“சின்னஞ்சிறு ஓட்டு வீடு...
சுற்றிலும் சிறு தோட்டம்...
கவின்மிகு காதலனாய் கணவன்...
செம்மொழிக் கவிதையாய்
வாழ்க்கை...”
******
“நான் என்பது எது?
என் உடலா?
இல்லை மனமா?
நான் என்பது என் உடலெனில்
என் கணவர் என்னைக் காதலிக்கிறார்...”
******
“உள்ளம் நெகிழ
உடல் நெகிழுமாம் பெண்ணுக்கு
உள்ளம் நெகிழ்ந்த நினைவே இல்லை...
அருமையாய் பிள்ளையைக் கொடுத்ததற்கு
நன்றி சொல்லிக் கொள்கிறேன்...
கணவருக்கு அல்ல...
கடவுளுக்கு...”
*******
*******
“பெண்ணுக்கு எதற்கு கல்வி?
சிந்திக்க...? சிறகு விரிக்க...?
கல்வி கொடுத்து
நகை பூட்டி மணமுடித்து
துடிக்கத் துடிக்க சிறகொடித்து
சிந்தனை மறுத்து குற்றுயிராக்கி
சிறையில் அடைக்கும் கொடுமைக்கு
சிந்திக்கத் தெரியா அறிவீனம்
சொர்க்கம்.”
No comments:
Post a Comment