்பதை மிக எதார்த்தமாக கொண்டு சென்ற விதம் அருமை.
                
வெற்றியின் குறும்பு ரசிக்க வைத்தது...ப்ரமோத்தின் இன்னொரு பக்கம் தெரியும் போது சற்று அதிர்ந்தது உண்மை....நயனிக்கு இந்த வாழ்வே மிகப் பொருத்தம்...
               
நடுத்தர வர்க்க குடும்ப தலைவரான மோகன்ராமின் சில முடிவுகளை ஏற்க முடியாவிட்டாலும் கடைசியில் தான் ஒரு பாசமான தந்தை என்பதை அவர் நிரூபிப்பது ஆறுதல்
             
வெற்றியின் தந்தை வீரராகவன், சுயநலத்தின் மொத்த உருவமாக நயனியின் அக்கா கார்த்திகா, அப்பாவி அன்னையாக விஜயா,நண்பர்களான ஆனந்தி தியாகு,ப்ரமோத்தின் தந்தை பத்மநாபன் என்று அத்தனை கதாபாத்திரங்களும் மனதில் நிற்கின்றன. ...
            
மொத்தத்தில் எதார்த்தமான அழகான காதல் கதையை தந்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
                விரைவில் உங்கள் ஆறாம் படைப்போடு எங்களை சந்திக்க வாருங்கள்.

1 comment:

  1. ஹாய் சூர்யா,
    மின்னஞ்சல் வாயிலாக சந்தித்ததில் மிக மிக மகிழ்ச்சி. கதையை பாதியில் நிறுத்திய வருத்தம் இந்த நிமிடம் வரை என்னைத் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால், சூழ்நிலை அப்படி அமைந்து விட்டது. நீங்கள் மனத்தில் ஒன்றும் கொள்ளாமல் புத்தகம் வாங்கி வாசித்ததோடு மட்டுமல்லாமல் இவ்வளவு அழகிய கருத்துகளைப் பகிர்ந்திருப்பதில் உள்ளம் நெகிழ்கிறது.

    மிக அழகிய சொல்லாடல்கள்... நேர்த்தியான விமர்சனம். அனைத்து அம்சங்களையும் அழகாய் உள்வாங்கி கோர்வையாய் விமர்சித்திருக்கிறீர்கள். மிக மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். உங்களுடைய அழகிய கருத்துகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் தோழி!

    ReplyDelete