ஹமீமா இது என்னுடைய முதல் விமர்சனம்.
முதலில் எனது இதயம் கனிந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். இந்தக் கதைக்கும் புத்தகம் என் கையில் கிடைக்க உதவி செய்ததற்கும்.
எனது மொழியில் பேசும் மொழியிலெல்லாம்...
இந்தக் கதையின் முதல் வெற்றி நம் எதிர் நடமாடம் மனிதர்களின் பிம்பங்கள் வெற்றியும் நயனியும்....
ஏதோ ஓர் வகையில் பாரதி எல்லார் வாழ்க்கையிலும் தொட்டுக்கொண்டிருப்பார் நேரடியாகவோ, மறைமுகமாகவோ. அப்படி பாரதியைக் கொண்டாடும் நாயகனாக அறிமுகம் ஆகும் வெற்றி கதையின் நாயகன்.
கனவுகளை குடும்பக் கஷ்டங்களுக்கு முட்டுக் கொடுக்க விட்டு முன்னோக்கி வாழ்வில் ஓடும் பெண்களில் ஒருத்தி நயனி.
அனைத்தும் இருந்தும் ஏதுமில்லா உணர்வில் வாழும் பிரமோத்.
இவர்களது வாழ்வின் முக்கியத் தருணங்களை எட்டிப் பார்க்கிறோம் இக்கதையில்.
தமிழ்நாடு மக்கள் கடந்த ஒரு வருசத்தில் எத்தனை பிரச்சனைகளை சமாளித்து வந்துருக்கோம் இதை படிக்கும் போது தான் புரியுது.
எதார்த்தமான வாழ்வின் நிகழ்வுகளை உள்வாங்கி இயல்பாக வடிமைத்ததால் மனதிற்கு நெருக்கமாகிறார்கள் வெற்றியும் நயனியும். வெற்றியின் குற்ற உணர்வும் பதட்டமும் படிப்பவர்களுக்கும் வருவதே இந்தக் கதையின் வெற்றி
நல்வாழ்த்துக்கள்! ஹமீதா
No comments:
Post a Comment