"மறப்பேன் என்றே நினைத்தாயோ! - ஹமீதா"
42 வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில், உங்களுடைய உணர்வுகளுடன் நேரடி உரையாடல் நிகழ்த்தக் காத்திருக்கிறது!
ஸ்டால் விவரங்கள் அடுத்த டீஸரில்...
#முன்னோட்டம் - 1
============================================
பெற்றோரிடம் பேசி விட்டதில் உண்மையில் மிக ஆசுவாசமாக இருந்தது. 'அப்பா இருக்கேன் மா!' என்ற தந்தையின் ஆத்மார்த்தமான அன்பு வார்த்தைகள், யானை பலம் தந்தன.
============================================
பெற்றோரிடம் பேசி விட்டதில் உண்மையில் மிக ஆசுவாசமாக இருந்தது. 'அப்பா இருக்கேன் மா!' என்ற தந்தையின் ஆத்மார்த்தமான அன்பு வார்த்தைகள், யானை பலம் தந்தன.
அதற்குள் ஜீவன் லைனில் வந்தான்.
"யமுனா..." என்றான்.
"சொல்லு ஜீவன்! உங்க மாமா கால் பண்ணியிருக்கார். நான் இன்னும் பேசலை! என்ன பேசட்டும்? குழப்பமா இருக்கு ஜீவன்!" என்றாள்.
"குழம்பறதுக்கு ஒண்ணும் இல்ல யமுனா! முன் வெச்ச காலை பின் வைக்க முடியாது. சோ, வி ஹேவ் டு கோ அபவுட் இட்!" என்றவன், "இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பி வரேன். அதுக்குள்ள நீ உன்கிட்ட இருக்கிற எவிடென்ஸ் எல்லாம் அனுஷா கிட்ட சொல்லி பிரிண்ட் அவுட் எடுக்கச் சொல்லு. கமிஷ்னர் ஆபிஸ்ல போய் ஹார்ட் காப்பி எவிடென்ஸ் ஹாண்ட் ஓவர் பண்ணிட்டு வந்துடலாம்." என்றான்.
"சரி!"
"அப்புறம் கிஷோரை ரிமாண்ட் பண்ணிட்டாங்க. ஒரு செக்ஷன் நான்-பெய்லபிள்! ஒண்ணும் பண்ண முடியல!" என்றான் மெல்ல.
அவள் பதில் பேசாமல் மெளனமாக இருந்தாள்.
"ஃபீல் பண்றயா யமுனா?" அவளின் அமைதி அவனை அவ்வாறு கேட்க வைத்தது.
"நோ நோ... இன்னைக்கு இல்லைன்னா நாளைக்கு இதைப் பண்ணித்தான் ஆகணும் ஜீவன்." என்றாள் வேகமாக.
"இப்போதைக்கு மாமாவோட பேச வேண்டாம் யமுனா! ரொம்ப பேட் ஸ்டேட் ஆப் மைண்ட்ல இருக்கார்!" என்று அவன் சொல்ல ‘சரி’ என்று கேட்டுக் கொண்டாள்.
“யமுனா!”
“ம்ம்!”
இப்போது அவள் ஜன்னலருகே வந்து நின்றிருந்தாள். ஜன்னல் கிழக்கைப் பார்த்தபடி அமைந்திருந்ததால் இளம் வெயில் இதமாய் மேனியை வருடியது. முகத்தில் பட்ட கதிரவனின் ஒளிக்கீற்று அவளுள் ஏதோ ஒருவகை நம்பிக்கையின் கீற்றையும் சேர்த்தே தோற்றுவித்தது.
“இன்செக்யூர்டா ஃபீல் பண்ணாதே ப்ளீஸ்!" என்றவன் மெலிதாகத் தயங்கினான்.
"நான்… நான் இருக்கேன்! அப்படியெல்லாம் உன்னை அந்தரத்துல விட்டுட்டுப் போக மாட்டேன்!” என்றான் தழைந்த குரலில்.
குரல் தழைந்திருந்தாலும் அதிலிருந்த உறுதியும் நேர்மையும் அவளை அசைத்துப் பார்த்தன.
ஜன்னலின் கம்பிகளைப் பற்றியபடி ஒரு கணம் கண்மூடி நின்றாள் யமுனா. வாழ்வின் எல்லை வரையிலும், இந்த உணர்வு மிகுந்த குரலும், அது தரும் நினைவுகளும், பாதுகாப்புணர்வும், உடன் வரும் என்பது அவளுக்குப் புரிந்தது.
‘இது போதும்!’ என்றிருந்தது.
‘இது போதும்!’ என்றிருந்தது.
“தெரியும் ஜீவன்! சில விஷயங்கள் நீ எனக்குச் சொல்லணும்னு அவசியமில்லை. ஐ நோ!” என்றாள்.
அவன் மீதான அவளது நம்பிக்கையில் அவன் மறுமுனையில் திகைத்திருப்பது அவளுக்குப் புரிந்தது.
“சீக்கிரமா கிளம்பி வா!” என்று வழக்கம் போல அவள் மிடுக்காக உரைக்க, அவன் புன்னகையுடன் இணைப்பைத் துண்டித்தான்.
===============================================
===============================================
உங்கள் அனைவரின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...
அன்புடன்,
S. ஹமீதா.
S. ஹமீதா.
மறப்பேன் என்றே நினைத்தாயோ..
ReplyDeleteபடிக்கும் யாராலும் மறக்க முடியாத அருமையான கதை..
உங்கள் முன்னோட்டத்தை படித்து விட்டு தலைப்பை வேறு அர்த்தத்தில் புரிந்து வைத்திருந்தேன் தலைப்பிற்கான காரணம் சொல்ல பட்ட இடம் கவிதை..
உங்கள் பிற கதைகளிலும் suspense plot whether big or small அங்கங்கே பார்த்திருக்கிறேன், உங்கள் முன்னோட்டங்களையோ மற்ற தோழிகளின் போஸ்டகளையோ படிக்காமல் நேரே கதையை படிக்கும் யாராலும் எளிதில் கண்டுகொள்ள முடியாது.. இந்த கதை ஆரம்பம் முதல் கடைசி வரை அவ்வளவு பதை பதைப்பு விறு விறுப்பு கைதேர்ந்த thriller போல குடுத்திருக்கீங்க எங்கேயும் தொய்வு வரவே இல்லை..
பொழுதுபோக்கு கதை போல இல்லாமல் ஏதோ ஒரு சமூக பிரச்னையை மையமாக வைத்தே உங்கள் அத்தனை கதைகளும் இருக்கின்றது that too not a small one, all issues are really big and important that requires immediate attention..
யமுனாவின் பாத்திரத்தை admire பண்ணாமல் இருக்க முடியவில்லை கதாநாயகியின் இலக்கணங்கள் என்று எப்பொழுதும் சொல்லப்படும் குணாதிசயங்கள் எதுவும் இல்லாமல் உள்ளது உள்ளபடி எவ்வளவு natural..ecosport க்கே உதட்டை பிதுக்குவதில் ஆரம்பித்து பட்ட அடியில் சுய அலாசலில் இறங்கி தனக்கு தண்டனை கொடுத்து கொள்வது வரை என்ன ஒரு gradual transformation, really good could not stop admiring..
மறுமணத்தை உங்களை விட இயல்பாக இனிமையாக யாராலும் கூற முடியாது.. just love you for that thought process madam.. அதென்ன சந்தடி சாக்கில் me too வை கலாய்த்து விட்டு அடுத்த பத்தியிலேயே அந்தர் பல்டி 😊 செம்ம மேடம்.. உங்களால் மட்டுமே இப்படி எல்லாம் படிப்பவர்களை engage பண்ண முடியும்..
96 பற்றி ஏற்கனவே நீங்கள் குடுத்த அருமையான விமர்சனம் பல தடவை படித்திருக்கிறேன்.. இதில் இன்னும் அருமை..'நிம்மதியா இருக்கேன் ஆனா சந்தோசமா இருக்கேனானு தெரியல'வசனம் அதன் அர்த்தம் உணர்ந்த பலருக்கு புரியும்.. யமுனாவின் பாத்திரம் அந்த வசனத்தில் இருந்தே நேரடியாக உருவானது போல ஒரு feeling.. very painful..
ஜீவா பற்றி ஆரம்பத்தில் இருந்தே எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.. அருமையான பாத்திர படைப்பு.. நாயகியின் மனம் புரிந்தாலும் அவளை confuse பண்ணி அழ வைத்து கடைசியில் நின்று அடிப்பது எல்லாம் no words to explain இந்த அன்பிற்கு இவ்வளவு நாள் பட்டது எல்லாம் really worth waiting என்பது போல ஒரு feeling..
அங்கங்கே கேள்வி பட்டது போல feel இருந்தாலும், மறப்பேன் என்றே நினைத்தாயோவின் கருவும் நோக்கமும் முற்றிலும் வேற வேற level.. excellent story madam keep rocking.. all the best👍👍