Monday, October 1, 2018

தோழி லதா சேகர் அவர்களின் விமர்சனம்

உந்தன் அலாதி அன்பினில்

தலைப்பிற்காகவே வாசிக்க நினைத்த நாவல்...
 
எப்போதும் ஊருக்கு சென்றாலும் அதிகப்படியான லக்கேஜ்களால் பல பொருட்கள் விமான நிலையம் வரை வந்து திருப்பி அனுப்புவதும் உண்டு..
என் புடவைகள் ஒன்று கூட எடுத்து வராது போனாலும் ஹமிதா தந்த இரு நாவல்களும் கண்டிப்பாக வர வேண்டும் என்பதை திரும்ப திரும்ப சொன்னதால் மறக்காமல் கொண்டு வந்து விட்டார்...

புத்தம் புது புத்தகத்திற்கே ஒரு மணம் உண்டு
சிறு வயதில் ஆனந்தவிகடன், கல்கண்டு,குங்குமம், குமுதம் முத்தாரம் என்று என் அப்பா வாங்கி வந்து படிப்பதை பார்த்து நானும் படிக்க ஆரம்பித்த பிறகு முதலில் என்னிடம் தந்து நான் வாசித்த பிறகே அவர் வாசிப்பார், இது தெரிந்ததால் தான் நீ படித்துவிட்டே அனுப்பு என்று சொல்லியும் என் தங்கை கவரைக்கூட பிரிக்காமல் அனுப்பி விட்டாள்...
 
எப்போதும் மறக்காமல் எனக்கு நாவல்களை பரிசளிக்கும் உங்கள் அன்பிற்கு மிகப்பெரிய நன்றிகள் Hameeda Hamid👏👏

நிறைய வேலைகள் இருந்தாலும் வாசிக்கும் பழக்கம் உடன் இருந்து கொண்டே தான் இருக்கும்...
 
வெகுநாட்களாக கப்பல் பயணம் செல்ல வேண்டும் என்ற ஆசை இந்த நாவல் படிக்கும் போதே நிறைவேறியது..
 
தமிழ்ச்செல்வனுடன் நாமும் பயணம் போனோம், கப்பலில் உள்ள ஒவ்வொருவரின் பணிகளையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்க ஆசிரியர் எடுத்துக்கொண்ட அந்த ஈடுபாட்டிற்கு முதலில் பாராட்டுக்கள் ஹமிதா🌹🌹🌹
 
சராசரி ஆண் மகனைப்போல இல்லாமல் சவால்களை சந்திக்கும் பணியை நேசிக்கும் நாயகன் தமிழ்ச்செல்வன் வழக்கம் போல உங்களின் வித்யாசமான நாயகர்கள் வரிசையில்...
 
தன் சுயநினைவு இழந்த நிலையில் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதும் தன் நாயகியை அறிமுகப்படுத்துவதும் மிகவும் இயல்பாய்...
 
தான் நேசிக்கும் பெண் தன் குடும்பத்தை மட்டுமல்ல தன் துறையையும் சேர்ந்து நேசிப்பதே பெரும்பாலான ஆண்களின் விருப்பம், தன் துறை சார்ந்த பணிகளையும் சவால்களையும் அதில் இருக்கும் சங்கடங்களையும் வலிகளையும் அவமானங்களையும் தாயிடம் கூட பலர் வெளிப்படுத்துவதில்லை, ஆனால் தன் துணையிடம் அவர்கள் வெளிப்படுத்தி அதை உள்ளார்ந்த புரிதலுடன் அவனை அப்படியே ஏற்றுக்கொள்ளும் போது அங்கே காதலனாய் கணவனாய் முதலில் ஜெயித்து விடுகிறான்..இந்த புரிதலற்று போவதால் தான் பல கணவன் மனைவி திருமணத்திற்கு பிறகு அவர்கள் காதலை தொலைத்து விடுகின்றனர்..தன் துறையை புரிந்த இணையின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் மட்டுமல்ல சிறு பார்வையும் ஒரு தொடுதலுமே போதும் அவன் சோர்ந்த நேரங்களில் அவனுடைய சவால்களில் விண்ணை முட்டி சாதனை படைப்பான்..

மதுரவல்லி பெயரே அத்தனை அழகு செய்யும் தொழில் மேல் கொண்ட பக்தி அதில் உள்ள நேர்மை கண் முன்னே ஒரு மரியாதையான தோற்றத்தை ஏற்ப்படுத்தும் பாத்திரப்படைப்பை அருகில் பார்ப்பது போன்ற உணர்வை தந்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள்👏👏
 
தன் காதலை உணரும் போதும் தன் தோழிக்காய் மறைத்து கொள்ள நினைத்து முடியாமல் நான் இத்தனை பலவீனமானவளா என்று நினைக்கும் இடத்தில் மிகவும் அழுத்தமாக நம் மனதில் பதிகிறாள்...ஒவ்வொரு முறையும் அவர்கள் பேசிய இடத்தை நினைவு கூர்ந்து அங்கே நிற்கும் நொடிகளில் மட்டுமே வாழ்வதும் காதல் என்றால் என்ன தன் துணையின் குடும்பம் மட்டுமல்லாமல் அவனின் துறையையும் இலட்சியங்களையும் சேர்ந்தே நேசிப்பது என்பதை அழுத்தமாய் சொல்லும் இடங்களில் இன்னும் அழுத்தமாக நம் மனதில் பதிகிறார்..
 
நாயகன் சொல்லிச்சென்றது போல் தன் காதலை குடும்பத்தினருக்கு வெளிப்படுத்தும் இடத்தில் மிகவும் மரியாதையாய் நம் மனதில் பதிகிறாள்..
ஷோபிதா இன்றைய பள்ளி மாணவி...
 
தன் வயதிற்கே உரிய ஹார்மோன்களின் தூண்டுதல்களால் பதின்ம வயது பெண்களின் செயல்களை கண்முன்னே நிறுத்துகிறாள்...தாயை எதிரி போல பார்ப்பதும் அண்ணனை வேண்டாத விருந்தாளி போல நினைப்பதும் இன்றைய பல பிள்ளைகளின் நிலையை உணர்த்துகிறது..ஒரு அண்ணனாய் தமிழ்ச்செல்வனின் அணுகுமுறை அதற்கு சரியான ஆளாக மதுவை நம்பி அவளிடம் தன் தங்கையின் பொறுப்பை ஒப்படைப்பது இருவரும் இணைந்து தங்கையை அழகாய் மீட்டெடுப்பது ஒரு கை தேர்ந்த மனோதத்துவர் வரிசையில் ஆசிரியர் அழகாய் வழக்கமாய் தன் சமூக அக்கறையை தன் கண்ணியமான எழுத்துக்களால் வெளிப்படுத்தி தன் முத்திரையை மிக அழுத்தமாக பதிக்கும் ஆசிரியருக்கு மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்👏👏

இங்குள்ள பல வாசகிகள் பதின்ம வயது பெற்றோர்களாக இருந்தால் முடிந்த வரை இந்த அணுகுமுறையை பின்பற்றி நம் குழந்தைகளை மீட்டெடுக்க மிக மிக பொறுமையாய் முயற்சி செய்வோம்..
 
இன்றைய பிள்ளைகளுக்கு தேவை மிகச்சரியான தூண்டுதலே,அவர்களை சரியாக புரிந்து கொண்டு உற்சாகப்படுத்தினாலே போதும், அவர்கள் உலகத்திலிருந்து வந்து இயல்பாய் நம்முடன் இணைந்து கொள்வார்கள்..ஆனால் அதற்கு தேவை மிக மிக பொறுமை😊

இன்னும் நிறைய எழுதுங்கள் ஹமிதா..
 
வழக்கம் போல இணையத்தில் இல்லாமல் புத்தகமாக மட்டுமே படிப்பேன்😊😊
 
உங்களின் ஆர்வமும் அதற்கான மெனக்கெடலும் உங்களை பெரிய உயரத்திற்கு கொண்டு செல்ல வாழ்த்துக்கள் 🌹🌹🌹

3 comments:

  1. Sis enga padichinga? book a? Link kidaya sis?

    ReplyDelete
  2. Sis enga padichinga? book a? Link kidaya sis?

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete