Friday, February 10, 2017

அடுத்த கதையில் இடம்பெறவிருக்கும் கவிதை...



சரம் சரமாய் வார்த்தைகள் கோர்த்து
மரபுக்கவிதை புதுக்கவிதை ஹைக்கூ என்று
தரம்பிரித்து வகைப்படுத்தி
நாளொரு முத்தமும்
பொழுதொரு பரிசும் வழங்கி
புதிது புதிதாய் யோசித்து
நவீனமாய் அசத்துவது
காதலாக இருக்கலாம்...
ஒரு வார்த்தையும் உச்சரிக்காமல்
ஒற்றைப் பார்வைக்கும் வழியில்லாமல்
தொலைத்தொடர்புகளும் செயலிழந்திருக்க
இருமனங்களின் உரையாடல் மட்டும்
இரவிரவாய்த் தொடர்ந்திருக்க...
சில உன்னத உறவுகளுக்கு
அகராதியில் இடமில்லை... விளக்கமுமில்லை
என்ற நிதர்சனம்
இருமனங்களும் அறியும்!

20 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அழகான வரிகள்

    ReplyDelete
  3. Replies
    1. நன்றி நாகா கணேசன். எங்கே பா கதை எழுதுறது? நியூஸ் சேனல் பார்கவே பொழுது சரியா இருக்கு... விரைவில் அறிவிப்பு போட முயற்சிக்கிறேன் பா...

      Delete
  4. ஏற்கனவே சூப்பரா இருக்க கவிதைய கதை ஓட்டத்தோடு பிடிச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். அந்த சுகமான அனுபவத்த மிஸ் பண்ணிட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. ஹாய் பரணி,
      ஏதோ ஆர்வக் கோளாறுல போஸ்ட் பண்ணிட்டேன் பா... இன்னும் கொஞ்சம் improvise பண்ணி கதைக்கு தகுந்த விதத்தில் நீங்கள் சுகமாய் ரசிக்க ஆவன செய்யப்படும். பாராட்டுக்கு மிக்க நன்றி மா...

      Delete
  5. Hi Shahi,
    Kalakkureenga. Kavitha arumai. Adhu kodukkum message arumai. adhan saaram arumai. Korthirukkum sorkkal arumai, adhan sugam arumai, suvai arumai.
    Whetting our appetites. Ippo kadhaiyil endha idathil yen indha kavitha varugiradhu endra kelviyai killapi, aarvathai thoondi vittachu !!

    Thanks for the lovely lines, Shahi. Looking forward to more such works from you. BEST WISHES, Always !

    -Siva

    ReplyDelete
  6. Hi Siva,
    நலமா இருக்கீங்களா? மிக மிக சந்தோஷம் உங்களை மீண்டும் இங்கே சந்தித்ததில். கவிதை உங்களுக்குப் பிடித்தது மிக மிக மகிழ்ச்சி. கதை இப்போது தான் ஆரம்ப கட்டத்தில் இருக்கு... விரைவாக முடித்து உங்களை எல்லாம் மீண்டும் சந்திக்க வேண்டும் என்று மிக ஆவலாக இருக்கிறேன். பாராட்டுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி சிவா.

    ReplyDelete
  7. Semma sahi mam super kavithai .... Story name sari sollungalen....
    Mam

    ReplyDelete