Tuesday, July 11, 2017

நன்றி நட்புகளே!

பதினைந்தாவது பதிவுக்கு கருத்துக்கள் பதிவு செய்த தோழிகள்... srimathi gopalan; sa'ad lamia ; rani g ; suryamuki ; krithika ravishankar ; baladurga ; aruna vijayan ; siva ; sindhu ; sharmila natarajan ; flower eye ; crypt

மற்றும் முகநூலில் கருத்துக்கள் பதிவிட்ட தோழிகள் selvarani jagaveerapandian ; lakshmi perumal ; chitra ganesan ; kripnytha deepi ; jeni raghav ; parvathi vengadachalam ; alamelu mangai pattabiraman ; chitra kailash ; krithika raja ; usha suresh ; kayalvizhi ravi ; usha kannan ; kavirehabian

அனைவரின் அன்புக்கும்... அழகான பின்னூட்டங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

21 ஜூலை, 2017 அன்று சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் தொடங்கவிருக்கும் சென்னை புத்தகத் திருவிழாவில், இக்கதை புத்தகவடிவில் உங்களது கரங்களில் தவழவிருக்கும் காரணத்தால்... தற்காலிகமாக இதன் பதிவுகளை நிறுத்தி வைக்கிறேன் தோழிகளே! இதுவரை பதிவிடப்பட்ட அத்தியாயங்கள் தற்காலிகமாக நீக்கப்படும் என்பதையும் இப்பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். 


தொடர்ந்து முகநூலிலும் மின்னஞ்சலிலும், புத்தகம் எப்போது கிடைக்கும் என்று ஆர்வமாக விசாரிக்கும் தோழிகள் அனைவரின் அன்புக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். ஜூலை 21 ஆம் தேதிக்குப் பிறகு அனைத்து முன்னணி புத்தக நிலையங்களிலும் ஆன்லைன் புத்தக அங்காடிகளிலும் கிடைக்கும் தோழிகளே!

புத்தகத்தை உடனடியாகப் பெற முடியாத பல வெளிநாட்டு வாழ் தோழிகளின் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு, தகுந்த முன்னறிவிப்புகளுடன் ப்ளாகில் பதிவுகள் தொடர்ந்து வழங்கப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ப்ளாகிலும் முகநூல் மற்றும் shameeda0203@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும்  உங்களுடன் அளவளாவ ஆவலுடன் காத்திருக்கிறேன் நட்புகளே!

அன்புடன்
S. ஹமீதா.





    

Saturday, July 1, 2017

பேசும் மொழியிலெல்லாம்... புத்தக வடிவில்...






வாசக நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்.

21 டிசம்பர், 2016 - SS பப்ளிகேஷன்ஸின் முதல் வெளியீடான “யாரைக்கேட்டது இதயம்?” வெளியான தினம். அதன் பிறகான ஆறு மாதங்கள்... பதிப்பக வேலைகள் என் நேரத்தை விழுங்கிய ஆறு மாதங்கள்! மனதுக்குள் உதித்து, மூளையில் வடிவம் பெற்ற “பேசும் மொழியிலெல்லாம்...” எனும் இக்கதையை... எழுத்தில் வடிக்க முடியாமல் பல மனத்தடைகள் மற்றும் குழப்பங்கள்...

அனைத்தையும் தாண்டி, இக்கதையை ப்ளாகில் பதிவிடத் துவங்கிய பிறகு, நீங்கள் அனைவரும் வழங்கிய பேராதரவு மட்டுமே என்னை செலுத்தியது தோழிகளே!

ரமலான் நோன்பு காலத்தில் என்னால் தொடர்ந்து பதிவுகள் கொடுக்க முடியாத நிலையிலும், என்னுடைய சிரமங்களைப் புரிந்து கொண்டு... தொடர்ந்து எனக்கு பக்கபலமாக விளங்கிய வாசக, எழுத்தாள மற்றும் பதிப்பாளத் தோழிகளின் அன்பு என்னை நெகிழ்த்தியது.

இத்தகைய பேரன்புக்கு, என்னுடைய படைப்பை புத்தக வடிவில் விரைவாக வழங்கிவிடுவதே சிறந்த பிரதிபலிப்பாக இருக்க முடியும் அல்லவா நட்புகளே!

உங்கள் அனைவரின் உள்ளம் கவர்ந்த வெற்றிமாறன், நயனிகா மற்றும் ப்ரமோத்... உங்கள் இல்லம் தேடி வருகிறார்கள்!

நிறைந்த உள்ளத்துடன், மகிழ்ச்சி பொங்க வரேவேற்பு அளிப்பீர்கள் என்பது எனக்கு நிச்சயம்!

என்னுடைய முயற்சிகளுக்கு பக்கபலமாக விளங்கி, அனைத்தையும் சாத்தியப்படுத்திக் கொடுக்கும் வாழ்க்கைத் துணையை வழங்கிய ஏக இறைவனுக்கே புகழனைத்தும்!

“பேசும் மொழியிலெல்லாம்...”

வெகு விரைவில்...

Wednesday, June 21, 2017

கதையின் அடுத்த பதிவு குறித்த அறிவிப்பு

நலம் தானே நட்புகளே!

என்ன தான் முயற்சித்தாலும் கதையின் பதிவுகளை என்னால் தொடர்ந்து கொடுக்க முடியவில்லை தோழிகளே! ரமலான் இறுதிப் பத்தில் மார்க்கக் கடமைகள் அதிகம் என்பது ஒரு பக்கம்... பண்டிகைக்கான தயாரிப்புகள்.... வீடு painting என்று இன்னும் ஒரு ஜோடி கையும் காலும் இருந்தால் தேவலை என்று தோன்றுகிறது. எனவே, ரமலான் முடிந்த பிறகே பதிவுகளோடு வருகிறேன்.

தோழிகள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்கி "கலைந்து போன மேகங்கள்" கதையை rerun செய்திருந்தேன். rerun செய்த போதும் பெரும் வரவேற்பளித்து எனக்கு நம்பிக்கையூட்டியமைக்கு மிக்க நன்றி நட்புகளே!

ரமலான் முடிந்த பிறகு அக்கதையின் பதிவுகள் நீக்கப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். வாசிக்காதவர்கள், வாசிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

நன்றி.