மூர்த்தி சிறுசு என்றாலும் கீர்த்தி பெருசு என்பதற்கு சான்றாக ஒரு கதை...
மூன்றே நாட்கள்... ஐம்பத்திமூன்று பக்கங்கள்... ஏழே அத்தியாயங்கள்...
ஆனால் ஒவ்வொரு எபியும் நச் நச்சென்று கதைக்குள் நம்மைக் கட்டிப் போட்டது நிஜம்.
வால்டர் வெற்றிவேலாக மகனை உருவாக்கத் துடிக்கும் ரிடயர்ட் கான்ஸ்டபிள் சுந்தரவடிவேலு... அவரின் அனைத்து முயற்சிகளுக்கும் தண்ணி காட்டும் மகன் வெற்றிவேல் என்று அதகள ஆரம்பம்.
பார்த்துக் கொண்டிருக்கும் கான்ஸ்டபில் வேலையிலிருந்து கழண்டு கொள்ள வெற்றி மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வயிற்றைப் பதம் பார்கின்றன. ஆனால், அவ்வளவும் வெற்றிக்கு ஆண்ட்டி கிளைமேக்ஸாக உருமாறுவது சூப்பர்.
சத்தியவாணி ஐ பிஎஸ் ஸின் தடாலடி அறிமுகமும் அவர்களுக்கிடையேயான ஒரு குட்டி பிளாஷ் பேக்கும் அசத்தல். இளநீர் ரொமான்ஸ்... ரசனை... (வெற்றி ன்னு பேர் வெச்சாலே இப்படி கோக்கு மாக்கா தான் பேசுவாய்ங்க போல)
தங்களது கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்கும் பெற்றோருக்கும்... வீட்டுக்குள் இருக்கும் மனைவிக்கு ஒன்றும் தெரியாது என்பது போன்ற இயல்பான ஆணாதிக்கத்துக்கும் நகைச்சுவை எனும் வாழைப்பழத்தில் சாமர்த்தியமாக ஊசியை மறைத்து வைத்து ஏற்றிய சுதாவின் எழுத்தாற்றலுக்கும் ஹியூமர் சென்சுக்கும் hats off!
ஐபி எஸ் என்ற பதவிக்காக அல்லாமல் வெற்றியை அவனுக்காகவே நேசிக்கும் சத்யா, காதலனின்... கணவனின்... உயர்வில் மகிழ்ச்சி கொள்ளும் கதாநாயகி... ரியல் ஹீரோயின்!
கான்ஸ்டபிளாக அறிமுகமாகும் வெற்றிவேல் தந்தையின் ஆசைப்படி ஐபிஎஸ் ஆகிறானா இல்லையா என்பதை கதை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
சிரிக்க சிரிக்க சிந்திக்க வைத்த வித்தியாசமான முயற்சி... வாழ்த்துகள் சுதா ரவி!

ஹாய் ஹமீதா,
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களிடம் இருந்து விமர்சனம்...அதிலும் வெற்றி வாங்கியிருக்கான்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு.....எதிரே பார்க்காம அவசரமாக பிறந்த கதை இந்த அளவுக்கு எல்லோருடைய மனதையும் தொட்டு இருக்கு என்பதில் ரொம்ப சந்தோஷமா இருக்கு....அதிலும் உங்க கிட்ட இருந்து விமர்சனம் கிடைச்சது மிகவும் சந்தோஷம் பா...
அருமையான விமர்சனம்.. வாழ்த்துக்கள் சுதாம்மா ���������� புத்தகத்தை வாங்கி படித்துவிட்டு வருகிறேன்
ReplyDeleteஅருமையான விமர்சனம்.. வாழ்த்துக்கள் சுதாம்மா ���������� புத்தகத்தை வாங்கி படித்துவிட்டு வருகிறேன்
ReplyDelete