Monday, January 15, 2018

பேசும் மொழியிலெல்லாம் - எழுத்தாளர் இஷிதா அவர்களின் விமர்சனம்

ரொம்ப நாளா முழு நீள ரிவ்யூ கொடுக்கணும்னு ஆசை.. அந்த ஆசைக்கான பிள்ளையார் சுழியை உங்களோட “#பேசும்மொழியிலெல்லாம்” கதைக்கு போட்ருக்கேன்..

அது மட்டுமில்லை இதுல ஒரு சின்ன சுயநலமும் இருக்கு அது என்னவென்றால் இந்த பவி @Pavithra Narayanan இருக்குற எல்லா கதை ஹீரோவையும் எனக்கு அண்ணன் முறைனு சொல்லியே ஆஃப் பண்ணிடுறா.. இப்போ அண்ணன்களோட லிஸ்ட்க்கு அடிஸனல் சீட் கேட்டிருவாளோன்ற பயத்துல எனக்கு பிடிச்ச ஹீரோவை புக் பண்ண நானே களத்துல குதிச்சுட்டேன்
(பவி செல்லோ உனக்கு முன்னாடி நான் ரிவ்யூ போட்டுட்டேன் சோ எனக்கு தான் முன்னுரிமை )

பிரமோத் (செல்லக் குட்டி):
ஒரு சிலரை பார்க்க பார்க்க தான் பிடிக்கும்னு சொல்ற மாதிரி.. பார்க்க பார்க்க பிடிச்சு போற ஆளு நம்ம பிரமோத்..😍😍
ஆசைப்பட்ட எந்த விஷயத்தையும் கைப்பற்றிக்குற ஒரு பின்புலத்துல பிறந்து வளர்ந்தவன், தான் ஆசைப்பட்ட, நேசிச்ச நயனியை விட்டு கொடுத்ததுக்கு ஓரே ஒரு காரணம் தான் அது அவன் நயனி மேல வச்ச காதல்..! நீங்க சொன்னது மாதிரி பல படிகளுக்கும் மேலான உன்னதம்..
மூவியில ஒரு டயலாக் இப்படி வரும் “நமக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பொருள், நம்மகிட்ட இருக்கதை விட இன்னொருத்தர்கிட்ட இன்னும் பத்திரமா இருக்கும்னா அதை விட்டு கொடுக்குறதுல தப்பு இல்லைனு” அப்படி விட்டு கொடுக்குறது வலி தான் ஆனாலும் அதையும் தாண்டி அந்த பொருளோட பாதுகாப்பை நினைக்குறப்போ சின்ன சந்தோஷத்தோட ஒரு மன திருப்தி இருக்கும்ல அது வலியோட ரணத்தை குறைச்சிடும் ..பிரமோத்தும் அதை தான் செய்துருக்கான்னு தோணுச்சு..

“வில்”லனோ அப்படினு நினைக்குற மாதிரி கதையில் நுழைஞ்சாலும் கடைசியில எல்லார் ஹார்ட்லயும் அம்பு விட்டது என்னவோ இந்த ஸ்வீட் ‘வில்’லன் தான்..!😘😘😘

வெற்றி:
இவனை பத்தி என்ன சொல்றது … சிலரை பார்த்ததுமே நமக்கெல்லாம் பிடிச்சிடும் .. அந்த மாதிரி கேரக்டர் தான் வெற்றி.. நம்ம வீட்டுல இருக்க அண்ணனோ (ச்ச இந்த பவி சொல்லி சொல்லி எனக்கு அண்ணன்னே வருது). ஒரு அத்தைப் பையனோ இல்லை மாமா பையனோ இருந்தா இந்த மாதிரி இயல்பா தானே இருப்பான் ..அவன் மேல ஒரு பிடித்தம் தானா வந்திடும்ல அது போல வெற்றியை பார்த்ததும் பிடிச்சிடும் எல்லாருக்கும்..
எந்த ஒரு நிலையையும் கஷ்டப்பட்டு முட்டி மோதி தான் அடைய முடியும்ன்ற சூழ்நிலையில இருக்க ஒருத்தன் தனக்கு கிடைச்ச ஒவ்வொரு வாய்ப்பையும் நழுவ விடாம இருக்க ஒவ்வொரு அடியையும் எவ்வளோ நிதானமாக எடுத்து வைப்பானோ அந்த நிதானம் அவனோட ஆர்ப்பாட்டமே இல்லாத அழகான காதலா இருக்கட்டும், திருமணத்தை நடத்திக்கிட்டதாகட்டும், ப்ரோமோத்கிட்ட நடந்துகிறதாகட்டும் வெற்றியோட ஒவ்வொரு செயலிலும் அது பிரதிபலிச்சுது.

நயனிகா:
பெரியவங்க செய்ற செயலோட விளைவு எல்லாம் சின்னவங்க தலையில் விடியும்னு சொல்ற மாதிரி, கார்த்தியோட சுயநலமான முடிவுகளோட விளைவு எல்லாம் நயனி தலையில் வந்து விழுந்திருச்சு.. நடுத்தர வர்க்கம் சந்திக்கிற பிரச்சனைகள், மனகசப்புகள், பணத்தேவைகள்னு ஒருவித மனப்புழுக்கதோட வாழ்க்கையை நகர்த்திக்கிட்டு இருக்க நயனியின் வாழ்வில் சிலிர்க்க வைக்கும் தென்றலாய் வெற்றியின் வருகை, அவனது காதல்..!

கதையில் வர்ற மற்ற கதாபாத்திரங்களும் நிறைவா கதையோட பொருந்தி இருந்தாங்க.. இப்படி அழகான ஹீரோக்களை கொடுத்து இரண்டு பேருக்கும் இடையில எங்களை இப்படி ஆட்டம் காண வச்சுட்டீங்களே ஹமீதாக்கா அவ்வ்வ்.. இருந்தாலும் வெற்றியோட கையை நயனி பிடிச்சுக்கிட்டதாலே, நாங்க எல்லாம் பிரோமோத்தோட கை கோர்த்துக்குறோம் ஹி ஹி ஹி😂😂😂😂

(ரிவ்யூ கொஞ்சம் அப்படி இப்படி இருந்தா அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க ஹமீ அக்கா)

இந்த அழகான கதை என் கையில் கிடைக்க செய்ததற்கு நன்றி சிபி அண்ணா, ஹமீதா அக்கா

பேசும் மொழியிலெல்லாம் - எழுத்தாளர் பவித்ரா நாராயணன் அவர்களின் விமர்சனம்

வெற்றி வெற்றி வெற்றி..!!!...என் கனவுகளின் நனவாய்….! நிழலின் நிஜமாய்….!!இப்படி இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்னு ஆசையை அழகா கவிதையாக சொல்லிடீங்க….சுமந்த ஆக்ஷன் ஹீரோன்னா…வெற்றி திரும்ப திரும்ப பார்த்து ரசிக்க கூடிய ஒருத்தர்……….அதுவும் என் ஊர்ர்கார அண்ணாவாக(இந்த இட்த்துல எல்லாரும் ஷாக் ஆவீங்கனு தெரியும்….ஆனா வேற வழியில்லை…என்னதான் 233 பேஜ் வரைக்கும் வெற்றி மீது லவ்வோ லவ் இருந்த போதிலும் வெற்றி எனக்கு அண்ணா முறையானதா ப்ரமு செல்லம் மாமா முறையாவர்…அதான்) போயிட்டார்……அன்னிக்கு அந்த கதை படிச்சு நான் எவ்வளவு ஹாப்பி பரவசம்னு வார்த்தையால சொல்ல முடியாது….ரஞ்சுவோட காதை பஞ்சர் ஆக்கிட்டேன் நான்….ஆனா அந்த துரோகி நான் ஊர்ல இருந்த நேரமா பார்த்து என் ப்ர்மோதுக்கு பட்டா போட பார்த்திருக்கா…சில்லி கேர்ள்..ப்ரமோதை நான் கரெக்ட் செஞ்சு பல நாள் ஆகுதே..எனக்கு ஒரு கதை படிச்ச உணர்வே இல்லை….ஒரு கவிதை..திரும்ப திரும்ப படிக்க வைக்கிற ஒரு அழகியல்…மிக மிக மிக எதார்த்தமாக உள்ள ஒரு கதை..அதுவும் ரசனையாக இருந்த கதை……இது வரலாற்று நாவல் இல்லனாலும் வரலாறாகும் ஒரு நாவல் தான்..கண்டிப்பா.DEMONITISATION பத்தி அவ்வளவு எதார்த்தமா பட்ட பாடுகளை தெளிவா சொல்லியிருக்கீங்க….அப்புறம் ரகு ப்ரீத்தி பாப்பா விசயம் இதயம் நின்று துடித்த்து…..சமூக சீர்கெட்டை அழுத்தமாய் மனதில் பதியும் வகையில் அழுத்தம் தராத வகையில் படைத்திருப்பது அழகு..பேரழகு…!! லிஃப்ட் சின்னத்தில் நிற்கும் வெற்றிக்கு நான் ஓட்டு போடுறேன்…வெற்றிமாறன் போல் ஒரு ஹீரோவை நான் இதுவரை எக்கதையிலும் கண்டதில்லை…அவ்வளவு ஸ்வீட்……அதுவும் அவன் பாரதியை ரசிக்கிற இட்த்துல நான் வெற்றியை ரசிச்சேன்….அவன் நயனிகாவை விரும்பது கவிதை..நயனியை ரொம்ப பிடிச்சது….அந்த பெண்ணொட பொறுமை……தியாகம் எல்லாமே சூப்பர்….கார்த்திகா….சைத்தான் கி பச்சா….! முன்பெல்லாம் பெண்களை வில்லிகளாக சித்தரித்தாள் கோவம் வரும்..ஆனால் இப்போது அப்படிப்பட்ட பெண்களை நானே பார்ப்பதால் கோவமும் இல்லை கோவக்காயும் இல்லை..என்ன பெண் என்று தான் நினைக்க தோன்றியது..ஆனால் அப்ப்டிப்பட்ட சுய நல வாதிகள் உள்ளார்கள் என்பது நிதர்சனம்…!!ப்ரசாந்த் நல்ல புள்ள…..மோகன்ராம் சராசரி தந்தை.கடைசில கடனை அடைப்பது மகிழ்ச்சி….நயனியோட தலையசைப்பில நானும் விழுந்துட்டேன்…….கவித்துமான ஒரு காதல் கதை இது…ப்ரமோத் உன்னதம் பேரின்பம் பேரான்ந்தம் எல்லாமே என்ர மாமனுக்குக்குதான் பொருந்தம்..எனக்கு பிடித்த இரு உள்ளங்களுக்கு என்னால் சிறு வலியும் வரக்கூடாதுன்னு நினைக்கிற அந்த பரந்த மனசு…….மனுசன் டா நீ…பெரிய மனுசன்……..எனக்கு வேற பொண்னை நினைச்சாலே பிடிக்காது…..ப்ரமோத் என்னதான் பெரிய ஆளா இருந்தாலும் பெருசா கவரல…..ஆனா அன்டஹ் 236 ஐ திங்க் சோ அங்கேயே மொத்தமா என் இதயம் அவன் வசத்தில்..சோ கரெக்டா என் செல்லத்தை என்னிடம் கொடுத்து விடுங்கள்…..இல்லாவிட்டால் பின்விளைவுகள் பயங்கரம் aunty….அதுவும் ரஞ்சிக்கு தரேன்னு எப்படி சொல்வீங்க….?....அப்புறம் aesthetic sense ல எனக்கு ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் வேணும்….அதை நினைவில் வைச்சிக்கோங்க…….மஞ்சள் தண்ணீர் வரும் மெட்ரோ வாட்டராகட்டும்……..மொத்தமாக சென்னையை அலசி வீட்டீர்கள்..ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்டாக இருக்கும் என்னை சீக்கிரமாக கூல் கூலர் கூலஸ்டாக மாற்றி விடுங்க..சீக்கிரமே ப்ர்மு புக்கா வரனும்..ரொம்ப ரொம்ப ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் தீவிரமான தீவிர்வாதி காதலியோட கட்டளை…அண்ட் தஞ்சாவூர் பசங்க எப்போவுமே தங்கமான பசங்க தான் வெற்றியும் சரி ப்ரமோதும் சரி..இந்த ரைட்டர் மக்களெல்லாம் எப்போவுமே மதுரைபாய்ஸ் வைச்சு எழுதுவாங்க....நீங்க மாத்தியெழுதியதற்கு மிக்க நன்றி.இன்னும் இன்னும் பெஸ்டாக கதைகள் தர வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்….அதுவும் எல்லா ஹீரோவையும் உரிமையை எனக்கே தர வேண்டும்….செம கதை..சான்சே இல்லை..படிக்கலன்னா அவங்களாம் நைட் சாப்பிடவே கூடாது….மீண்டும் அடுத்த மாசம் படிக்க போறேன் நானு….
பேசும் மொழியெல்லெல்லாம் இதயத்தோடு இதமாக இசையாக பேசி செல்கிறது….உங்க கதையைப் படிப்பது பேரான்ந்தம்னா ரிவியு போடறது பரமான்ந்தம்….
ப்ரியங்களோடு
பவித்ரா நாராயணன்.
Image may contain: 2 people, text

யாரைக்கேட்டது இதயம் - எழுத்தாளர் உமா தீபக் அவர்களின் விமர்சனம்

ஹமீதா அக்கா இந்த கதையை பத்தி என்ன சொல்லுறதுன்னே தெரியல .

அவ்வளவு அழுத்தமான கதை , ஹீரோ ஹீரோயின் கதாபாத்திரம் மட்டும் அழுத்தமா கொடுக்காமல் எல்லோரோட ரோல் செம perfect ஆக கொடுத்ததற்கு முதலில் என் வாழ்த்துக்கள் அக்கா ..

கதை ஆரம்பத்தில் படிக்கும் பொழுது , படிக்கலாமா வேண்டாமான்னு ஒரு dilama இருந்தது . ஏன்னா வில்லனை போட்டு தள்ள கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன் , ஆனா நீங்க விவேக் மாதிரி ஒருத்தரை போட்டு தள்ளுவீங்கன்னு ஒரு கமெண்ட் பார்த்தேன் ..

பொதுவா நல்லவங்க இறந்தா வலி வருமே அப்படி ஒரு வலி கதை படிக்கும் பொழுது வர போகுதே ன்னு தெரிஞ்சு படிக்க யோசிச்சேன் ..

ஆனா உங்க எழுத்து ஒவ்வொண்ணும் என்னை மேலும் படிக்க கட்டி இழுத்தது . சுமந்த் நார்மல் மீடியா person , அப்பாவை எதிர்த்து அவன் போராடுவது அருமை .

ஒரு மீடியா ல நேர்மையா இருக்கிறது எவ்வளவு கஷ்டம்ன்னு , இதை படிக்கும் பொழுது தெரியுது . எவ்வளவு நெருக்கடி , உண்மையை சொல்ல .. ஆத்தி உண்மைக்குமே மீடியா persons எல்லாம் கிரேட் தான் (உண்மையை தைரியமாக உலகுக்கு எடுத்து சொல்லும் மீடியா ஆட்களுக்கு மட்டும் இது பொருந்தும் ).

ஹீரோயின் உண்மைக்குமே துணிச்சல்காரி தான் . அப்பா க்கே ஆப்பு வைக்க இப்படி உன்னால தான் முடியும் மா . கதை சொல்லியே அதில் ஹிண்ட் கொடுத்தது ரொம்ப அருமை .

அதை ஹீரோ கண்டுபிடிச்சு , சில அசம்பாவித சம்பவங்களை தடுத்தது கிளாஸ் ... எனக்கு அப்போ ஒரு ஸ்டோரி படிக்கிறோம்ன்னு பீல் தராம ஒரு பிலிம் பார்த்த பீல் வந்தது .

இந்த கதையில் விவேக்கின் மரணம் என்னால ஜீரணிக்க முடியாத ஒன்னு . அவன் மனைவி , குழந்தை அவன் இறப்பிற்கு பிறகு அடைந்த வேதனை சொல்லி மாளாது .

அவனின் சாவுக்கு நியாயம் செய்ய , ஹீரோயின் அவளுக்கு தெரிந்த தகவலை ஹீரோவுக்கு கொடுத்து உதவுவது செம .. ஆனா அவ கொஞ்சம் இந்த சுமந்த் கிட்ட வீம்பு பிடிக்காம இருந்து இருந்தா , ஒரு வேளை அவன் உயிர் காப்பாற்ற பட்டு இருப்பானோன்னு மனசு உறுத்திக்கிட்டே தான் இருக்கு ..

ஹீரோயின் அப்பா , என்ன மனுஷன் இவர் . சத்தியமா இவரை பத்தி நான் பேச போறது இல்லை . மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பொழுது , கொஞ்சம் கூட ஆறுதலாக இல்லாம , தன் சுகம்ன்னு இருந்தவரை என்ன செய்றது ..

கதை நல்ல விருவிருப்போட கொண்டு போனது சூப்பர் Hameeda அக்கா . உங்க கதையில் , எனக்கு இப்போ இது தான் fav..
அடுத்து பேசும் மொழியெல்லாம் படிச்சிட்டு வரேன் அக்கா ..
மக்களே யாரை கேட்டது இதயம் , படிகாதவங்க படிக்க ஆரம்பிங்க ... டோன்ட் மிஸ் இட் .. u will just love it .. அதுக்கு நான் gurantee..
ஹமீதா அக்கா வாழ்த்துக்கள் .. மேலும் இன்னும் நல்ல கதைகளோடு வாங்க ..
இப்படிக்கு ,
கோடிஉமா..

பேசும் மொழியிலெல்லாம் - எழுத்தாளர் வேதா கெளரி அவர்களின் விமர்சனம்

வாழ்வின் எல்லை வரை நீ வருவாய் என்று
நீயோ அரை வழியில் நன்றி சொல்லி விடை பெறுகின்றாய்.... என்னை ஏமாற்றிவிட்டு எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை தரும் என்றாலும் எதிர்பார்க்கிறேன் – ... இது பிரமோத் என்பவனின் தன்னம்பிக்கையா ..? இல்லை அவள் மேல் கொண்ட காதலின் நம்பிக்கையா ...? வென்றதா ...? வேரறுந்ததா...?

விழிகள் சண்டையிட்ட வெட்கத்தில்
மொழிகள் சொல்லிருந்தும் ஊமையானது
என்னவளின் சிறு தலையசைப்பு
எனக்குள் ஆயிரமாயிரம் புதுக்கவிதைகளை உதயமானது .... அவள் காதலை சொல்லியதே இல்லை--ஆனால். எனக்காக செய்யும் ஒவ்வொரு செயலிலும் காதலின் பிரதிபலிப்புகள்... வெற்றிமாறனின் புதுக்கவிதைகள் பேசும்மொழியானதா ...? ஊமை மொழியானதா ...?


கூட்டத்தில் இருந்தாலும்
தனித்து இருந்த என்னையும்
என் சோகங்களையும் சுகமாக்கியவன் நீ
வீழ்ந்து போக இருந்த என் வாழ்வினை
விரல் கொடுத்து காத்தது உன் காதல் தான் ... என்ற சொல்லும் நயனிகாவின் வாழ்வில் வசந்தத்தை வீசியது பிரமோத்தின் காதலா...? இல்லை வெற்றிமாறனின் காதலா ..?

இந்த கேள்விகளுக்கு விடை தோழி ஹமீதா அவர்களின் படைப்பான “ பேசும்மொழியெல்லாம் “ என்னும் நாவலில் உள்ளது ....
லிப்ட் சீன் பத்தி சொல்லலை அப்படின்னா சாமி குத்தம்மா போய்டும்...அது என்னன்னு படிச்சு தெரிஞ்சுகோங்க ...இனி லிப்ட்ல போகும் போதெல்லாம் அது தானே நியாபகம் வரும் .....

பணமதிப்பு இழப்பு, பரிவர்த்தனை மாற்றம் ,அரசியல் சூழ்நிலை ,வர்தாபுயல் இப்படி மக்களை சுழன்று அடித்த அத்தனை நிகழ்வுகளையும் அழகாக கதைக்களமாக மாற்றி அருமையான நாவலாக கொடுத்துள்ளார் ...வாழ்த்துக்கள் தோழி ஹமீதா ...

கலைந்து போன மேகங்கள் - சகோ முருகேசன் அவர்களின் விமர்சனம்

சகோதரி ஹமீதாவுக்கு,

உங்களின் கலைந்து போனா மேகங்கள் நாவலை பற்றி சில வார்த்தைகள்.

உங்கள் எழுத்தில் நான் படிக்கும் முதல் நாவல் சகோதரி. நல்ல பண்பட்ட எழுத்து சகோதரி. க்ரஷ்க்கும், காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்து இந்த நாவல் இருந்தாலும், சில வாழ்க்கை பாடங்கள் சொல்லதவறவில்லை சகோதரி. வெற்றி என்பது என்ன, அதனை எப்படி கையால்வது, கூட்டு குடும்பம் நிலைக்க என்ன வழி, என்று பல பல பாடங்கள் சகோதரி. இந்த நாவலில் வரும் அனைத்து பாத்திரங்களும் அருமை. பெருமை படைப்புகள்.
ராகவேந்திரன் – மாலினி :- மகளின் மனஉணர்வு புரிந்த அப்பா, மகளுக்கு வளமான வாழ்வு முக்கியம் என கருதும் அப்பா. ஹீரோவின் இரும்பு உறுதி கண்டு அவனை இனம் கண்ட அப்பா. மகளின் குணத்துக்கு முக்கிய காரணமான அம்மா, இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு உயர்கல்வி,

வேலை, சுயமாக நிற்கும் திறன் அவசியம் என உணர்ந்த அம்மா.
ஜெயச்சந்திரன் – சுசீலா :- மகனின் தேவை உணர்ந்த அம்மா. ஒரு நல்ல தாய் நல்ல மாமியார் என நிறுபித்தவர். இந்த நாவலின் முக்கியமானவர் ஜெயச்சந்திரன் அப்பா. பிள்ளைகளை கஷ்டம் தெரியாமல் வளர்ந்தாலும், கஷ்டம் புரியாமல் வளர்க்கவில்லை. பெண் பிள்ளைகளை வளர்ப்பதை விட ஆண் பிள்ளைகளை பொறுப்பாக வளர்ப்புது சவாலானது என்று உணர்ந்து அதனை திறம்படசெய்தவர். பிள்ளைகளை பெற்ற இப்படி பெற்று கொள்ள வேணும் வளர்ந்த இப்படி வளர்க்கவேணும் என வாசகரால் புகழப்படுபவர்.
யோகேந்திரன் – ஜோதிகா :- தோழியானவள் அண்ணியாகிறாள், அண்ணியான பின்னும் தோழியாகவே இருக்கிறாள். வீட்டின் மூத்தமருமகள், ஆனால் இளையவளை மூத்தவள் போல் நடத்துகிறாள். தம்பியின் காதல் உணர்வுக்கு காவல் காக்கிறான். தம்பி மனைவியை தங்கை ஆக்கிகொள்ளும் நல்லவன். தம்பி வெற்றியை தன் வெற்றி போல் கொண்டாடும் உயர்ந்தவன்.

சந்தீப் ராத்தோட் :- ஒரு செலிபிரெட்டிஸ் எப்படி இருக்க வேண்டும் என்பதுக்கு உதராணமானவன். சாதிக்கும் போது தலையில் தூக்கிகொண்டும், தவறும் போது கீழே போட்டு மிதிக்கும் உலகவழக்கத்தை புரிந்துகொள்ள சிரமம் பட்டு பின் ஹீரோயின் கடிதம் மூலம் அமைதி கொண்டவன். விழுவது தவறல்லா, விழுந்து கிடப்பதே தவறு என நிறுபித்தவன். தன் எல்லையை உணர்ந்தவன். விழும் உயரம் அதிகரிக்க, அதிகரிக்க வலியின் தன்மையும் அதிகமாகும் என உரைந்தவன்.

நேஹா – நரேந்திரன் :- நேஹா, செண்டிமெண்ட் பார்ப்பது, வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து உடல் நலம் காப்பது, நான் என்ன புண்ணியம் செய்தேன், எனக்கு நல்லது செய்யும் இறைவா என இருந்தாலும், மாமியார் வீடு முதலில் செல்லும் போது உஷராக வலது கால் வைத்து செல்லுவாள் இந்த மாமியார் மெச்சிய மருமகள். என் காதல் முழுக்க முழுக்க என் கணவனிடம் தான் என நினைத்த பெண். எனக்கு பிடிவாதம் உண்டு, இப்போதைய பிடிவாதம் உங்களின் உடமையாக ஆவது என காதலையும் அழகாக சொன்ன மனதுக்கு மரியாதை கொடுக்கும் பெண். நரேந்திரன், தீர்க்கதரி போல் திட்டம் போட்டு, தன் திறமை, எதிர்காலம் சொல்லி பெண் கேட்கும் இந்த LLR போட்டு லைசன்ஸ் வாங்கும் இந்த ஹீரோ பையன். பெண்ணை பெற்றதால், பெண்ணை பெற்றவரின் கஷ்டம் உணர்ந்த இந்த நல்லவன். தன் வேலையை விரும்பி செய்பவருக்கு, மனம் தீயவழியில் செல்லாமல் வேறு எந்த பொழுதுப்போக்கும் தேவையில்லை என்று உரைத்தவன். அந்த காதலும் எனக்கு தான், அது சொல்லும் உதடுகளும் எனக்கு தான் என சொல்லியே அவளின் காதலில் மொத்தமாய் களவு போனவன்.

இந்த நாவலில் சில விளக்கங்கள் அருமை சகோதரி ;-
1.கூட்டு குடும்பம் நிலைப்பதுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை அருமை.
2.வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் சில நிமிடங்களில் நடத்துவிடும்.
3.புத்தி சொல்வதை எல்லா நேரங்களிலும் மனம் கேட்காது. அப்படி கேட்டால் விரைவில் சிறைபிடித்த உணர்வு வரும்.
4.க்ரஷ் என்பது எதிர்காலமில்லா உணர்வு, காதல் என்பது வாழ்வு முழுமைக்கும் வரும் உணர்வு.
5.தொழிலை பொருத்தவரை பேராசைபடு, அப்போதுதான் மேலே,மேலே போகமுடியும். இங்கே புத்தன் கொள்கை தவறு.
6.வாழ்வு நமக்கு சோதனையும், வெகுமதியும் வைத்துயிருக்கு. அது வைக்கும் சோதனையை கடந்தால் நமக்கு வெகுமதி கிடைக்கும்.
7. அந்த மேனே பியார் கியா பாடல் இடமும் சரி, பாடலும் சரி அருமை.

நம்மை கடந்து பல மேகங்கள் போகும், நமக்கு தேவையான நேரத்தில் தேவையான முடிவை, யோசித்து, நிதானத்துடன் எடுத்தால், அந்த காதலே தட்டி கொடுக்கு ஒரு வாழ்வு அமையும் என உணர்த்திய நாவலுக்கு என் வாழ்த்துகள் சகோதரி

பேசும் மொழியிலெல்லாம் - தோழி கிருத்திகா ரவிசங்கர் அவர்களின் விமர்சனம்

பேசும் மொழியியெல்லாம்

நாயகன் : வெற்றி மாறன்
நாயகி : நயனிக்கா

மிடில் கிளாஸ் மக்கள் அவங்களுக்கு ஏற்படும் பிரச்சனை பத்தி ஷாஹி ஜி ரொம்ப அருமையா சொல்லி இருக்காங்க....

வெற்றிமாறன் வேலைக்காக சென்னை வரும் போதே பிரச்சனையும் வருது...
1000 மற்றும் 500 ரூபாய் செல்லாது என்று மத்திய அரசாங்கம் அறிவிக்க சென்னை வரும் வெற்றிக்கு இது பெரிய அதிர்ச்சி... அவனுக்கு மட்டும் அல்லாது ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்கள் எல்லாருக்கும் இது எவ்ளோ பெரிய அதிரிச்சியா இருக்கும் அவங்க பட்ட கஷ்டம் பத்தி எல்லாம் ஜி நீங்க சொன்னது சூப்பர்.....

நயனி குடும்பத்துக்காகவும் அவ அக்கா கார்த்திகாகவும் ஆசை பட்ட படிப்பை நிறுத்தி வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை... இப்படி இருக்கற நயனியோட அக்கா கார்த்திகா சரியான சுயநல பிசாசு... அவளை எல்லாம் மனுசங்க லிஸ்ட்ல சேர்க்க கூடாது....

வெற்றி நயனி ஒரே இடத்துல வேலை பார்க்குறது நயனி வெற்றிக்கு வேலை பத்தி சொல்லுறது எல்லாம் சூப்பர்...

வெற்றி நயனி ரெண்டு பேரும் செம... மனசுல காதல் இருந்தும் சொல்லாமல வச்சு கிட்டு அவசத்தை பட வேண்டியது... லிப்ட் ஸீன் சூப்பர்....

இவங்க காதலாய் வெளி கொண்டு வர வந்தான் ப்ரமோத்.... அவன் நயனி கூட பேசம் போது எல்லாம் வெற்றி உன் ரியாக்ஷன் இருக்கே செம....

அப்பா வாங்கின கடனை அடைக்க நயனி ப்ரோமத்தை கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை...நயனி எடுத்த முடிவு என்ன? வெற்றி நயனி காதல் வின் பண்ணினதா ப்ரோமத் என்ன முடுவு எடுத்தான்? .... இது எல்லாம் ரொம்ப அருமையா சொல்லி இருக்காங்க ஷாஹி ஜி... நீங்களும் படிச்சு பாருங்க நட்பூஸ்... வாழ்த்துக்கள் ஷாஹி ஜி.....

கலைந்து போன மேகங்கள் - எழுத்தாளர் பவித்ரா நாராயணன் அவர்களின் விமர்சனம்

கலைந்து போன மேகங்கள்…-

கார்கால மேகங்கள் போல் மனதுக்குள் குளிர்மழைச் சாரல் வீசிச் சென்ற கதை இது.எனக்கு நேஹாவோட குணம் மிக மிக பிடித்திருந்தது.நல்ல காலம் நம்ம சுமந்த்,வெற்றி,ப்ரமோத்லாம் ரியல் லைஃப்ல நான் பார்க்கல..ஜஸ்ட் நம்ம கர்ஷ் கற்பனையோட முடிஞ்சுப்போச்சு…சந்தீப்பை அவ இந்தளவுக்கு இம்பார்டன்ஸ் கொடுத்திருக்க தேவையில்ல…பட் ஸ்டீல் ஷி வாஸ் எ கேர்ள் ஆஃப் ஹெர் ஓன் மாரல்ஸ்… நயனியை விட ஷ்ரேயாவுக்குப் பிறகுப் பிடிச்ச சூப்பர் கேரக்டர்…நேஹான்னு எனக்கு ஒரு ஃப்ர்ண்ட் இருந்தால் நேஹா மர்டியா…gone into those days aunty…sweet girl she is..my 4th std frnd…எனக்கு நேஹா சந்தீப் சந்தீப்ன்னு உருகும்போது நான் விக்ரம் விக்ரம்னு சொல்றது தான் நினைவு வந்துச்சு..அவளோட கொள்கைகள்லாம் வாவ்…ஆவ்சம்…”என் காதல் என் கணவருக்கு மட்டுமே” எனக்குள் ஒலிக்கும் குரல்…!!! நரேன் வாஸ் ரியலி எ லக்கி மேன்..அண்ட் aunty நீங்க சொன்ன மாதிரி வெற்றி சுமந்த் விட நரேன் தான் டாப்..பட் ப்ரமோத் ஸ்டீல் outstands everyone…ஒரு ஆண்பிள்ளை வளர்ப்பது மிகவும் கடினம்..பகீரதப்ரயர்த்தனம் தான்..அண்ட் நரேன் வாட் எ பெர்சன்..அவனோட பிடிவாதம் பிடிச்சது…அவனோட காபி பிடிச்சது….நரேனை பிடிச்சது…( ஆன்டி உங்க மைண்ட் வாய்ஸ்..உனக்கு யாராதா பிடிக்காதுமா..? மீ வெரி ப்ராட் பெர்சன்..நம்ம ரசனை பெரிது..சோ எல்லாரையும் ரசிக்கலாம்..)
 

ஐ ஷூட் ஹேவ் கிஸ்ட் ஹெர்..மிஸ் பண்ணிட்டேன்..ஹா ஹா என்ன டயலாக்டா மகனே…பின்னிட்ட….நரேன் வாவ் வாவ் தான்…அவனோட கொள்கைகள் கோடு போட்டு வாழ்றது..தொழில் மேல் உள்ள காதல்..!!வெற்றிகளை சாதாரனமாக கடந்து போகும் பண்பு…
சந்தீப் பத்தி சொல்லனும்னா எனக்கு என்னவோ மனசுக்குள்ள தோனி தான் வந்துட்டுப் போனாரு…ஹா ஹா..ரியல் ஸ்டொரி போல…அதுவும் நேஹாவுக்கு வந்த தடுமாற்றம்…அவளோட அந்த கேள்விக்கு விடையா சந்தீப்//இயல்பாக ஒரு பருவ வயதுப்பெண்ணீன் உணர்வுகளை சரியாக பிரதிபலித்து இருந்தீர்கள்…நானெல்லாம் அவ்வளவு ardent fan ஆஹ்வெல்லாம் இருக்க முடியாது…பாருங்க…சுமந்த்…நெக்ஸ்ட் வெற்றி..இப்போ நரேன்..பட் ப்ரமோத் ஆல்வேய்ஸ் ஸ்பெஷல்…அண்ட் விக்ரமோட டை ஆர்ட் ஸ்வீட் ஹார்ட்..
 

A feel good good story as usual and shrt but as sweet as neha from u aunty..அதுவும் ராகவேந்திரனோட உணர்வுகளை நம்ரதா வந்த பின் நரேன் புரிஞ்சிக்கறது..அண்ணன் தம்பிக்குள்ள பாசம்…அவங்க அம்மா கிட்ட இருக்க பாசம்..எல்லாமே splendid..arumai..வெல் டன்..!!
ப்ரியங்களோடு
பவித்ரா நாராயணன்..

யாரைக்கேட்டது இதயம் - தோழி லதா சேகர் அவர்களின் விமர்சனம்

ஹமிதா நான் முதன் முதலாக படித்தது உங்கள் நாவல் தொகுப்புகளில்
இந்த நாவல் தான்

யாரை கேட்டது இதயம் 😍

எங்களைப்போன்ற வெளிநாட்டு வாசிகளுக்கு நினைத்தவுடன் அம்மா வீடு போக முடியாது..சந்தோஷமோ துக்கமோ இல்லை சில நேரங்களில் எங்கே போவது என்று தெரியாமல் தவிக்கும் நேரங்களில் எப்போதும் என் கால்கள் தானாகவே
போவது சிங்கப்பூரின் நூலகங்கள் தான்..
 

அது பல நேரங்களில் தாய் மடி போன்று என்னை தாலாட்டியுள்ளது...
அப்படி கடந்த வாரத்தில் வினாடிக்கும் குறைவான நேரத்தில் என் விழிகள் சுழன்று என்னெதிரே தென்பட்டது தான்
யாரை கேட்டது இதயம்😍


ஹமிதா உங்கள் எழுத்துக்களில் முதலில் என்னை வியக்க வைத்தது உங்களின் இக்காலத்திற்கேற்ற கணினியின் பயன்பாடுகள் மட்டுமல்லாது எதற்கும் வளைந்து கொடுக்காத உங்கள் எழுத்தின் கண்ணியம் அதற்கு என்மனமார்ந்த வாழ்த்துக்கள்....

சுமந்த் நாராயண் & ஸ்ரேயா என்ன மாதிரியான பாத்திரப்படைப்புக்கள்...ஒரு மோசமான அரசியல் மற்றும் காவல் துறை சார்ந்த தகப்பனுக்கு பிறந்த பிள்ளைகள் தத்தம் தந்தையின் நடத்தைகளால் பாதிக்கப்பட்டாலும் சமூகம் பாதித்து விடக்கூடாது என்று இருவரும் போராடுவது கண்முன்னே காட்சிகளாக விரித்த
உங்களின் எழுத்தாற்றலுக்கு சபாஷ்👏

இது ஒரு நம்பிக்கையான நேர்மறையான எண்ணங்களை படிக்கின்ற அனைவருக்கும் உண்டாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை..மோசமான குடும்ப சூழலில் வளரும் பிள்ளைகள் மிக சுலபமாக தவறான பாதையில் செல்வார்கள் என்பதை உடைத்து தாயின் வளர்ப்பினாலும் தங்களின் சுய ஒழுக்கம் மற்றும் நேர்மையான செயல்பாடுகளினால் தங்களின் வாழ்க்கை மட்டுமின்றி சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாக வாழ முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமே சுமந்த்&ஸ்ரேயா

உடல்நலமில்லாமல் இருக்கும் அன்னைக்கு தாயாய் மாறும் ஸ்ரேயா நெஞ்சை விட்டு அகலவில்லை..

தனிமனித ஒழுக்கம் மற்றும் சமூகவிழிப்புணர்வை உருவாக்கும் நாவலை எழுதியதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ஹமிதா👏

சுமந்த்&ஸ்ரேயாவின் காதல் மலர்ந்த
விதமும் வீசிய மணமும் விவரிக்க வார்த்தைகளே இல்லை...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஹமிதா. ..

உங்களின் பிற நாவல்களையும் வாசிக்க மிகவும் ஆவலுடன்😊😊

நிழல் போலவே நின்றாய் - ஜென்சி ஜோஸ் அவர்களின் விமர்சனம்

நிழல் போலவே நின்றாய்:

நாயகனுக்கான கதை

ஆனால் கதை நாயகி ....மனதில் நங்கூரமிட்டு அமர்ந்து விட்டாள்...என்ன ஒரு வித்தியாசமான பிரச்சனை அவளுக்கு....அவளுடைய பிரச்சனைகள், குணாதிசயங்கள் இவற்றை நேர்மறையாக அணுகிய விதத்தில் கதாசிரியருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்க வேண்டியது தேவையாகின்றது.

நீயும் நானும் படிப்பில் முதன்மை பெற்றவர்களல்ல...ஆனால், அதுவே நம் வாழ்வின் வெற்றியை தீர்மானிப்பதல்ல என்பதான ஒரு உரையாடல் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது...அது மட்டுமா இன்னும் நிறைய விஷயங்கள்...

ஹீரோ சர் பற்றி ....இதோ சொல்ல வருகிறேன்...

தமிழ் படங்களில் ஹீரோ சாருக்காக கதை/ பாடல் எல்லாம் எழுதுவார்கள்...கதை உலகில் இவர் அப்படிப்பட்ட சூப்பர் ஹீரோ
இவருக்காகவே ஹமீதா சிஸ் கதை எழுதி இருக்கிறார்களே....அதிர்ஷ்டகார பிரமோத்..

அவனுடைய முரணான ( மாறிக் கொண்டிருக்கும் ) குணாதிசயம் முதல் கதையிலேயே நெருடியது ..

ஆனால் அதை அப்படியே இந்த கதைக்குள் கொண்டு வந்த விதம் பிரமாதம் சிஸ்...

இன்னும் என்னென்னவோ சொல்லத் தோணுகிறது ...கதை வாசித்ததன் நிறைவை அப்படியே உணர்ந்துக் கொண்டு இருக்கிறேன்...

சென்னை டூ மும்பை வரும் பயணத்தை சுவாரஸ்யமாக்கியமைக்கு மற்றொரு முறை நன்றி

நல்வாழ்த்துக்கள்

தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் சிஸ்

Tuesday, January 9, 2018

சென்னைப் புத்தகக் கண்காட்சி


=====================================================================
41வது சென்னைப் புத்தகக் கண்காட்சி!
இடம் : புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி,
அமைந்தகரை,
சென்னை.

நாள் : ஜனவரி 10, 2018 முதல் ஜனவரி 22, 2018 வரை
=====================================================================

வாசக நெஞ்சங்களுக்கு,

அன்பு வணக்கம்.

நிகழவிருக்கும் சென்னைப் புத்தகத் திருவிழாவில், உங்கள் உள்ளம் கவர்ந்த SS பப்ளிகேஷன்ஸ் வெளியீடுகள் கீழ்க்கண்ட அரங்குகளில் கிடைக்கப்பெறும் என்பதை அறிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

அறிவுநிலையம் பதிப்பகம், அரங்கம் எண் : 222
நியூ புக்லேண்ட்ஸ், அரங்கம் எண் : 383 & 384
மெரினா புக்ஸ், அரங்கம் எண் : 201
வீ கேன் புக்ஸ், அரங்கம் எண் : 358

தங்களின் மேலான ஆதரவை எப்போதும் நல்கி வரும் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பும் நன்றியும்.

தங்களின் மேலான ஆதரவை நல்கியிருக்கும் அருண் பதிப்பகம் திரு. அருண் அவர்களுக்கும், நியூ புக் லேண்ட்ஸ் நிறுவனத்திற்கும் SS பதிப்பகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பதிப்பகம் துவங்கிய நாள் முதலாய், தங்களின் நல்லாதரவை வழங்கி வரும் மெரினா புக்ஸ் மற்றும் வீ கேன் புக்ஸ் நிறுவனத்தாருக்கு, SS பதிப்பகம் சார்பில் என்றென்றும் நன்றிகள்.

அன்புடன்,
S. ஹமீதா.

SS பப்ளிகேஷன்ஸ் வெளியீடுகள்: நிழல் போலவே நின்றாய் - ஹமீதா
பேசும் மொழியிலெல்லாம் - ஹமீதா
யாரைக்கேட்டது இதயம் - ஹமீதா
உன் இதயம் என் வசத்தில் - விஷ்ணுப்ரியா
காதல் கிரிக்கெட் - விஷ்ணுப்ரியா


Tuesday, January 2, 2018

நிழல் போலவே நின்றாய்! - முன்னோட்டம்




============================================================================
“ஹையோ! இந்த ரெடிமேட் டெயிரி வைட்னரும் இன்ஸ்டண்ட் காபி பௌடரும் போட்டுக் குடிச்சு என் நாக்கே செத்துப் போச்சு.” புலம்பியபடியே காபி தயாரித்துப் பருகிய வேளையில் ப்ரமோத் அழைத்தான்.

“என்னோட ரூமுக்கு வா, பேசணும்!” என்றான். நேரம் மாலை ஏழு மணியைக் கடந்திருக்க, அவளுக்கு உண்மையில் மனதும் உடலும் மிக அலுப்பாக இருந்தது. “என்ன விஷயம்ன்னு ஃபோன்லயே சொல்லுங்க. பொண்ணு செமையா இருந்துச்சு... கங்ராட்ஸ் ப்ரமோத்!” என்றாள் வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன்.

“ஆமா, எனக்குப் பார்த்த பொண்ணு செமையா தான் இருக்கும்! உனக்கு நீயே கங்ராட்ஸ் சொல்லிப்பியா?” என்று ஏதோ பூடகமாகப் பேசியவன், “இப்ப நீ வரலைன்னா, நான் அங்கே வந்து உன்னைத் தூக்கிட்டு வருவேன்... செய்ய மாட்டேன்னு மட்டும் நினைக்காதே!” என்றான் மிரட்டலாக.

“தோடா! நீங்க தூக்கிட்டுப் போனா, நாங்க அப்படியே அமைதியா இருப்போமா? கத்தி ஊரைக் கூட்டுவோம் இல்ல... எந்தக் காலத்துல இருக்கீங்க?” என்றாள், குரலில் கொஞ்சம் ரௌடித்தனத்தைப் பூசிக் கொண்டு.

“உதயாஆஆ! முக்கியமா பேசணும்!” என்றான் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு.

“ஹ்ம்ம்! அப்படி வாங்க வழிக்கு! டென் மினிட்ஸ்ல வரேன்.” என்றாள் அமைதியாக.

‘எனக்கு பயப்படாம, அப்பப்ப எட்டிப் பார்க்கிற இந்த துடுக்குத்தனம் தான் என்னை இப்படி இம்ப்ரெஸ் பண்ணுதோ?’ என்றெண்ணியபடி, மாலையில் சந்தித்த பெண்ணை நினைவில் கொண்டு வர முயன்றான். “நல்ல பொண்ணு தான்! நல்ல மரியாதையான குடும்பம்! பட், எனக்கு ஹோம்லியா இருந்தா பிடிக்கும்னு அப்பா சொன்னதா வாயை விட்டாங்க... ஹ ஹா! என்னோட டேஸ்ட் என்னன்னு அப்பாவுக்கே சரியா தெரியாது!” அவன் சிரித்துக் கொண்டான்.

அவள் கிளம்பி வெளியே வந்தபோது பார்த்தால், மழை ‘சோ’வெனப் பெய்து கொண்டிருந்தது. மீண்டும் கதவைத் திறந்து குடையை எடுத்து வருவதற்கு சோம்பலாக இருக்க, “அதான் ஜாக்கெட் போட்டிருக்கேனே... லெட் மீ என்ஜாய் தி ரெயின்!” ஜாக்கெட்டின் வின்டர் கேப்பை தலை நனையாத வண்ணம் பொருத்திக் கொண்டு, ‘அப்படியே ஜாக் பண்ணிட்டே போய்ட வேண்டியது தான்!’ ஊசியாய் இறங்கிய மழைநீர் முகத்தில் முத்து முத்தாய்க் கோலம் போட, ‘தட் தட்’ என்று ரிதமிக்காக ஜாக் செய்தபடி, அவனுடைய அறையின் பாதி வழியை அடைந்து விட்டாள்.

“நான் நினைச்ச மாதிரியே மழைல நனைஞ்சிட்டு வர்ற! எல்லா ரூம்ஸ்லயும் வார்ட்ரோப்ல அம்ப்ரெல்லா ப்ரோவைட் பண்ணிருக்கோம்.” என்றபடி குடையுடன் வழி மறித்து நின்றான் ப்ரமோத். 

“நல்லவேளை வந்தீங்க! ஏதோ ஆர்வக் கோளாறுல மழையை என்ஜாய் பண்ணலாம்னு நினைச்சுக் கிளம்பிட்டேன். எப்பா! ஒவ்வொரு துளியும்   ஊசியா இறங்குது...” முகத்தில் வழிந்த நீரைத் துடைத்தபடி, ஆவலாய்க் குடைக்குள் நுழைந்து கொண்டாள். அவளது மேனி மெலிதாய் நடுங்குவது அவனுக்குத் தெரிந்தது. வட்ட வடிவ சிமெண்ட் கற்கள் சீராகப் பதிக்கப்பட்ட புல்வெளிப் பாதையில்... சோவெனப் பெய்த மழையில்... நனைந்தும் நனையாமலும் நடுங்கிய  உடலுடன்... அவனின் தோளோடு தோள் உரச, ஒற்றைக் குடையினுள் நடந்து சென்ற அந்தப் பேரின்ப நிமிடங்கள், அவள் சேமிக்கத் தேவையில்லாமல், அதுவாகவே அவளது நெஞ்சத்தில் ஆட்டோ சேவ் ஆகியது.
===========================================================================
"நிழல் போலவே நின்றாய்!" இன்னும் சில தினங்களில் புத்தக வடிவில் உங்கள் அனைவரின் மனம் வருடிச் செல்லக் காத்திருக்கிறது நட்புகளே!

என்றும் போல் இன்றும் உங்கள் அனைவரின் நல்லாதரவும் வேண்டி...

அன்புடன்
S. ஹமீதா.