Saturday, March 30, 2019

எழுத்தாளர் மதுஹனி அவர்களின் விமர்சனம்

யாரைக் கேட்டது இதயம் - ஹமீதா
கதைகளில் பல வகை (genre) உண்டு.
நிகழ்கால சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சமுதாயத்தின் கட்டமைப்பு, மனிதர்கள், அவர்தம் வாழ்வியல் முறைகள், சமூகத்தில் நிலவும் பிரச்சனைகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் சமூகம் சார்ந்த கதைகளில் உண்மைத் தன்மை மிகவும் அவசியம்.
The facts should be true and clear.
The author should have a profound knowledge about the subject she/ he is dealing with.
யாரைக் கேட்டது இதயம் பொறுத்தவரையில் ஹமீதா அவர்கள் முழு வெற்றியை அடைந்திருக்கிறார் என்பது எனது கருத்து.
அடிஆழம் வரை தான் எடுத்துக் கொண்ட கருவை நன்றாக அறிந்து புரிந்து அழகாக கதையை வடித்திருக்கிறார்.
இன்றைய காலகட்டத்தில் நடுநிலையான ஒரு பெரிய செய்தி நிறுவனத்தை இளம் வயதில் ஒருவன் வெற்றிகரமாக நடத்த அவனுக்குத் தகுந்த background இல்லாமல் அவ்வளவு எளிதல்ல.
மிகப் பெரிய அரசியல்வாதியின் ஒரே மகன் this background gives complete justification of the career heights of the male lead.
சத்யநாராயணன் போன்ற அரசியல்வாதிகளாலும் தேவராஜன் போன்ற நேர்மையற்ற அதிகாரிகளாலும் முதலில் பாதிக்கப்படுவது அவர்தம் குடும்பங்களே.
அந்தக் குடும்பத்தினரே, அவர்கள் வாரிசுகளே அவர்களின் அநியாயங்களை எதிர்க்கிறார்கள். ஆனால் தான் கற்ற கல்வியின் பலம் கொண்டு மிக சமயோசிதமாக சாதுர்யமாக வியூகம் அமைத்து அவர்களை அதில் வீழ்த்துவது தான் கதையின் ஹைலைட்.
"கத்தி முனையை விட பேனா முனை வலியது" ஒரே வரியில்.
நியூஸ் சேனல், அரசியல், மருத்துவக்கல்வி ஊழல்கள், நேர்மையான அதிகாரிகளுக்கு நேரும் பாதிப்புகள், HPV, keyblogger etc etc
கதை முழுவதும் precise facts and information. என் தனிப்பட்ட பிடித்தம் அது.
சுமந்த் ஸ்ரேயா இருவரின் காதலும் திருமணம் குறித்த புரிதலும் உணர்வுகளும் எந்த வித அலங்காரப் பூச்சுகளும் இல்லாமல் உள்ளது உள்ளபடியாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
கதையைப் பற்றி கதாபாத்திரங்கள் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் கதையைப் படித்து நான் உணர்ந்தது இது தான்.
எங்கேயும் EMPTY WORDS இல்லை MISLEADING FACTS இல்லை MISSING LINKS இல்லை.
Everything was perfectly scripted.
கடினமான சூழ்நிலையையையும் பலமாக ஆக்கிக் கொண்ட சுமந்த் ஸ்ரேயா அவர்களின் smart thinking, positive attitude and social responsibility இக்கதை என் மனதில் ஒரு நல்ல பாதிப்பை ஏற்படுத்த காரணம்.
உங்களுடைய எழுத்துப்பயணத்தில் This story is pathbreaker and a genuine masterpiece.
நான் என் முந்தைய பதிவில் கூறியது போல வாசகரின் ரசனையும் தனித்தன்மை வாய்ந்தது.
என் சிந்தனைக்கும் ரசனைக்கும் இக்கதை மிகுந்த நிறைவைக் கொடுத்தது.
Thanks for the great reading experience.
நன்றி ஹமீதா.

4 comments:

  1. மது, என்னுடைய கதையை நீங்கள் விவரித்தது போலவே, உங்களுடைய விமர்சனமும் அமைந்திருக்கிறது என்பதை நான் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். Very neat and crispy review. சிலரது எழுத்து, வாசித்த நொடியில் நேரடியாக மனதைத் தொடும் இயல்புடையவை - உங்களுடையதைப் போல. அவை மனதிலிருந்து எழுதப்படுவதால் அப்படியான உணர்வைத் தோற்றுவிக்க வல்லவையாக விளங்குகின்றன என்று எண்ணுகிறேன்.
    மிக மிக மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் உணர்கிறேன் மது. கதையின் அனைத்து அம்சங்களும் உங்களைக் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், உங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒருசில கதைகளின் வரிசையில் இடம் பிடித்திருப்பதை அறிந்து கொண்டது என்வரையில் மிக நெகிழ்ச்சியான அனுபவம்.
    உங்களுடைய அழகிய வாசிப்பனுபவம், அதை நீங்கள் உங்களுக்கேயுரிய தனித்தன்மையுடன் பகிர்ந்து கொண்ட விதம் அனைத்தையும் மிக ரசித்தேன். நன்றி என்ற சிறு சொல்லில் அடக்கிவிடக் கூடியவையல்ல இவ்வுணர்வுகள். என்றாலும், அதைவிட சிறந்த சொல் வேரொன்றில்லை என்பதால், மனமார்ந்த நன்றிகள் மது! My Best Wishes always be with you. May you reach greatest heights in your writing carrier!😊❤️🥰

    ReplyDelete
  2. Hi. I read your first episode in pratilipi. It was so good. Is this book யாரைக் கேட்டது இதயம்available in book form

    ReplyDelete
    Replies
    1. Thanks for your query. Glad to know that you liked the first episode. Yes! The book is available in all recognized book shops and also in kindle.

      Kindly contact my mail id if you need the book.
      shameeda0203@gmail.com
      Thank you.

      Delete
    2. Please click the below link to read in kindle

      https://www.amazon.in/gp/aw/d/B07BX24SQS?pd_rd_i=B07BX24SQS&ref_=dbs_s_w_srch_l_p1_5&storeType=ebooks&qid=1568620663&sr=1-6-dbssearch-acs

      Delete