பேசும் மொழியிலெல்லாம் மூன்றாவது பதிவுக்கான கருத்துக்களை கீழே உள்ள comments ஐ கிளிக் செய்து பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Books give soul to the universe... Wings to the mind... Flight to the Imagination... And Life to everything...
Friday, April 21, 2017
Monday, April 17, 2017
பேசும் மொழியிலெல்லாம் - 2 (Comments)
தோழிகளே! உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கு நான் மிக முக்கியத்துவம் அளிக்கிறேன் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நீங்கள் அளிக்கும் கருத்துக்கள் எப்போதும் இத்தளத்தில் இருப்பதற்காகவே இந்த ஏற்பாடு. கதையின் இரண்டாவது பதிவுக்கான கருத்துக்களை கீழே உள்ள comments ஐ கிளிக் செய்து பதிவு செய்யுங்கள். கதைத் திரி நீக்கப்பட்டாலும் உங்களுடைய கருத்துக்கள் என்றென்றும் இத்தளத்தை அலங்கரிக்கட்டும். இங்கே கருத்துக்களைப் பகிரவிருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு என்னுடைய அட்வான்ஸ் நன்றிகள்.
அன்புடன்
ஹமீதா.
அன்புடன்
ஹமீதா.
Friday, April 14, 2017
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
மலர்ந்திருக்கும் இப்புதிய வருடம்... அனைவரது வாழ்விலும் எல்லா வளங்களையும் இன்பங்களையும் மகிழ்ச்சியையும் முன்னேற்றத்தையும் அமைதியையும் வழங்கிட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
Monday, April 10, 2017
காற்று வெளியிடை... ஒரு சாதாரண மணிரத்னம்/ஏ.ஆர். ரஹ்மான் விசிறியின் பார்வையில்...
காற்றுவெளியிடை...
கார்த்தி
அதிதி ராவ் ஹைதரி
முற்றிலும் முரண்பட்ட இரு வலிமையான குணாதிசயங்கள் காதல் எனும்
மையப்புள்ளியில் சந்தித்தால்... அக்காதல் மிக வலிமையானதாகவே இருக்கும்... கூடவே
வலி மிகுந்ததாகவும் இருக்கும்.
முரட்டுத்தனமும் அதிவேகமும் நிரம்பிய ஏர்போர்ஸ் பைட்டர் ப்ளேன்
பைலட்...
சாவின் விளிம்பு நிலையிலிருந்து போராடும் உயிர்களையும்
கருணையுடனும்; விவேகத்துடனும்; மனவலிமையுடனும் அணுகி உயிர்காக்கும் மருத்துவர்...
பக்குவப்பட்ட மனங்களின் காதல் என்பது ஒரு நிகழ்வு... அது
எக்கணத்தில் நிகழும் என்று கணிக்க முயல்வது அவசியமற்றது.
பாகிஸ்தான் சிறையில்... பிடிபட்ட இந்திய ராணுவ வீரனின்
நினைவலைகளில் காட்சிகளின் விரிவு அதி அற்புதம்.
ஸ்ரீநகரின் மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் நிலையில்
நாயகனின் பார்வையில் பிம்பமாய் பதிகிறாள் நாயகி. அதன் பிறகான ஏர்போர்ஸ் டே
சந்திப்பிலும்... பைட்டர் ப்ளேன் ரைடிலும்... லே மிலிட்டரிபேஸ் காட்சிகளிலும் சாதாரண
இந்திய சினிமா ரசிகனுக்கு வாய்ப்பது உச்சபச்ச மணிரத்னம்/ஏ.ஆர் ரஹ்மான்/ரவிவர்மா
மேஜிக்.
காதலை வாய் வார்த்தையாக பரிமாறிக் கொள்வதற்கு முன்பாகவே
பார்வையால் உணர்த்திக் கொள்ளும் காட்சிகள் கவிதை. நாயகியின் கண்களும் முகமும்
ஆயிரம் கதைகள் அல்ல... கவிதைகள் பேசுகின்றன. அவைகளை சிந்தாமல் சிதறாமல் விஷுவலாக
கேப்ச்சர் செய்து அப்படியே ரசிகனின் பார்வைக்கு... மனத்துக்கு… முழு விருந்தாகப் படைத்திருப்பது நிச்சயம் மணிரத்னம் எனும்
மகா கலைஞனின் திறமை. சிம்ப்ளி விஷுவல் ட்ரீட். அந்த பைட்டர் ப்ளேன்
காட்சி... சிம்ப்ளி அட்வென்ச்சரஸ். பனிமலைச் சிகரங்களை காதலனுடன் வலம் வந்த
உணர்வு... கிரேட்!
கதாபாத்திரங்களின் அனைத்து உணர்வுகளையும் ஆழமாக... விவரணையாக....
விளக்கமாகச் சொல்வது ஒரு வகை என்றால்... போகிற போக்கில் சிறு சிறு வசனங்கள்
காட்சிகள் வாயிலாக சொல்லிவிட்டு, பார்வையாளனிடமே கதாபாத்திரங்களின் தன்மைகளை
அலசும் பொறுப்பை விட்டு விடுவது மற்றொரு வகை. இப்படம் இரண்டாம் வகையைச் சார்ந்தது.
நாயகனின் ஆணாதிக்க மனோபாவம், அவனுடைய ரத்தத்தில் கலந்தது என்பதை
விளக்கும் அவனுடனைய தந்தையுடனான காட்சிகள் இதற்கு உதாரணம்.
வருடக்கணக்கான திருமண வாழ்விற்குப் பிறகும்... ஒரு சிறு
பிணக்கில்... கட்டிய மனைவியை வெளியேறச் சொல்லும் தந்தை...
நண்பர்கள் முன்னிலையில் காதலியை ஆதிக்க
தொனியில் பேசிவிட்டு, அவளிடம் மன்னிப்பு கேட்டு அதே நண்பர்களிடையே அவளை அழைத்து
வரும் மைந்தன்... – உணர்வுப் பூர்வமாய் காதல் கொண்ட ஆணாதிக்க ஆணுக்கும், காதல்
என்றால் என்னவென்றே தெரியாத ஆணாதிக்க ஆணுக்குமான வேறுபாடு!
‘இது சரி வராது’ என்பது இருவருக்கும் புரிகிறது; தெரிகிறது.
அதையும் மிஞ்சி காதல் கோலோச்சும் இடங்கள் கொள்ளை அழகு.
திருமணத்துக்கு முன்பான அவர்களது இணைவை அந்த கொள்ளை கொள்ளும்
காதலும்; அவனுடைய நிச்சயமற்ற பணிச்சூழலும்; கதைக்களமும்; மேல்தட்டுக் கலாச்சாரமும்
நியாயப்படுத்தி விடுவதால், அந்த அலசலுக்குள்ளும் நம்மை நுழைய விடாமல் அந்த அதிதீவிரக் காதல் மட்டுமே நமது சிந்தனைகளை
முழுவதுமாக கவர்ந்து கொள்கிறது.
‘ஒரு நேரம் மகாராணி மாதிரி நடத்துற... இன்னொரு நேரம் கால்ல
போட்டு மிதிக்கிற...’ என்ற நாயகியின் வசனம் நாயகனின் குணத்தை அக்குவேறு ஆணிவேறாகப்
பிரித்துப் போடுகிறது. காலில் மிதிபடும் தருணங்களை மகாராணியாய் உணரும் தருணங்கள்,
தூக்கி விழுங்கி விழுங்கி விடுவதை நாயகியின் கண்களின் பாவங்கள் வாயிலாக உணரலாம்!
அவளை மணம் புரிய அவன் தயாராகவே இருக்கிறான்... இன்னும்
சொல்லப்போனால் தவிப்புடனே இருக்கிறான்! ஆனால் தனது சந்ததிகளைப் பற்றி யோசிக்கும்
வேளைகளில் தடுமாற்றம் கொள்கிறான். தன்னைப் போல... தனது தந்தையைப் போல... ஒரு
ஆணாதிக்க சந்ததி இச்சமூகத்துக்குத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுக்கிறான்.
அப்படியான நிலைப்பாட்டை எடுக்கும் வேளையிலும் அவளை இழக்க அவனது
காதல் மனத்துக்கு மனமில்லாமலே இருக்கிறது. தனது காதலை கௌரவித்துக்கொள்ளவே அவள்
அவனைப் பிரிகிறாள். அவனின் சிற்சில குணங்களை அவளால் ஜீரணிக்க முடியாமல் போனாலும்,
அவன் மீதான காதலில் அவளின் அனைத்து காயங்களும் அடித்துச் செல்லப் படுகின்றன.
பாகிஸ்தான் சிறை... அதலிருந்து தப்பிக்கும் காட்சிகள் –
திருடன் போலிஸ் விளையாட்டு இதை விடவும் சுவாரஸ்யமாக இருக்கக்கூடும் என்று எண்ண
வைத்தன.
கார்த்தியின் இல்லத் திருமணம்... அலைபாயுதே படத்தின் யாரோ
யாரோடி பாட்டுக்கு நம்மை அனுமதியின்றியே இட்டுச் செல்கின்றது.(மணமகள் நிறைமாத
கர்ப்பிணி... திருமணத்தன்றே பிள்ளைப் பேரு... மனைவி பிள்ளைகள் மீது அடக்குமுறையை
பிரயோகிக்கும் தந்தை எப்படி இதற்கு ஒப்புக் கொண்டார்? – இந்தக் கேள்வியைக் கேட்கக்
கூடாதுன்னு ரொம்ப ட்ரை பண்ணேன்... பட் கேட்காம இருக்க முடியல மொமன்ட்.)
பனிமலைச் சிகரங்களில் ரோஜாவின் சாயல்; பாகிஸ்தான் சிறைகளிலும்
கொஞ்சம் ரோஜாவின் சாயல்... ஆனால் ரோஜா படத்தின் காட்சிகள் ஏற்படுத்திய தாக்கம்
இதில் புள்ளி ஒரு சதவிகிதம் கூட ஏற்படவில்லை என்பதையும் சொல்லியே ஆக வேண்டும்.
கிளைமேக்ஸ் நாயகன் நாயகி சந்திப்பு... ரெட்க்ராஸ் மெடிகல்
கேம்ப்... மணி சார்! அலைபாயுதே ஷாலினியும் மேடியும் நினைவுகளில் கண்ணாமூச்சி
ஆடினார்கள்.
சிதற விடப்படும் சொற்களுக்கு ஒரு அர்த்தமெனில் சிதற விடாத
சொற்களுக்கு ஓராயிரம் அர்த்தங்கள்; கண்கள் பேசும் பாஷைகளுக்கோ கணக்கிலடங்கா
அர்த்தங்கள். அவைகளைத் திரையில் தரிசிப்பது சிலிர்ப்பான அனுபவம். மணிரத்னம்
படங்களில் நான் மிக மிக விரும்புவது அவ்வகை சிலிர்ப்புகளையே! அந்த வகையில் இப்படம்
என்னை சிறிதும் ஏமாற்ற வில்லை. அழகியே பாடல்... வெகு அழகு! இரண்டரை மணிநேரம் காதல்
கோலோச்சும் உலகில் சஞ்சரிக்கச் செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் மகா கலைஞர்களே!
Friday, April 7, 2017
SS வெளியீடுகள்
SS வெளியீடுகள்:
1.உன் இதயம்... என் வசத்தில் - விஷ்ணுப்ரியா
பக்கங்கள்: 272
விலை: ரூ. 150
2. காதல் கிரிக்கெட் - விஷ்ணுப்ரியா
பக்கங்கள்: 376
விலை : ரூ. 200
3. யாரைக்கேட்டது இதயம்? - ஹமீதா
பக்கங்கள்: 352
விலை : ரூ. 180
புத்தகங்கள் வாங்க :
SS பப்ளிகேஷன்ஸ்
No. 21, Thirumalaiyappan St,
Flat no. 4, Ruby Palace,
Purasawalkam,
Chennai – 600 007
Ph: 044 26480200
Whats App : 91 8072318750
ஆன்லைனில்:
உடுமலை.காம் udumalai.com
மெரீனாபுக்ஸ் MarinaBooks.com
http://www.marinabooks.com/detailed?id=5%201926
http://www.marinabooks.com/detailed?id=5%201927
http://www.marinabooks.com/detailed?id=4%209726
வீகேன் புக்ஸ் Wecanshopping.com - தமிழ் இணைய புத்தக அங்காடி
http://www.wecanshopping.com/…/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-…
http://www.wecanshopping.com/…/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%…
http://www.wecanshopping.com/…/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%…
Canada:
Murugan book stores Murugan Book Store
Karthik book stall, Mylapore
New book lands (Narmada pathipagam)
Vijaya Pathippagam, Coimbatore
Vijaya Pathippagam, Tirupur
Vijaya Pathipagam, Karur
Vijaya Pathippagam, Pollachi
Indhu Book house, Erode
Devathi Book Stall, Trichy
Malligai Book Centre, Madurai
Adityan Book shop, T. Nagar
Ravi Book shop, T. Nagar
Moon Book shop, Pondy Bazaar
Merlin Publication, T. Nagar
Om Muruga Book shop, Salem
Chitra devi college Book shop, Thirunelveli
AVS Book shop, Nagercoil
Eagle Book shop, Tuticorin
Maya Books, Theni
இலங்கை வாசகர்களுக்கு ஒரு நற்செய்தி: விரைவில் எமது வெளியீடுகள் இலங்கையின் முன்னனி நிறுவனமான பூபாலசிங்கம் புத்தக அங்காடியில் கிடைக்கப் பெரும் என்பதையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
என்றும் அன்புடன்
பதிப்பகத்தார்.
Subscribe to:
Posts (Atom)