Monday, August 7, 2017

யாரைக்கேட்டது இதயம் - விமர்சனம் (எழுத்தாளர் நீலாமணி)

Thanq hameeda. 
 
உங்க 'யாரைக்கேட்டது இதயம்' புக் தான் இன்னைக்கு படிச்சேன். எப்பவுமே language மேல உங்களுக்கு இருக்கற command எனக்கு ரொம்ப பிடிக்கும். Both Tamil and English. அதோட இதுல எனக்கு பிடிச்ச விஷயம்
 
1. கதைக்களத்தை நல்லா ஸ்டடி பண்ணிருக்கீங்க.

2. எல்லா கேரக்டர்சும் செதுக்கி இருக்கீங்க.

3. ஹெவி பிளாட் கொஞ்சம் கூட குழப்பம் இல்லாமல் குடுத்திருக்கீங்க. I enjoyed a lot.
 
4. டீசண்ட் ரொமான்ஸ்.
 
5. மைல்ட் த்ரில்லர் ரொம்ப அழகா ஹாண்டில் பண்ணிருக்கீங்க.
 
6. ஒரு செகண்ட் கூட போரடிக்காத ரைட்டிங் ஸ்டைல்.
 
கடைசியா உங்களுக்கு ஒரு வார்னிங். உங்க மேல expectations கூடிட்டே போகுது. டேக் கேர்.

Expecting many more such beautiful novels from you pa.

Sunday, August 6, 2017

நண்பர்கள் தின வாழ்த்துகள்!


எழுத்தின் வாயிலாக நட்பாகி, பதிவிடும் ஒவ்வொரு பதிவையும் மிக ஆவலுடன் வாசித்து,  அழகிய நுட்பமான கருத்துகள் வாயிலாக எனது எழுத்தை செதுக்கி, நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும்... எனது ஒவ்வொரு சிறு முயற்சியிலும் உடன் பயணிக்கும் அன்புத் தோழமைகளின் நட்பை எனக்கு அருளிய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

'இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்!'

Thursday, August 3, 2017

தோழி எழுத்தாளர் கோகிலா அவர்களின் அழகிய கருத்தாக்கம்

ஹாய் ஷாஹி,

வழக்கம் போல் 'வாவ்' தான் கதை. உங்க முதல் கதையிலேயே செமயா இம்ப்ரஸ் ஆகியிருக்கேன். அதைவிட ஐந்து மடங்கு இம்ப்ரஸ் ஆனேன்னு சொல்லலாம் உங்க ஐந்தாவது படைப்பில். Awesome shahi.

வெற்றி, பிரமோத் அறிமுகப் படலத்தில் இருவரும் வேலையில்லா பட்டதாரி தனுஷ், அமிதேஷா என் மைன்ட்ல வந்து.. போகப் போக(3, 4 எபியிலேயே) மைன்ட்டை நல்லா சர்ஃப் போட்டு வாஷ் பண்ணி ஹமீதாவிற்கே உரிய தனித்துவமான கேரக்டர்களான வந்துட்டாங்க... வெற்றி-ப்ரமோத் நட்பு, வெற்றி-நயனி காதல் இது இரண்டிலுமே எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு நினைத்து அடுத்து என்ன? அடுத்து என்ன? எதிர்பார்ப்போட ஒவ்வொரு பக்கங்களா திருப்ப வைத்து.. ரொம்பவே விறுவிறுப்பா கதை நகர்ந்தது.

இரண்டு ஹீரோ இருக்கும் போது யாரவது ஒருவருடைய கேரக்டர் தான் நம்மளை ரொம்பவும் இம்ப்ரஸ் பண்ணும். பட் இதில் இரண்டு பேருமே நம்ம மனதுக்கு மிக பிடித்தமான கேரக்டர்களாக வந்தது ஹமீதாவின் எழுத்து திறமைன்னு தான் சொல்வேன். மனதை வருடும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கதை சொல்லியதும் செம செம செம சூப்பர்.

அடுத்து நம் அரசால் நாம் சந்தித்த பிரச்சனைகளை ரொம்பவே எதார்த்தமா கதைக்குள் கொண்டு வந்துட்டீங்க. எந்த பிரச்சனைகளையும் விட்டு வைக்கல.. ஹாஸ்பிட்டல் பில், மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டு பணமில்லாமல் கஷ்டப்பட்டவர்கள், கருப்பு பணத்தை மாற்ற நினைத்தவர்கள் இப்படி ஒரு விஷயத்தை விடாமல்.. நவம்பர் 8 ல இருந்து ஜனவரி என்ட் வரை தமிழ்நாட்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் கதைக்குள் கொண்டு வந்தது.. ப்ரில்லியண்ட் ப்ரசன்டேஷன். சில பேச்சிலர்ஸால் வரும் பிரச்சனைகள்.. பீக் அவர்ஸ் லிஃப்ட் பிரச்சனை எல்லாம் யதார்த்த உலகத்தை ஸ்டாராங்கா எங்களுக்கு காட்டியது. ப்ரமோத் & வெற்றி, நயனி, லிஃப்ட் இப்படி ஆர்டர்லதான் 'பேசும் மொழியெல்லாம்' என் மனதில் பதிந்தது.

ஒவ்வொரு கதையிலும் உங்களை பாராட்டி பாராட்டி புதுசா என்ன பாராட்டுறது வார்த்தைகள் கிடைக்கல போங்க.. நான் படித்ததிலேயே உங்கள் எழுத்து ஓரிடத்தில் நிற்காமல் கதைக்கு கதை வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படியே நாளுக்கு நாள் வளர்ந்து இன்னும் ரீச் ஆகாத ஒரு சில வாசகர்களையும் சென்றடைந்து, எப்பொழுதும் இந்த வெற்றி தொடர வாழ்த்துக்கள்.