வாசக நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்.
21 டிசம்பர், 2016 - SS பப்ளிகேஷன்ஸின் முதல் வெளியீடான
“யாரைக்கேட்டது இதயம்?” வெளியான தினம். அதன் பிறகான ஆறு மாதங்கள்... பதிப்பக
வேலைகள் என் நேரத்தை விழுங்கிய ஆறு மாதங்கள்! மனதுக்குள் உதித்து, மூளையில் வடிவம்
பெற்ற “பேசும் மொழியிலெல்லாம்...” எனும் இக்கதையை... எழுத்தில் வடிக்க முடியாமல்
பல மனத்தடைகள் மற்றும் குழப்பங்கள்...
அனைத்தையும் தாண்டி, இக்கதையை ப்ளாகில்
பதிவிடத் துவங்கிய பிறகு, நீங்கள் அனைவரும் வழங்கிய பேராதரவு மட்டுமே என்னை
செலுத்தியது தோழிகளே!
ரமலான் நோன்பு காலத்தில் என்னால் தொடர்ந்து
பதிவுகள் கொடுக்க முடியாத நிலையிலும், என்னுடைய சிரமங்களைப் புரிந்து கொண்டு...
தொடர்ந்து எனக்கு பக்கபலமாக விளங்கிய வாசக, எழுத்தாள மற்றும் பதிப்பாளத் தோழிகளின்
அன்பு என்னை நெகிழ்த்தியது.
இத்தகைய பேரன்புக்கு, என்னுடைய படைப்பை
புத்தக வடிவில் விரைவாக வழங்கிவிடுவதே சிறந்த பிரதிபலிப்பாக இருக்க முடியும்
அல்லவா நட்புகளே!
உங்கள் அனைவரின் உள்ளம் கவர்ந்த
வெற்றிமாறன், நயனிகா மற்றும் ப்ரமோத்...
உங்கள் இல்லம் தேடி வருகிறார்கள்!
நிறைந்த உள்ளத்துடன், மகிழ்ச்சி பொங்க
வரேவேற்பு அளிப்பீர்கள் என்பது எனக்கு நிச்சயம்!
என்னுடைய முயற்சிகளுக்கு பக்கபலமாக
விளங்கி, அனைத்தையும் சாத்தியப்படுத்திக் கொடுக்கும் வாழ்க்கைத் துணையை வழங்கிய ஏக
இறைவனுக்கே புகழனைத்தும்!
“பேசும் மொழியிலெல்லாம்...”
வெகு விரைவில்...