Monday, October 23, 2017

மெர்சல் - விமர்சனம்





பொதுவாக நான் அவ்வளவாக படங்கள் பார்ப்பதில்லை. விகடன் மற்றும் முகநூல் விமர்சனங்கள் வாசித்து அப்டேட் செய்து கொள்வதோடு சரி. எல்லோராலும் மிகவும் பாராட்டப்பட்ட படங்களை அரைமணி நேரத்திற்கு மேல் பார்க்க முடியாமல் எழுந்து போன சம்பவங்களும் உண்டு. அனைவரும் கழுவி ஊற்றிய படங்களை ‘ஏன் இப்படி? நன்றாகத் தானே இருக்கிறது...’ என்ற எண்ணப்போக்குடன் முழுமையாக பார்த்த சம்பவங்களும் உண்டு. என் பிள்ளைகள் இருவரும், அவர்களுடன் நான் படம் பார்க்க அமர்ந்தால், என்னைக் கிளப்பி விட்டு விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். ஏனென்றால், அந்தளவுக்கு படத்தின் ஓட்டைகளைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பிக் கொண்டிருப்பேன். நான் இவ்வளவு சொன்ன பிறகும் தொடர்ந்து இவ்விமர்சனத்தை வாசிக்கவிருப்பவர்களுக்கு என்னுடைய வந்தனங்கள்.

‘மெர்சல்” படத்தின் நாயகன் பெயர் ‘வெற்றிமாறன்’ என்பது என்னைப் இப்படம் நோக்கி உந்தித் தள்ளிய காரணங்களில் ஒன்று என்பதையும் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். (பண மதிப்பிழப்பு நிகழ்ந்த காலகட்டத்தின் பின்னணியில் நான் படைத்த நாவல் ‘பேசும் மொழியிலெல்லாம்...’ கதையின் நாயகன் பெயரும் வெற்றிமாறன் என்பது நினைவுகூறத் தக்கது)   

“சுயபுராணம் போதும்! நீ விமர்சனத்துக்கு வா!” என்ற உங்களின் மைன்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது நட்புகளே!

இந்தியாவில் இன்றைய தேதியில் மருத்துவத் துறையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சீர்கேடுகளையும்... ஆளும் அரசாங்கங்களின் தவறான கொள்கை முடிவுகளால் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளையும் பேசிய துணிவிற்கு முதற்கண் என்னுடைய சல்யூட்.

பள்ளி மாணவி விபத்தில் அடிபட்ட காட்சியும் அதைத் தொடர்ந்த அக்குழந்தையின் மரணமும் மனதை வெகுவாக பாதித்தது. மருத்துவம் என்பது வியாபாரமாகிப் போயிருப்பது உண்மை தானென்றாலும், ஆம்புலன்ஸ் டிரைவரின் செயல்... ஏற்க முடியவில்லை... நம்பவும் முடியவில்லை!

பிரான்ஸ் காட்சிகள் அனைத்தும் காதில் பூ சுற்றல்! வெளிநாட்டில்... பலர் கூடியிருக்கும் பொது நிகழ்வில் கொலையை அரங்கேற்றிவிட்டு இந்தியா திரும்புவதென்பது அத்தனை எளிதா? என்ற கேள்வி எழுகிறது. இதில், அக்கொலையை அரங்கேற்றியது டாக்டர் மாறன் என்று நாம் நினைத்திருக்க, அது மேஜிஷியன் வெற்றி என்று பின்னர் தெரிய வருகிறது. அங்கு ஏற்கனவே மேஜிக் ஷோ நடத்துவதாக இருந்தவர், தேர்ந்த anesthetist-ஆல் எட்டு மணி நேரம் மயங்கியிருக்கும் வகையில் மயக்கத்திற்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணை அதிகாரி சத்யராஜ் சொல்கிறார். வெற்றி எப்படி அனஸ்தீஷியா கொடுத்தார் என்பதை அட்லீயை சந்தித்தால் கண்டிப்பாக கேட்டுச் சொல்கிறேன் மக்களே!

இம்மிக்ரேஷனில் அதிகாரிகளை அடித்துப் போட்டு விட்டு எகிறிக் குதித்து ஓடி, உயிரைக் காப்பாற்றுவது என்பதெல்லாம் தமிழ் சினிமாவில் மட்டுமே நிகழக் கூடியவை!

ஐந்து ரூபாய் டாக்டர் மாறன்... அவருக்கு பிரான்ஸில் விருது கொடுக்கிறார்கள்... சரி! அவர் பூவாக்கு என்ன செய்கிறார் என்ற கேள்வி என்னுள் எழுந்து விட்டது. வேறு மருத்துவமனையில் வேலை செய்வது போலவும் காண்பிக்கவில்லை... சற்று வசதியானவர் போலவும் காண்பிக்கவில்லை. ஒருவரை பேட்டி எடுக்கப் போகிறோம் என்றால், முதலில் அவரைப் பற்றிய தகவல்களை கூகுளில் தானே தேடுவோம்... சமந்தா நேரே சென்று ரோஸ்மில்க் வாங்கிக் கொடுத்து....??????? (சுவற்றில் மண்டையை டொம்ம் டொம்ம் என்று முட்டிக்கொண்ட மொமன்ட்...)

அப்பா விஜய்(வெற்றிமாறன்) நித்யா மேனன் ஜோடி ஏதோ ஒரு வகையில் ஈர்க்கிறது. குறிப்பாக நித்யா மேனன் கவனம் ஈர்க்கிறார். பஞ்சாபில் வெட்டவெளியில் சுகப் பிரசவம்... தமிழகத்தில் மருத்துவமனையில் சிசேரியன்... தாயும் குழந்தையும் மரணம்... ‘வாட் எ மெடிகல் மிராகிள்’ என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. மதுரை திருவிழா... தீ... நகைகளைக் கழற்றிக் கொடுத்து மருத்துவமனை கட்டச் சொல்லும் பெண்கள் என்று டிபிகல் தமிழ் சினிமா...

தாய் தந்தை இறந்த பிறகு வடிவேலு இருபிள்ளைகளையும் அழைத்து வருகிறார். சிசேரியனில் இறந்ததாக சொல்லப்படும் குழந்தை எப்படி உயிர்பிழைத்தது என்று தெரியவில்லை... வெற்றி... இஸ்லாமிய மேஜிஷியனால் வளர்க்கப் படுகிறார் என்பதை எப்படியோ புரிந்து கொண்டேன்... மாறன் எப்படி கோவை சரளாவிடம் சென்று சேர்ந்தார் என்பது நிஜமாகவே புரியவில்லை!

காஜல் அகர்வால் பாவம்...

சமந்தாவிற்கு அந்த நேர்காணல் நிகழ்ச்சி பெரிய ஆறுதல்...

விஜய்... அனைத்துக் காட்சிகளிலும் முழு அற்பணிப்பைக் கொடுத்திருக்கிறார்...

விஜய்... சமாந்தா பாடல் காட்சி இனிமை...

எஸ்.ஜே. சூர்யா பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஆசம்! பிரகாஷ்ராஜ் ரகுவரன் வரிசையில் தமிழ் திரையுலகில் வித்தியாசமான வில்லனாக வலம் வர எல்லா தகுதிகளும் உள்ளது.

இறுதிக்காட்சியில் விஜய் மாயமாய் மறைவது... அந்நியன் விக்ரமை நினைவு படுத்தியதை தவிர்க்க இயலவில்லை...  

விஜய் ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயம் கொண்டாட்டம்...

சாமானியர்களுக்கு...??? அந்த கடைசி மூன்று நிமிட வசனம் பெரிய ஆறுதல்.

அந்த மூன்று நிமிடங்கள், மத்தியில் ஆள்பவர்களை மெர்சலாக்கியதன் காரணம்... யஷ்வந்த் சின்ஹாவின் குரல் பாமரனை சென்றடைய சாத்தியமில்லை; எதிர்கட்சிகள்... மேடைப் பேச்சாளர்கள்... டிவி விவாதங்கள் அனைத்தையும் விட சக்தி வாய்ந்த வெகுஜன ஊடகம் வாயிலாக இக்கருத்து பதிவு செய்யப் பட்டு விட்டது என்ற பதற்றத்தின் வெளிப்பாடாக மட்டுமே இருக்க முடியும்.

திரைக்கதையில் சொதப்பினாலும்... மேற்சொன்ன ஒரு காரணத்திற்காக மட்டுமே... நன்றி அட்லீ & விஜய்!

திரைப்படங்கள் மீது அவ்வளவு நாட்டமில்லாத எனக்கும்... ‘இப்படத்தை பார்த்தே தீர வேண்டும்’ என்ற உந்துதலை ஏற்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு நன்றி சொல்வதா வேண்டாமா என்ற குழப்பம் ஆரம்பத்தில் இருந்தது என்றாலும், இந்த விமர்சனத்தை எழுதி முடித்த பிறகு... குழப்பமே இல்லாமல் அவருக்கும் என்னுடைய நன்றிகள்!

17 comments:

  1. சூப்பர்...ஹமீதா ..

    நானும் உங்க கட்சி தான் படங்கள் பொதுவாக அதிகம் பார்ப்பதுஇல்லை..ஆனால் விமர்சங்கள் மட்டும் படிப்பேன்...

    நல்ல கருத்துகளையும்..நல்ல லாஜிக்கோடு தரலாம்...

    ஆனால் நம்மவர்கள் ...ரொம்பதான் படுத்துறாங்க...

    அவ்வங்க எப்படி எடுத்தாலும் சூப்பர்...னு ..சொல்லி 5௦௦ ,1௦௦௦ கொடுத்து படம் பார்க்குற ரசிகர்கள் இருக்கும் வரை அவர்களுக்கு கொண்டாட்டம் தான்///

    நம் பாடு திண்டாட்டம் தான்....

    ---உங்க விமர்சனத்தையும் ரசித்து படித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார்.

      Delete
  2. ஹமீதா ஹாஹா...ஹாஹா..என்னால முடியல..........நல்லவேளை தப்பிச்சேன் டா சாமி...நான் விஜய் டிவியிலேயே பார்த்துகிறேன்....நல்லா பிரிச்சு மேஞ்சுடீங்க....எத்தனை வருஷம் ஆனாலும் நம்ம தமிழ் சினிமா மாறாது...ஆனா இப்போ வருகிற இளைஞகர்கள் நல்லா எடுகிரான்கப்பா....மாநகரம், எட்டு தோட்டாக்கள், குற்றம் 23 மாதிரி படங்கள் எல்லாம் செமையா இருக்கு...பெரிய ஹீரோக்கள் படங்களை பார்ப்பதை விட இவற்றை பார்க்கலாம்...அருமையான விமர்சனம் ஷாஹி..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சுதா... ஆனா, அந்த மாதிரி படங்கள் கவனம் ஈர்ப்பதில்லை... லாபம் ஈட்டுவதில்லை என்பது மிகப்பெரிய குறை பா. பதிவுக்கு மிக்க நன்றி சுதா.

      Delete
  3. ha ha shahi .. unga vimarsanam eppovum pola dhool .. kadaisiya nandri sonnenga parunga innum athu than mass ..

    ReplyDelete
    Replies
    1. Thank you Sindhu. Ha ha ha... நிஜமா ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இவங்களுக்கு நன்றி சொல்லி விழா எடுத்தாலும் தப்பே இல்லை சிந்து...

      Delete
  4. Hai hameeda, superrrrrrrrr விஜய் படம் பார்க்குருதிக்கு ஒரு தில் வேணும்., மீ நண்பீ ஒருத்தி படம் பார்த்திட்டு வந்து நல்ல மெசேஜ் நீங்க பாருங்க சொன்னால், எண்ணமா விஜய் படத்தையெல்லாம் போய் தியேட்டர் பார்க்க முடியுமா என்று கேட்டேன், ஆனால் hammeda உங்கள் விமர்ச்சனம் சூப்பர், புட்டு புட்டு வைத்து உள்ளிரிகள். thank you

    ReplyDelete
  5. ஹாய் ஹமீதா, நான் ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றேன், எப்ப உங்க ஸ்டோரி பேசும் மொழியில் யெல்லாம் கொடுப்பீங்க i am vidhya, i am waiting long time pleaseeee

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி வித்யா. ஆல்ரெடி five epis ஓபன் பண்ணிருக்கேன். Today posting sixth epi... you can follow in ongoing novels label pa...

      Delete
  6. ஹாய் ஹமீதா
    உங்கள் பதிவை படிச்சிட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியலை 😂😂😂 நேற்று இரவு தான் இந்த படத்தை பார்த்தேன் ஏன்டா போனேன்னு ஆயிடுச்சு....உங்களுக்கு தோன்றிய அதே சந்தேகம் தான் எனக்கும் அதை பற்றி என் பிள்ளைகளிடம் கேட்டால் போம்மா உனக்கு வயசாகிடுச்சுனு சொல்லி என்னை அடக்கி வச்சிடாங்க 😀😀 உங்கள் விமர்சனம் சூப்பர் மா என்னோட பேவரிட் ஹீரோ வெற்றிமாறன் பெயரை இந்த படத்தில் டேமேஜ் ஆக்கிட்டாங்க இதற்காகவே அட்லியை நான் மன்னிக்க மாட்டேன்..... உங்கள் அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் ஹமீதா 😀😀

    ReplyDelete
    Replies
    1. ha ha ha...மதி... நல்லா என்ஜாய் பண்ணீங்க போல... எல்லோரும் சொன்னதைக் கேட்டு, கண்டிப்பா மிஸ் பண்ணாம பார்திடணும்னு பார்த்தேன் பா... எனக்கும் உங்கள் நிலைமை தான்! என் பையன் சொன்னான்... உங்களுக்கு வயசாகிடுச்சு... அதான் இப்படி கேள்வி கேட்கிறீங்க ன்னு. விடுங்க விடுங்க... நம்ம வெற்றி அடுத்த கதைலயும் கொஞ்சம் கொஞ்சம் வருவான்... சீக்கிரமே அடுத்த கதையோட வரேன் பா இன்ஷா அல்லாஹ்!

      Delete
  7. ஹாய் ஹமீதா...சொன்னால் நம்பமாட்டீர்கள்..இந்த அத்தனை சந்தேகங்களும் என் மண்டையிலும் உதித்தன...இன்னும் ஒன்று கூட...மேஜிக் ஷோவில் கொல்லப்பட்ட டாக்டருக்கு ஏன் மாறனை காணும்போது அடையாளம் தெரியவில்லை....உருவ ஒற்றுமை புலப்படவில்லையோ.....செம விமர்சனம். ....ஹீரோ பெயர் வெற்றிமாறன் என்று தெரிந்ததும் நம் வெற்றி ஞாபகம் தான் வந்தது...மறக்கக்கூடிய கதாபாத்திரமா அது...அடுத்த கதைக்காக வெயிட்டிங் பா...

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா... சூர்யா... நல்லா இருக்கீங்களா பா? rw ல சொன்னதை விடவும் இன்னும் நிறைய தோணுச்சு பா... அதெல்லாம் சொன்னா யாராவது தொடப்பைக் கட்டைய தூக்கிட்டா என்ன பண்றதுன்னு அடக்கி வாசிச்சேன்... அதுவே இந்த ரேஞ்சுக்கு இருக்கு...

      வெற்றியை எல்லோரும் நினைவு வெச்சிருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம் பா... அடுத்த கதைலயும் வெற்றி அங்கங்கே தலையை நீட்டுவான்... முடிஞ்சா அளவு விரைவா வர பார்கிறேன் பா.

      Delete
  8. Hello Shahi/Hamee,
    Romba naal kazhichu unga ezhuthu paarthathula romba, romba magizhchiya irukku. Eppadi irukkeenga, Shahi?

    Sorry, very sorry - nadula konja naal ennaala blog pakkam vara mudiyala. Innum ennenna post panni irukkeengannu inimel thaan - I need to catch up.

    But, full form-la irukkeenga Shahi ! :-) :-) and, thanks SOOOO much for the timely review. Ennado 'paarkalama, vendaama' oscillation-ku vidai koduthu kaapathiteenga.

    Enakkum friends-moolam indha padam parunga recommendation vandhadhu. Enakku moondru mani neram utkaarndhu indha madhiri logic-e illamal varadhai ellam paarkkum porumai sutthama illai - enakku thonura kelviyai ellam kettaal "'logic'-lam suspend pannittu thaan paarkanum - this is a fantasy" nnu bathil varum. Edhukku indha kashtam, namakku sugama moozhgi poga books irukkum podhu, appadinnu naan padam paarka poradhe illai perumbalum.

    The one reason I was considering watching was because someone mentioned something about GST - padathula idhu pathi varudhunnu sonnanga. Sari, enna dhaan solluranga paarkalamennu oru ninaippu. Ippo ungalin alasalai paarthappuram, to go thru 3 hours for the 3-minutes at the end - chance-e illai, Shahi. I will keep to my thoughts on GST - adhu podhum :-) :-)

    BTW, naanum eppadiyavadhu 'Pesum mozhiyil ellam' puthaga copy-kkaaga solli vachittu utkarndhirukken. Paarpom eppo kaikku varudhunnu.

    Hope you are doing well, Shahi. Seekirame, ungalin adutha padaippai edhir paarkalama? (couldn't resist asking that !!).

    -Siva

    ReplyDelete
  9. Wooowwww... siva... after a long long time. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களை இங்கே பார்க்க. ஹ ஹ ஹா... நானும் உங்களை மாதிரி தான்... த்ரீ ஹவர்ஸ் ஸ்பென்ட் பண்றது ரொம்ப கஷ்டம்... எல்லோரும் சொன்னாங்களேன்னு பார்த்தேன்... நல்லா தான் இருந்தது... பட் இந்த கேள்வியெல்லாம் வந்துச்சு...

    'பேசும் மொழியிலெல்லாம்' eight epis rerun ல ஓபன் பண்ணியாச்சு பா. probably coming monday sixteenth epi போஸ்ட் பண்ணிடுவேன். missed you and your feedback sooo much siva. Do join... I will wait for your comments pa. Next story hero is Pramod... Started writing... halfway thro...

    Thanks for posting dear. You made my day.

    ReplyDelete
  10. AHA !! Pramod gets his own story - have been waiting for that. THANK YOU SO MUCH!

    Pesum Mozhiyil ellam - re-open panniteengala - nandrigal pala, pala.

    ReplyDelete