Thursday, August 3, 2017

தோழி Kavi Rehabian அவர்களின் விமர்சனம்



ஹமீமா இது என்னுடைய முதல் விமர்சனம்.

முதலில் எனது இதயம் கனிந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். இந்தக் கதைக்கும் புத்தகம் என் கையில் கிடைக்க உதவி செய்ததற்கும்.
எனது மொழியில் பேசும் மொழியிலெல்லாம்...

இந்தக் கதையின் முதல் வெற்றி நம் எதிர் நடமாடம் மனிதர்களின் பிம்பங்கள் வெற்றியும் நயனியும்....

ஏதோ ஓர் வகையில் பாரதி எல்லார் வாழ்க்கையிலும் தொட்டுக்கொண்டிருப்பார் நேரடியாகவோ, மறைமுகமாகவோ. அப்படி பாரதியைக் கொண்டாடும் நாயகனாக அறிமுகம் ஆகும் வெற்றி கதையின் நாயகன்.

கனவுகளை குடும்பக் கஷ்டங்களுக்கு முட்டுக் கொடுக்க விட்டு முன்னோக்கி வாழ்வில் ஓடும் பெண்களில் ஒருத்தி நயனி.

அனைத்தும் இருந்தும் ஏதுமில்லா உணர்வில் வாழும் பிரமோத்.
இவர்களது வாழ்வின் முக்கியத் தருணங்களை எட்டிப் பார்க்கிறோம் இக்கதையில்.

தமிழ்நாடு மக்கள் கடந்த ஒரு வருசத்தில் எத்தனை பிரச்சனைகளை சமாளித்து வந்துருக்கோம் இதை படிக்கும் போது தான் புரியுது.
எதார்த்தமான வாழ்வின் நிகழ்வுகளை உள்வாங்கி இயல்பாக வடிமைத்ததால் மனதிற்கு நெருக்கமாகிறார்கள் வெற்றியும் நயனியும். வெற்றியின் குற்ற உணர்வும் பதட்டமும் படிப்பவர்களுக்கும் வருவதே இந்தக் கதையின் வெற்றி

நல்வாழ்த்துக்கள்! ஹமீதா 

எழுத்தாளர் நீலாமணி அவர்களின் பின்னூட்டம்

Hi Hameeda, நான் உங்க பேசும் மொழியிலெல்லாம் கதை இப்ப தான் படிச்சிட்டு வரேன். எனக்கு எப்பவுமே உங்க writing style பிடிக்கும். இதுலயும் அசத்திட்டீங்க. எனக்கு இந்த கதையை படிச்சதும் நீங்க எழுத்தில் அடுத்த கட்டத்துக்கு போயிட்டமாதிரி தோணிச்சு. வெறும் லவ் ஸ்டோரியா மட்டுமே இல்லாமல் பல விஷயங்களை தொட்டிருக்கீங்க. பர்னீச்சர் கடை, demonetisation, ippadi ellame super. My best wishes to you and thanks for your wonderful gift. I loved it.ore oru kurai. Pramodai allaada vittathu than.

Monday, July 31, 2017

தோழி ஸ்ரீமதி கோபாலன் அவர்களின் விமர்சனம்



பேசும் மொழியெல்லாம்

ஹமீதா அவர்களின் நாவல் வரிசையில் ஐந்தாவது நாவல்....எப்பொழுதும் போல் அருமையான காட்சிகள் , அழகான வார்த்தைப் பிரயோகங்களால் படிப்பவர்களை கட்டிப் போடுகிறார் .

வெற்றிமாறன் - நயனிகா

கதையின் நாயகன் , நாயகி ...இவர்கள் வரும் காட்சிகள் அனைத்திலும் ஹமீதாவின் தனி முத்திரை ....

பிரமோத்

வெற்றி கதையின் நாயகன் என்றாலும் ....என்னைப் பொறுத்தவரை கதாநாயகனாக என் மனதில் உயர்ந்து நிற்பது இவன்தான்...
மற்றபடி சாதாரண குடும்பம்...அவர்களின் அன்றாட பிரச்சனைகள் .....அவர்களின் தினப்படி போராட்டங்கள்.....

கூடவே கதையோடு ஒட்டி வரும் இன்றைய சமூகப் பிரச்சனைகள் பண மதிப்பிழப்பால் .....மக்கள் சந்தித்த பிரச்சனைகள்.....இயற்கை சீற்றத்தால் மற்றும் பல நிகழ்வுகளால் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் .... கூடவே இன்று தினமும் கேள்விப்படும் சிறுவர்களின் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமை .... அதனால் பாதிக்கப் படுபவர்களின் உணர்வுகளை கதை ஒட்டதோடு பொருத்தி கொண்டு சென்றிப்பது அழகு .

கதையில் இன்னும் நிறைய கதாபாத்திரங்கள் உண்டு ....மொத்தத்தில்
ஹமீதாவின் மற்றொரு அழகான நாவல் பேசும் மொழியெல்லாம் .....நன்றி ஷாஹி உங்களுக்கு ...