வாசக நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்.
21 டிசம்பர், 2016 - SS பப்ளிகேஷன்ஸின் முதல் வெளியீடான
“யாரைக்கேட்டது இதயம்?” வெளியான தினம். அதன் பிறகான ஆறு மாதங்கள்... பதிப்பக
வேலைகள் என் நேரத்தை விழுங்கிய ஆறு மாதங்கள்! மனதுக்குள் உதித்து, மூளையில் வடிவம்
பெற்ற “பேசும் மொழியிலெல்லாம்...” எனும் இக்கதையை... எழுத்தில் வடிக்க முடியாமல்
பல மனத்தடைகள் மற்றும் குழப்பங்கள்...
அனைத்தையும் தாண்டி, இக்கதையை ப்ளாகில்
பதிவிடத் துவங்கிய பிறகு, நீங்கள் அனைவரும் வழங்கிய பேராதரவு மட்டுமே என்னை
செலுத்தியது தோழிகளே!
ரமலான் நோன்பு காலத்தில் என்னால் தொடர்ந்து
பதிவுகள் கொடுக்க முடியாத நிலையிலும், என்னுடைய சிரமங்களைப் புரிந்து கொண்டு...
தொடர்ந்து எனக்கு பக்கபலமாக விளங்கிய வாசக, எழுத்தாள மற்றும் பதிப்பாளத் தோழிகளின்
அன்பு என்னை நெகிழ்த்தியது.
இத்தகைய பேரன்புக்கு, என்னுடைய படைப்பை
புத்தக வடிவில் விரைவாக வழங்கிவிடுவதே சிறந்த பிரதிபலிப்பாக இருக்க முடியும்
அல்லவா நட்புகளே!
உங்கள் அனைவரின் உள்ளம் கவர்ந்த
வெற்றிமாறன், நயனிகா மற்றும் ப்ரமோத்...
உங்கள் இல்லம் தேடி வருகிறார்கள்!
நிறைந்த உள்ளத்துடன், மகிழ்ச்சி பொங்க
வரேவேற்பு அளிப்பீர்கள் என்பது எனக்கு நிச்சயம்!
என்னுடைய முயற்சிகளுக்கு பக்கபலமாக
விளங்கி, அனைத்தையும் சாத்தியப்படுத்திக் கொடுக்கும் வாழ்க்கைத் துணையை வழங்கிய ஏக
இறைவனுக்கே புகழனைத்தும்!
“பேசும் மொழியிலெல்லாம்...”
வெகு விரைவில்...
Wow ...superb hameeda..congrats..blog il thodarnthu padhividuveergal thaane...?
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்கு மிக்க மனமார்ந்த நன்றிகள் சூர்யா. இப்போது நான் ப்ளாகில் பதிவுகள் கொடுத்தால், அது புத்தக விற்பனையை பெரிய அளவில் பாதிக்கும் பா. என்னுடைய இந்த தர்ம சங்கடமான சூழ்நிலையைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் பா. முழு கதையும் புத்தகமாக வாசித்து மகிழுங்கள் தோழி.
DeleteHi hameeda...Puthagam vaangi padikka mudiyuma endru theriyavillai pa...kadhai yai paadhi padithuvittu viduvadhu konjam kastam thaan pa...full story ai padikkum vaippu kidaikkum endru nambugiren...
DeleteCongratulations on your another Mike stone of your career....all the very best
ReplyDeleteThankyou so much for your lovely wishes and kind support vasanthi.
DeleteCongrats but engaluku blog il kidikuma?
ReplyDeleteThankyou durga! ப்ளாகில் வாசிக்க நீங்கள் சற்று காத்திருக்க வேண்டும் தோழி. புத்தக வடிவில் வாசித்து என்னுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் தோழி.
Deletecongrats,, blogil poda mateengala?pls consider pannugalen..nanga aarvamaka padithu kondu varukirom..pls..pls give ud.
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி நாகா. உங்கள் அனைவரின் ஆர்வத்தையும் கருத்தில் கொண்டு தான், புத்தக வேலையை விரைவு படுத்தினேன் பா. ஒவ்வொரு எபியாக தாமதப் படுத்திக் கொண்டிருப்பதற்கு முழுமையான புத்தகமாக கொடுத்து விடலாம் என்று எண்ணினேன். புத்தகம் வெளிவரும் வேளையில் ப்ளாகில் பதிவுகள் கொடுப்பது, விற்பனையை பெரிய அளவில் பாதிக்கும் பா. புரிந்து கொண்டு, எப்போதும் வழங்கும் ஆதரவை வழங்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன் தோழி.
DeleteCongrats for u.really nice story.
ReplyDeleteThankyou so much for your lovely wishes Subha Rajan.
DeleteCONGRATULATIONS, Shahi ! This is GREAT! Fifth novel getting published ! Definitely a milestone. Let's celebrate !! :-)
ReplyDeleteInnum, innum idhu pola pala puthinangal 'Hameeda' ennum kathasiriyar peyar thaangi veliyaaga, manam niraindha vaazhthukkal, Shahi !
Thankyou soooo soooo much for your lovely wishes Siva. நீங்கள் அனைவரும் வழங்கி வரும் கருத்துப் பகிர்வுகள் என்னை செதுக்கிக் கொள்ள இன்றியமையாததாக விளங்குகிறது பா. இதில் உங்கள் ஒவ்வொருவரின் பங்கும் மகத்தானது சிவா. Thanks for your love support beautiful feedbacks... இன்று போல் என்றும் நமது நட்பு எழுத்தின் வாயிலாக தொடர்ந்திருக்க இறைவனை பிராத்திக்கிறேன். Thanks much dear.
DeleteCongrats sis!
ReplyDeleteThankyou Aruna Vijayan.
DeleteCongrats
ReplyDeleteThankyou sindhu.
DeleteBut 15 updates complete panitu blog vasitha unga thozhils elam pavam illla epidi mid la vita sorry but I feel very bad
ReplyDeleteஇந்த ஸ்டோரி என்னால தொடர்ந்து பதிவுகள் குடுக்க முடியலை துர்கா. பப்ளிகேஷன் வொர்க்கும் சேர்த்து பார்க்க வேண்டியதா போச்சு. இதற்கு மேலும் டிலே பண்ண எனக்கு மிக சங்கடமாக இருந்தது... முழு கதையும் உங்களுக்கு கொடுக்கும் நோக்கிலேயே புத்தக வேலையை விரைவு படுத்தினேன். ஜூலை 21, புத்தகக் கண்காட்சியில் உங்களுக்கு புத்தகம் கிடைக்கும். புத்தகக் கண்காட்சிக்கு வர முடியாத பட்சத்தில் உங்களுடைய பிரதிகளை நீங்கள் இப்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம். http://www.marinabooks.com/detailed?id=5+7296
DeleteHai Hameedha, fifth storyum publish anathirku ennudaiya vaalthukkalpa,Salem books enga availablenu sollringala,I will try to buy it, appuram oru Kutti request, seventeenth epi varikumaavathu blockla kodungalen,please,men mellum vetri padikattukalil neengal nadai poda my hearty wishes
ReplyDeleteவாங்க வாங்க சுதா, உங்களைத் தான் தேடிட்டு இருந்தேன். அன்பான வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள் மா. சேலத்துல... ஓம் முருகா புக் ஷாப்பில் SS பப்ளிகேஷன்ஸ் வெளியீடுகள் அனைத்தும் கிடைக்கும் பா. ஹ ஹா, உண்மையா சொல்லனும்னா... எனக்கும் தொடர்ந்து பதிவுகள் கொடுத்து அதற்கான உங்களின் பின்னூட்டங்களைப் பெற்றுக் கொள்ள மிக மிக ஆவல் தான் பா. புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு புத்தக வெளியீட்டை விரைவுபடுத்த வேண்டியதாகிவிட்டது. ரமலானின் என்னால் பதிவுகள் கொடுக்க முடியாத நிலை ஆகிவிட்டது பா. உங்கள் எல்லோருக்கும் என்னை மிக நன்றாகத் தெரியும். கதையை முழுமையாக எழுதி முடித்து, சொன்னது போல வாரம் மூன்று பதிவுகள் கொடுக்கவே மிக விரும்புவேன். இந்தக் கதையில் அது முடியாமல் போய்விட்டதில் எனக்கும் மிக வருத்தம் தான் பா.
Deleteஆனால், புத்தக வடிவில் கதையை வாசித்த பிறகு நம்முடைய இச்சிறு வருத்தங்கள் காணாமலே போய்விடும் தோழி! உங்களுடைய பின்னூட்டத்திற்காக... மிக மிக ஆவலுடன் காத்திருப்பேன் சுதா.
உங்களுடைய அன்பிற்கும் தொடர்ந்த ஆதரவுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் மா.