Monday, April 10, 2017

காற்று வெளியிடை... ஒரு சாதாரண மணிரத்னம்/ஏ.ஆர். ரஹ்மான் விசிறியின் பார்வையில்...





காற்றுவெளியிடை...
 
கார்த்தி
அதிதி ராவ் ஹைதரி

முற்றிலும் முரண்பட்ட இரு வலிமையான குணாதிசயங்கள் காதல் எனும் மையப்புள்ளியில் சந்தித்தால்... அக்காதல் மிக வலிமையானதாகவே இருக்கும்... கூடவே வலி மிகுந்ததாகவும் இருக்கும்.

முரட்டுத்தனமும் அதிவேகமும் நிரம்பிய ஏர்போர்ஸ் பைட்டர் ப்ளேன் பைலட்...  

சாவின் விளிம்பு நிலையிலிருந்து போராடும் உயிர்களையும் கருணையுடனும்; விவேகத்துடனும்; மனவலிமையுடனும் அணுகி உயிர்காக்கும் மருத்துவர்...

பக்குவப்பட்ட மனங்களின் காதல் என்பது ஒரு நிகழ்வு... அது எக்கணத்தில் நிகழும் என்று கணிக்க முயல்வது அவசியமற்றது.

பாகிஸ்தான் சிறையில்... பிடிபட்ட இந்திய ராணுவ வீரனின் நினைவலைகளில் காட்சிகளின் விரிவு அதி அற்புதம். 

ஸ்ரீநகரின் மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் நிலையில் நாயகனின் பார்வையில் பிம்பமாய் பதிகிறாள் நாயகி. அதன் பிறகான ஏர்போர்ஸ் டே சந்திப்பிலும்... பைட்டர் ப்ளேன் ரைடிலும்... லே மிலிட்டரிபேஸ் காட்சிகளிலும் சாதாரண இந்திய சினிமா ரசிகனுக்கு வாய்ப்பது உச்சபச்ச மணிரத்னம்/ஏ.ஆர் ரஹ்மான்/ரவிவர்மா மேஜிக்.

காதலை வாய் வார்த்தையாக பரிமாறிக் கொள்வதற்கு முன்பாகவே பார்வையால் உணர்த்திக் கொள்ளும் காட்சிகள் கவிதை. நாயகியின் கண்களும் முகமும் ஆயிரம் கதைகள் அல்ல... கவிதைகள் பேசுகின்றன. அவைகளை சிந்தாமல் சிதறாமல் விஷுவலாக கேப்ச்சர் செய்து அப்படியே ரசிகனின் பார்வைக்கு... மனத்துக்கு முழு விருந்தாகப் படைத்திருப்பது நிச்சயம் மணிரத்னம் எனும் மகா கலைஞனின் திறமை. சிம்ப்ளி விஷுவல் ட்ரீட்.  அந்த பைட்டர் ப்ளேன் காட்சி... சிம்ப்ளி அட்வென்ச்சரஸ். பனிமலைச் சிகரங்களை காதலனுடன் வலம் வந்த உணர்வு... கிரேட்!

கதாபாத்திரங்களின் அனைத்து உணர்வுகளையும் ஆழமாக... விவரணையாக.... விளக்கமாகச் சொல்வது ஒரு வகை என்றால்... போகிற போக்கில் சிறு சிறு வசனங்கள் காட்சிகள் வாயிலாக சொல்லிவிட்டு, பார்வையாளனிடமே கதாபாத்திரங்களின் தன்மைகளை அலசும் பொறுப்பை விட்டு விடுவது மற்றொரு வகை. இப்படம் இரண்டாம் வகையைச் சார்ந்தது.

நாயகனின் ஆணாதிக்க மனோபாவம், அவனுடைய ரத்தத்தில் கலந்தது என்பதை விளக்கும் அவனுடனைய தந்தையுடனான காட்சிகள் இதற்கு உதாரணம்.

வருடக்கணக்கான திருமண வாழ்விற்குப் பிறகும்... ஒரு சிறு பிணக்கில்... கட்டிய மனைவியை வெளியேறச் சொல்லும் தந்தை...  நண்பர்கள் முன்னிலையில் காதலியை ஆதிக்க தொனியில் பேசிவிட்டு, அவளிடம் மன்னிப்பு கேட்டு அதே நண்பர்களிடையே அவளை அழைத்து வரும் மைந்தன்... – உணர்வுப் பூர்வமாய் காதல் கொண்ட ஆணாதிக்க ஆணுக்கும், காதல் என்றால் என்னவென்றே தெரியாத ஆணாதிக்க ஆணுக்குமான வேறுபாடு!

‘இது சரி வராது’ என்பது இருவருக்கும் புரிகிறது; தெரிகிறது. அதையும் மிஞ்சி காதல் கோலோச்சும் இடங்கள் கொள்ளை அழகு.

திருமணத்துக்கு முன்பான அவர்களது இணைவை அந்த கொள்ளை கொள்ளும் காதலும்; அவனுடைய நிச்சயமற்ற பணிச்சூழலும்; கதைக்களமும்; மேல்தட்டுக் கலாச்சாரமும் நியாயப்படுத்தி விடுவதால், அந்த அலசலுக்குள்ளும் நம்மை நுழைய விடாமல்  அந்த அதிதீவிரக் காதல் மட்டுமே நமது சிந்தனைகளை முழுவதுமாக கவர்ந்து கொள்கிறது.

‘ஒரு நேரம் மகாராணி மாதிரி நடத்துற... இன்னொரு நேரம் கால்ல போட்டு மிதிக்கிற...’ என்ற நாயகியின் வசனம் நாயகனின் குணத்தை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் போடுகிறது. காலில் மிதிபடும் தருணங்களை மகாராணியாய் உணரும் தருணங்கள், தூக்கி விழுங்கி விழுங்கி விடுவதை நாயகியின் கண்களின் பாவங்கள் வாயிலாக உணரலாம்!

அவளை மணம் புரிய அவன் தயாராகவே இருக்கிறான்... இன்னும் சொல்லப்போனால் தவிப்புடனே இருக்கிறான்! ஆனால் தனது சந்ததிகளைப் பற்றி யோசிக்கும் வேளைகளில் தடுமாற்றம் கொள்கிறான். தன்னைப் போல... தனது தந்தையைப் போல... ஒரு ஆணாதிக்க சந்ததி இச்சமூகத்துக்குத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுக்கிறான்.

அப்படியான நிலைப்பாட்டை எடுக்கும் வேளையிலும் அவளை இழக்க அவனது காதல் மனத்துக்கு மனமில்லாமலே இருக்கிறது. தனது காதலை கௌரவித்துக்கொள்ளவே அவள் அவனைப் பிரிகிறாள். அவனின் சிற்சில குணங்களை அவளால் ஜீரணிக்க முடியாமல் போனாலும், அவன் மீதான காதலில் அவளின் அனைத்து காயங்களும் அடித்துச் செல்லப் படுகின்றன.

பாகிஸ்தான் சிறை... அதலிருந்து தப்பிக்கும் காட்சிகள் – திருடன் போலிஸ் விளையாட்டு இதை விடவும் சுவாரஸ்யமாக இருக்கக்கூடும் என்று எண்ண வைத்தன.

கார்த்தியின் இல்லத் திருமணம்... அலைபாயுதே படத்தின் யாரோ யாரோடி பாட்டுக்கு நம்மை அனுமதியின்றியே இட்டுச் செல்கின்றது.(மணமகள் நிறைமாத கர்ப்பிணி... திருமணத்தன்றே பிள்ளைப் பேரு... மனைவி பிள்ளைகள் மீது அடக்குமுறையை பிரயோகிக்கும் தந்தை எப்படி இதற்கு ஒப்புக் கொண்டார்? – இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடாதுன்னு ரொம்ப ட்ரை பண்ணேன்... பட் கேட்காம இருக்க முடியல மொமன்ட்.)

பனிமலைச் சிகரங்களில் ரோஜாவின் சாயல்; பாகிஸ்தான் சிறைகளிலும் கொஞ்சம் ரோஜாவின் சாயல்... ஆனால் ரோஜா படத்தின் காட்சிகள் ஏற்படுத்திய தாக்கம் இதில் புள்ளி ஒரு சதவிகிதம் கூட ஏற்படவில்லை என்பதையும் சொல்லியே ஆக வேண்டும்.

கிளைமேக்ஸ் நாயகன் நாயகி சந்திப்பு... ரெட்க்ராஸ் மெடிகல் கேம்ப்... மணி சார்! அலைபாயுதே ஷாலினியும் மேடியும் நினைவுகளில் கண்ணாமூச்சி ஆடினார்கள். 

சிதற விடப்படும் சொற்களுக்கு ஒரு அர்த்தமெனில் சிதற விடாத சொற்களுக்கு ஓராயிரம் அர்த்தங்கள்; கண்கள் பேசும் பாஷைகளுக்கோ கணக்கிலடங்கா அர்த்தங்கள். அவைகளைத் திரையில் தரிசிப்பது சிலிர்ப்பான அனுபவம். மணிரத்னம் படங்களில் நான் மிக மிக விரும்புவது அவ்வகை சிலிர்ப்புகளையே! அந்த வகையில் இப்படம் என்னை சிறிதும் ஏமாற்ற வில்லை. அழகியே பாடல்... வெகு அழகு! இரண்டரை மணிநேரம் காதல் கோலோச்சும் உலகில் சஞ்சரிக்கச் செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் மகா கலைஞர்களே!

22 comments:

  1. Wow..sema vimarsanam Hameeda Madam...kalakitteenga..

    ReplyDelete
  2. விமர்சனம் அருமையாக எழுதி இருக்கீங்க ஷாஹி ....நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஸ்ரீமதி...

      Delete
  3. Superb review ma kandipa intha padathai paarkanum nan 😊😊

    ReplyDelete
    Replies
    1. அவசியம் பாருங்க மதி... என்னுடைய rw உட்பட எந்த rw ம் மைண்ட்ல ஏத்திக்காம பாசிடிவ் மைன்ட்செட்டோட பாருங்க... நன்றி பதிவுக்கு...

      Delete
  4. Thulliyamana alasal, Shahi. The way you have commented with such insight - padathin sila kaatchigalai neril paartha oru unarvu. Thanks for the review !

    -Siva

    ReplyDelete
    Replies
    1. அருமையான பாராட்டுக்கு மிக்க நன்றி சிவா...

      Delete
  5. சூப்பர் விமர்சனம் ஷாஹி.தேங்க்ஸ்... இந்த படத்தில் உங்களுக்கு பிடிச்சதையும், பிடிக்காததையும், உங்களால் அச்செப்ட் பண்ணமுடிந்ததையும், பண்ணமுடியாததையும் எங்களுடன் பகிர்த்துக்கொண்டதற்க்கு!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க ராஜி... நன்றி பா... நீங்க படம் பார்த்தாச்சா பா? பார்த்துவிட்டு உங்களுடைய கருத்துக்களையும் பகிர்ந்துகோங்க ராஜி...

      Delete
    2. இல்லை ஷாஹி இன்னும் பார்கலை. நாமெல்லாம் படம் பார்க்கறது... குறிஞ்சிப்பூவை பார்க்கறதை போல!

      Delete
    3. அதை சொல்லுங்க பா... அதிசயமா படம் பார்த்து நான் உணர்ந்ததை rw போட்டுட்டு நான் படுற பாடு இருக்கே... அய்யய்யோ...

      Delete
  6. Hameedha,
    தற்போதைய மணிரத்னம் படங்களில் எனக்கு அவ்வளவு பிடித்தம் இல்லை. உங்கள் விமர்சனம் படித்த பின்பு கண்டிப்பாக பார்க்கும் ஆசை போய் விட்டது. உங்கள் விமர்சனம் அவ்வளவு அழகாக இருந்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தை என்னால் இனி பார்க்க முடியாது. நீங்கள் சொன்ன அத்தனை அழகியலும் கண்டிப்பாக நான் படத்தில் எதிர்பார்த்தால் ஏமாந்து போவேன் என்று நிச்சயமாக நம்புகிறேன் (என் பார்வையில்). படத்தை பார்த்து வராத மனநிறைவு உங்கள் விமர்சனத்திலேயே கிடைத்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. Hi barani,
      விமர்சனம் அழகா இருக்குன்னு சொன்னதுக்கு மிக்க நன்றி. ஹ ஹ ஹா... என்ன இப்படி சொல்லிட்டீங்க... நான் சொன்ன அழகியல்கள் நிச்சயமா படத்துல இருக்கு... இன்று வெளிவந்த குமுதம் மற்றும் விகடன் வார இதழ்களின் விமர்சனம் என்னுடைய விமர்சனத்துடன் பெரும்பாலும் ஒத்துப் போகிறது. அதனால் நான் எதுவும் அதிகமாக எழுதிவிடவில்லை என்ற மனநிறைவு எனக்குக் கிட்டியது. பதிவுக்கு மிக்க நன்றி மா.

      Delete
    2. கண்டிப்பாக அந்த அழகியல் இருக்கும், ஆனால் என் பார்வையில் அதை உணர்வது கஷ்டம். ஒன்னு என்னாடா என் கண்ணுக்கு இவங்க சொன்ன எதுமே புலப்படலையேன்னு , நம்ம கண்ணு தான் நொல்லையோன்னு தோணும் :) , இல்ல இந்த காட்சிக்கா இவங்க இந்தளவு ரசிச்சு எழுதுனாங்கன்னு தோணும். ரசித்து உணர்ந்து அதை மற்றவர்களுக்கு இன்னும் அழகாக பகிர்வது கூட கைதேர்ந்தவர்களுக்கே வரும் கலை.

      Delete
    3. ha ha haa... thankyou barani...

      Delete
  7. Woooww semmaaa mam super review mam ....... Ungalala mattum than vimarsanathulaye kadai solla mudiyum (enakku terinchi) film parriya unga parvai alaku sooooo nice & thanks mam

    ReplyDelete
    Replies
    1. அழகான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி srjee...

      Delete