தோழமைகள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்!
நலம் தானே நட்புகளே!
'நீ நதிபோலே ஓடிக்கொண்டிரு!' - ஹமீதா
சென்னை புத்தகக் கண்காட்சியில்...
ஆதித்யன் அருணாச்சலம் அனாயாசமாகக் கையாளும் கூடைப்பந்தைப் போலவே, இக்கதையை வாசிக்கவிருக்கும் வாசகர்களும், மயக்கத்திலிருக்கும் வஸ்துவைப் போல இக்கதையினுள் நுழைந்து வெளியே வர என்னுடைய அன்பான வாழ்த்துகள்!
===========================================
“ரோஜா! ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணு! கொஞ்ச நேரம் விளையாடினா தான் என் மைண்ட் ரிலாக்ஸ் ஆகும். நாம பேசலாம்... ஜஸ்ட் டென் மினிட்ஸ்!” என்று சொல்லிவிட்டு கோர்ட்டை நோக்கி ஓடினான்.
===========================================
“ரோஜா! ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணு! கொஞ்ச நேரம் விளையாடினா தான் என் மைண்ட் ரிலாக்ஸ் ஆகும். நாம பேசலாம்... ஜஸ்ட் டென் மினிட்ஸ்!” என்று சொல்லிவிட்டு கோர்ட்டை நோக்கி ஓடினான்.
மிகுந்த காதலுடன் அந்த ஆரஞ்சு வண்ணப் பந்தை கையில் எடுத்துக் கொண்டான். அவனுடலின் ஒவ்வொரு செல்லிலும் உற்சாகம் ததும்பி வழிந்ததை அவளால் தரிசிக்க முடிந்தது.
“ஜீசஸ்! ஹவ் மச் ஹி லவ்ஸ் தி கேம்!” அவளுடைய உதடுகள் தன் போக்கில் முணுமுணுத்தன.
அந்தப் பந்து அவனுடைய கைகளில், அவன் சொன்ன சொல்லைத் தட்டாமல், சமத்துக் குழந்தையைப் போல அடிபணிவதையும், கிட்டத்தட்ட ஒரு செப்பிடு வித்தைக்காரனைப் போல அவன் அதனை ஆட்டி வைப்பதையும் வழக்கமான ஆச்சர்யத்துடனே பார்த்திருந்தாள் மெலனி.
அனாயசமாக பாலை ட்ரிபிள் (dribble) செய்தபடியே தன்னுடைய நீளமான கால்களால் ஓடியவன், க்ஷண நேரத்தில் நூற்றெண்பது டிகிரி கோணத்தில் திரும்பி சட்டென்று பந்தை, கூடையை நோக்கி வீசினான். அது ஏதோ மயக்கத்திலிருக்கும் வஸ்துவைப் போல கூடைக்குள் நுழைந்து வெளிவந்தது.
===============================================
===============================================
'எல்லாப் புகழும் இறைவனுக்கே!'
என்றென்றும் அன்புடன்
ஹமீதா
ஹமீதா
முன்னோட்டமே அமர்க்களம் madam.. கூடைப்பந்தை பிரித்து மேய்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.. மயக்கத்திற்கு செல்ல காத்திருக்கிறேன் 👍👍
ReplyDeleteThank you so much dear. Sorry for being so late in replying you.
DeleteCan we expect this in amazon kindle?
ReplyDeleteYes ma. Planning to upload tomorrow. Will post as soon as the link goes active. Thanks for your good support.
Delete"நீ நதி போலே ஓடிக்கொண்டிரு" - சமூக பிரச்சனைகளை எப்போதும் நேர்மையாக எடுத்து சொல்லும் ஹமீதாவின் அடுத்த லெவல் கதை
ReplyDeleteமுன்னுரையை பார்த்து கூடை பந்தை பற்றிய பத்திரிகை செய்தி, அதன் பின்னே உள்ள அரசியலை பற்றி மட்டும் தான் நினைத்தேன்.. செம்மரம், மைக்ரோ பைனான்ஸில் ஆரம்பித்து இந்திய பொருளாதாரம், இந்திய அரசியல் வரை எத்தனை current events.. அனைத்தும் உங்களுக்கே உரிய பிரத்யேகமான நேர்மையான ஸ்டைலில் 'செஞ்சிடீங்க'👍 ( பாவம் ராஜா சார் ராயல்டியை கூட விட்டு வைக்க வில்லை ☺️☺️)..
அதித்யன் அருணாச்சலம் - zeroவில் start செய்து அவன் எட்டும் உயரம் அசாத்தியம்.. அம்பேத்கர், அப்துல் கலாம், கூடைப்பந்து, பொருளாதாரம், அரசியல் என்று எல்லாம் கலந்த கலவையாக what a characterization.. அவ்வளவு ரணமான childhood யாருக்கும் வர கூடாது.. கலைவாணியை நீங்கள் விவரித்த விதம், அவள் சிரிப்பு, பசி, தூளியில் இருந்து எட்டி பார்ப்பது எல்லாம் நேரில் காண்பது போல இருந்தது, பல இடங்களில் கண்கள் கலங்கியது. உங்கள் descriptionலேயே இட்லிக்கு நீங்கள் சொன்ன விறகு புகை, மந்தாரை இலை வாசம் எல்லாம் என்னால் நுகர முடிந்தது..
மெலனி ரோஸ் என்ற பெயரை படிக்கும் போதே எதற்கு இந்த பெயர் என்று ஏதோ ஒரு இனம் புரியாத கவலை இருந்தது.. அவளை பற்றி முழுதாக தெரியும் முன்பே அவள் angel தான் என்று தானாகவே உணர முடிந்தது.. தேவதை போன்றவளுக்கு ஏற்ற அப்பா பெயராக கேப்ரியல்.. அவருக்கு நெகட்டிவ் side இருந்தாலும் ஏனோ அவர் மேல் அவ்வளவு வருத்தம் வரவில்லை..
என்ன chemistry இருவரிடமும்.. love failure ஆன மாதிரியா இருக்கீங்க என்று வடிவு கேட்கும் இடத்தில் எனக்கும் அதே கேள்வி தோன்றியது.. அழகான கவிதை போல இருந்தது அந்த காதல்.. அவ்வளவு அழகு..
சின்ன சின்ன விபரங்களில் கூட நீங்கள் எடுத்த சிரத்தை செம்ம👌 (நீலகிரி expressக்கு இரண்டாம் platform போட்டது வரை) ஒவ்வொரு வரியும் engaging ஆக இருந்தது எதையும் miss பண்ண முடியல..
Politics மீதும் politicians மீதும் இருக்கும் நம்பிக்கை youngstersஇடம் குறைந்து வரும் வேளையில் political academy போன்ற சிந்தனைகள் நிச்சயம் அவசியம்.. ஒரு அரசு துறையை தலைமை ஏற்பவர்களுக்கு துறை அறிவு அவசியம் என்ற உங்கள் ஆதங்கம் மிக சரி..hats off for such a bold effort 👍👍..
Second partku ஆவலுடன் waiting.. பி.கு:- களைவாணியின் குழந்தை பருவமும் மிக கொடுமை தான் அவளுக்கு நல்ல ஹீரோவாக போடவும் ☺️
Hi Anu,
DeleteFirst of all, I'd like to apologise for being so late in replying you.
As usual, உங்க feedback வேற லெவல். அனைத்து விஷயங்களையும் மிக நுணுக்கமாக உள்வாகியிருக்கீங்க. நான் போகிற போக்கில் எழுதிய நீலகிரி எக்ஸ்ப்ரெஸ் இரண்டாவது பிளாட்பார்மைக் கூட விடாமல், உங்கள் விமர்சனத்தில் குறிப்பிட்டிருப்பது என்னை நெகிழச் செய்கிறது.
யெஸ். பாலிடிக்ஸ் மீதும் politicians மீதும் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது என்று சொல்வதை விட, அறவே நீர்த்துப் போய்விட்டது என்று சொல்வது சரியாக இருக்கும்.
இன்ஷா அல்லாஹ் விரைவில் அடுத்த பாகத்துடன் வருகிறேன்.
உங்கள் அன்புக்கும், கருத்துகளை ஆழமாக எடுத்து வைக்கும் சிரத்தைக்கும் என்றென்றும் என்னுடைய அன்பும் நன்றிகளும்.
Loved this book of yours so much mam....the kind of love between Aadhi and Roja is indescribable......Eagerly waiting for the next part
ReplyDelete