யாரைக் கேட்டது இதயம் ...? – ஹமீதா ...
கல்வி கட்டண கொள்ளை ,மணல் மாபியா ,வரி ஏய்ப்பு ,நில ஆக்கிரமிப்பு, ஊடகங்களின் நிலைப்பாடு இப்படி பல சமூக பிரச்சனைகளை எடுத்து அதை கதையின் மூலமாக விறுவிறுப்புடனும் நேர்த்தியாகவும் அணியடித்தார் போல நம்மை சமூக அக்கறையோடு காதல் கதையில் சுனாமியாய் சுழல வைக்கிறார் தோழி ஹமீதா ....
"யாரைக் கேட்டது இதயம்
யாரைக் கேட்டது இதயம் ...
விரல் தொட வில்லையே ...
நகம் படவில்லையே ..
இது போல ஒரு இணையில்லையே ..."
என்று காதல் காவியம் பாடினாலும் ..அப்பனுக்கே பாடம் சொல்லும் சுப்பன் என்னும் கருத்துகளுக்கு ஏற்ப தகப்பனுக்கே எதிராக அதிரடி அட்டகாசம் செய்யும் ..சுமந்த் நாராயணன் ....பெண்பிள்ளைகளுக்கு மட்டும் தாய் முக்கியமில்லை ஆண் பிள்ளைகளுக்கும் தாய் முக்கியம் என்பதை உணர்த்துகிறான் ...ஒரு குடும்ப சூழல் பிள்ளைகளுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர முடிகிறது ... நேரில் ஒரு பெண்ணையும் ,இணையத்தின் மூலம் ஒரு பெண்ணையும் சந்திக்க இருவருமே இவனுக்கு இணையானவர் என்று தோன்றிட யாரை அவன் இதயம் கேட்டது ..?அவனது தந்தைக்கு எதிராக செயல் பட காரணம் என்ன ..? தாயின் நிலை என்ன ..? .....
குடும்பத்தின் தலைவனாகிய தந்தையின் ஒழுக்ககேடு எப்படி ஒரு குடும்பத்தையே பாதிக்கிறது ..அப்படி பாதிப்புக்கு உள்ளானவள் ஸ்ரேயா ...தந்தையை மீற முடியாமல் ,தாயை காப்பற்றவும் அடங்கி போக, தன்னோடு நட்பு பாராட்டிய ஒருவனோடு காதல் கொள்ள முடியாமல் அவளின் உணர்வுகளோடு போராடும் பெண் ....இவள் குடும்பத்தில் நடந்தது என்ன ..? தந்தையை பழி வாங்கினாளா ...? காதல் கை கூடியதா ...?
பாரதி என்னும் வலைத்தள எழுத்தாளர் மூலம் வரும் அவந்திகாவின் கதை உண்மை என்று தெரிந்து சுமந்த் அவளுக்கு உதவி புரிந்தனா ...? நடந்தது என்ன ...? விவேக் என்னும் ஆட்சியாளர் நடக்கும் முறை சரியா ..? அவரின் நடத்தைக்கு கிடைத்த பரிசு ..? சரியா ..? தவறா ..?
இப்படி பல கேள்விகளுக்கு விடை தெரிய ஹமீதாவின் ,”யாரைக் கேட்டது இதயம் ..” நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள் ...
அப்பா சுமந்த் நாராயணா ..நீ தன்வீரைவிட படு கில்லாடி ...வீர் வீர் சொல்லிக்கிட்டு இருந்த எங்களை இப்படி நாராயணா நாராயணான்னு சுத்த வைச்சுடியே ..கடைசி வரை ஜூசில் என்ன கலந்தன்னு சொல்லவே இல்லையே ராசா ....ஹமீதா பத்தி கரெக்டா சொல்லிட்டியே யூத்மதர் தான் ஆன அவங்க ரொம்ப ஸ்ரிக்ட் ஆபீசர்ன்னு எங்களுக்கு முன்னாடியே தெரியுமே....
கடத்தலையும் ,காதலையும் வெகு நேர்த்தியாக கவித்துவமாக சொல்லியிருக்கிறார் ... கதைக்குள் கதையான தீ தித்திக்கும் தீ அதன் முடிவு அருமை ...எழுத்தாளரின் மற்றைய மூன்று படைப்புகள் முத்துகள் என்றால் நான்காவது நன்வைரம் ......வாழ்த்துக்கள் ஹமீதா ....
SS பப்ளிகேஷன் மூலமாக புத்தகமாக வெளிவந்து இருக்கிறது .....

அருமையான அழகான விமர்சனத்துக்கு மனமார்ந்த நன்றிகள் வேதா கெளரி.
ReplyDelete