Tuesday, January 2, 2018

நிழல் போலவே நின்றாய்! - முன்னோட்டம்




============================================================================
“ஹையோ! இந்த ரெடிமேட் டெயிரி வைட்னரும் இன்ஸ்டண்ட் காபி பௌடரும் போட்டுக் குடிச்சு என் நாக்கே செத்துப் போச்சு.” புலம்பியபடியே காபி தயாரித்துப் பருகிய வேளையில் ப்ரமோத் அழைத்தான்.

“என்னோட ரூமுக்கு வா, பேசணும்!” என்றான். நேரம் மாலை ஏழு மணியைக் கடந்திருக்க, அவளுக்கு உண்மையில் மனதும் உடலும் மிக அலுப்பாக இருந்தது. “என்ன விஷயம்ன்னு ஃபோன்லயே சொல்லுங்க. பொண்ணு செமையா இருந்துச்சு... கங்ராட்ஸ் ப்ரமோத்!” என்றாள் வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன்.

“ஆமா, எனக்குப் பார்த்த பொண்ணு செமையா தான் இருக்கும்! உனக்கு நீயே கங்ராட்ஸ் சொல்லிப்பியா?” என்று ஏதோ பூடகமாகப் பேசியவன், “இப்ப நீ வரலைன்னா, நான் அங்கே வந்து உன்னைத் தூக்கிட்டு வருவேன்... செய்ய மாட்டேன்னு மட்டும் நினைக்காதே!” என்றான் மிரட்டலாக.

“தோடா! நீங்க தூக்கிட்டுப் போனா, நாங்க அப்படியே அமைதியா இருப்போமா? கத்தி ஊரைக் கூட்டுவோம் இல்ல... எந்தக் காலத்துல இருக்கீங்க?” என்றாள், குரலில் கொஞ்சம் ரௌடித்தனத்தைப் பூசிக் கொண்டு.

“உதயாஆஆ! முக்கியமா பேசணும்!” என்றான் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு.

“ஹ்ம்ம்! அப்படி வாங்க வழிக்கு! டென் மினிட்ஸ்ல வரேன்.” என்றாள் அமைதியாக.

‘எனக்கு பயப்படாம, அப்பப்ப எட்டிப் பார்க்கிற இந்த துடுக்குத்தனம் தான் என்னை இப்படி இம்ப்ரெஸ் பண்ணுதோ?’ என்றெண்ணியபடி, மாலையில் சந்தித்த பெண்ணை நினைவில் கொண்டு வர முயன்றான். “நல்ல பொண்ணு தான்! நல்ல மரியாதையான குடும்பம்! பட், எனக்கு ஹோம்லியா இருந்தா பிடிக்கும்னு அப்பா சொன்னதா வாயை விட்டாங்க... ஹ ஹா! என்னோட டேஸ்ட் என்னன்னு அப்பாவுக்கே சரியா தெரியாது!” அவன் சிரித்துக் கொண்டான்.

அவள் கிளம்பி வெளியே வந்தபோது பார்த்தால், மழை ‘சோ’வெனப் பெய்து கொண்டிருந்தது. மீண்டும் கதவைத் திறந்து குடையை எடுத்து வருவதற்கு சோம்பலாக இருக்க, “அதான் ஜாக்கெட் போட்டிருக்கேனே... லெட் மீ என்ஜாய் தி ரெயின்!” ஜாக்கெட்டின் வின்டர் கேப்பை தலை நனையாத வண்ணம் பொருத்திக் கொண்டு, ‘அப்படியே ஜாக் பண்ணிட்டே போய்ட வேண்டியது தான்!’ ஊசியாய் இறங்கிய மழைநீர் முகத்தில் முத்து முத்தாய்க் கோலம் போட, ‘தட் தட்’ என்று ரிதமிக்காக ஜாக் செய்தபடி, அவனுடைய அறையின் பாதி வழியை அடைந்து விட்டாள்.

“நான் நினைச்ச மாதிரியே மழைல நனைஞ்சிட்டு வர்ற! எல்லா ரூம்ஸ்லயும் வார்ட்ரோப்ல அம்ப்ரெல்லா ப்ரோவைட் பண்ணிருக்கோம்.” என்றபடி குடையுடன் வழி மறித்து நின்றான் ப்ரமோத். 

“நல்லவேளை வந்தீங்க! ஏதோ ஆர்வக் கோளாறுல மழையை என்ஜாய் பண்ணலாம்னு நினைச்சுக் கிளம்பிட்டேன். எப்பா! ஒவ்வொரு துளியும்   ஊசியா இறங்குது...” முகத்தில் வழிந்த நீரைத் துடைத்தபடி, ஆவலாய்க் குடைக்குள் நுழைந்து கொண்டாள். அவளது மேனி மெலிதாய் நடுங்குவது அவனுக்குத் தெரிந்தது. வட்ட வடிவ சிமெண்ட் கற்கள் சீராகப் பதிக்கப்பட்ட புல்வெளிப் பாதையில்... சோவெனப் பெய்த மழையில்... நனைந்தும் நனையாமலும் நடுங்கிய  உடலுடன்... அவனின் தோளோடு தோள் உரச, ஒற்றைக் குடையினுள் நடந்து சென்ற அந்தப் பேரின்ப நிமிடங்கள், அவள் சேமிக்கத் தேவையில்லாமல், அதுவாகவே அவளது நெஞ்சத்தில் ஆட்டோ சேவ் ஆகியது.
===========================================================================
"நிழல் போலவே நின்றாய்!" இன்னும் சில தினங்களில் புத்தக வடிவில் உங்கள் அனைவரின் மனம் வருடிச் செல்லக் காத்திருக்கிறது நட்புகளே!

என்றும் போல் இன்றும் உங்கள் அனைவரின் நல்லாதரவும் வேண்டி...

அன்புடன்
S. ஹமீதா.

7 comments:

  1. Hai hemmda mam, eppo update pannuvinga, ithu new novala,we are online readers, that is the reason i am asking you, thank you so much for new novel, ithu 2 parta, we very excisting, happy new year.
    bye, vidhya.

    ReplyDelete
    Replies
    1. Hi Vidhya,
      Thank you for your lovely New Year wishes. I wish the same to you.

      'நிழல் போலவே நின்றாய்!' நேரடி புத்தகமாக வெளிவருகிறது. புத்தகம் வெளிவந்து மூன்று மாதங்கள் கழித்தே ஆன்லைனில் அப்டேட் கொடுக்க முடியும் மா. மார்ச் மாதத்தில் e-book வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான அறிவிப்புகள் ப்ளாகில் பதிவு செய்யப்படும். உங்களுடைய ஆர்வத்துக்கும் தொடர்ந்த ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகள் மா!

      Delete
  2. Wow super. But we need the end book version as early as possible

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய ஆர்வத்துக்கு மிக்க நன்றி crypt. மார்ச் மாதத்தில் e-book version வந்துவிடும் என்று எண்ணுகிறேன். பேசும் மொழியிலெல்லாம் கதைக்கான தங்களின் அழகான பின்னூட்டத்திற்கு இன்னமும் பதில் போஸ்ட் செய்யவில்லை. தாமதத்துக்கு மன்னிக்கவும். விரைவில் போஸ்ட் செய்கிறேன். நன்றி.

      Delete